டிசம்பர் 2023 விற்பனையில் ஹூண்டாயை முந்தியது டாடா… அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது பிராண்டாக மாறியது
published on ஜனவரி 05, 2024 11:19 am by ansh
- 110 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதியும் மஹிந்திராவும் முந்தைய மாதத்தில் இருந்த அதே இடத்தில் தொடர்கின்றன.
டிசம்பர் 2023 மாதத்துக்கான கார் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகிவிட்டன. நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது விற்பனை சற்று குறைந்துள்ளது. அக்டோபர் பண்டிகை காலத்துக்குப் பிறகு, விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்தது. மேலும் ஆண்டு இறுதி என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், இந்த முறை சிறந்த செயல்திறன் கொண்ட பிராண்டுகளின் நிலைகளில் மாற்றத்தை பார்க்க முடிந்தது. விற்பனையில் டாடா நிறுவனம் ஹூண்டாய் -யை முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்தது. டிசம்பர் 2023 மாத விற்பனை புள்ளிவிவரங்களின் விரிவான விவரம் இங்கே.
பிராண்ட் |
டிசம்பர் 2023 |
நவம்பர் 2023 |
MoM வளர்ச்சி (%) |
டிசம்பர் 2022 |
ஆண்டு வளர்ச்சி (%) |
மாருதி சுஸூகி |
1,04,778 |
1,34,158 |
-21.9 |
1,12,010 |
-6.5 |
டாடா |
43,471 |
46,070 |
-5.6 |
40,045 |
8.6 |
ஹூண்டாய் |
42,750 |
49,451 |
-13.6 |
38,831 |
10.1 |
மஹிந்திரா |
35,171 |
39,981 |
-12 |
28,333 |
24.1 |
டொயோட்டா |
21,372 |
16,924 |
26.3 |
10,421 |
105.1 |
கியா |
12,536 |
22,762 |
-44.9 |
15,184 |
-17.4 |
ஹோண்டா |
7.902 |
8,730 |
-9.5 |
7,062 |
11.9 |
ஃபோக்ஸ்வேகன் |
4,930 |
3,095 |
59.3 |
4,709 |
4.7 |
ஸ்கோடா |
4,670 |
3,783 |
23.4 |
4,789 |
-2.5 |
எம்ஜி |
4,400 |
4,154 |
5.9 |
3,899 |
12.8 |
மொத்தம் |
2,81,980 |
3,29,108 |
2,65,283 |
முக்கியமான விவரங்கள்
-
மாருதி சுஸூகி -யை பொறுத்தவரையில் மாதாந்திர (MoM) மற்றும் ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனை இரண்டிலும் அதன் விற்பனை குறைந்துள்ளது. 2023 டிசம்பரில் 1 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், MoM மற்றும் YoY புள்ளிவிவரங்கள் முறையே 22 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் குறைந்துள்ளன.
-
குறிப்பிட்டு கூறும் வகையில், டாடா டிசம்பர் 2023 -ல் ஹூண்டாயை முந்தியது மற்றும் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது. 43,000 யூனிட்டுகளுக்கு மேலான விற்பனையுடன், அதன் ஆண்டு புள்ளிவிவரங்கள் 8.6 சதவிகிதம் வாங்கியுள்ளன, ஆனால் MoM 5.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளன
-
ஹூண்டாய் 2023 டிசம்பரில் 42,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து மூன்றாவது இடத்திற்குச் சரிந்தது. அதன் YOY புள்ளிவிவரங்கள் 10 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தாலும், MoM விற்பனையில் 13.5 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி இருந்தது.
-
மஹிந்திரா நவம்பர் 2023 இல் இருந்த அதே நிலையில் இருந்தது மற்றும் MoM விற்பனை 12 சதவிகிதம் வீழ்ச்சியைடைந்தது. டிசம்பர் 2023 இல் கார் தயாரிப்பாளர் 35,000 யூனிட்களை விற்றார்.
மேலும் படிக்க: Toyota Innova Crysta, Innova Hycross மற்றும் Urban Cruiser Hyryder கார்களின் விலை ரூ.42,000 வரை உயர்ந்துள்ளது
-
டொயோட்டா டிசம்பர் 2023 -ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது மற்றும் விற்பனை எண்ணிக்கையில் கியாவை முந்தியது. டொயோட்டா மாதாந்திர விற்பனையில் 26 சதவீத வளர்ச்சியைடைந்தது. மற்றும் அதன் ஆண்டு விற்பனையும் இரட்டிப்பானது.
-
கியா 2023 டிசம்பரில் மாதாந்திர விற்பனையில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் சரிந்தது. மற்றும் அதன் வருடாந்திர விற்பனையும் 17 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 10,000 யூனிட் விற்பனைக் எண்ணிக்கையை தாண்டிய கடைசி பிராண்ட் இதுவாகும்.
இந்தியாவில் வரவிருக்கும் கார்கள்
-
ஹோண்டா சுமார் 8,000 யூனிட் விற்பனையுடன் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அதன் MoM விற்பனை புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் குறைந்துள்ளன, ஆனால் YOY விற்பனை கிட்டத்தட்ட 12 சதவிகிதம் உயர்ந்தன.
-
ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய இரண்டும் இந்த மாதத்தில் முறையே 4,930 யூனிட்கள் மற்றும் 4.670 யூனிட்கள் விற்பனையுடன் ஒரு படி உயர்ந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் MoM மற்றும் YoY ஆகிய இரண்டின் விற்பனையிலும் உயர்ந்தது, அதே நேரத்தில் ஸ்கோடா -வின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை மட்டுமே அதிகரித்தது.
-
கடைசியாக, எம்ஜி 2023 டிசம்பரில் அதன் MoM மற்றும் YoY புள்ளிவிவரங்கள் இரண்டும் அதிகரித்துள்ள போதிலும், பத்தாவது இடத்திற்கு சென்றது.
0 out of 0 found this helpful