2015 பிக் பாய்ஸ் டாய்ஸ் எக்ஸ்போவில் போல்ட், ஜென்X நானோ மற்றும் சஃபாரி ஸ்டார்ம் ஆகியவற்றை டாடா காட்சிக்கு வைக்கிறது
published on அக்டோபர் 12, 2015 12:37 pm by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மூன்று நாட்கள் நடைபெற உள்ள 2015 பிக் பாய்ஸ் டாய்ஸ் எக்ஸ்போ இன்று (நேற்றுமுன்தினம்) தொடங்கியது. மோட்டார் சைக்கிள்கள் முதல் கார்கள் வரையிலான வாகன உலகத்திற்கு தொடர்பான எல்லா பொருட்களையும் காட்சிக்கு வைக்கும் ஒரு நிகழ்ச்சியான இது, வாகன பிரியர்களுக்கான ஒரு ஷான்ங்கிரி லா (விசித்திரமான, மகிழ்ச்சியை அளிக்க கூடிய) ஆகும். உலகமெங்கும் உள்ள தயாரிப்பாளர்களும், தங்களின் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி, பிக் பாய்ஸ் டாய்ஸ் எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கண்காட்சிகளில் ஒன்றாக, டாடா மோட்டார்ஸ் நமக்கு அளித்துள்ளது. சஃபாரி ஸ்டார்ம் SUV, போல்ட் மற்றும் நானோ ஆகிய ஹேட்ச்பேக்களின் கிட்களுடன் கூடிய பதிப்பை, டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. மேற்கூறிய மூன்று கார்களுக்கும் அளவிற்கு அதிகமான உதிரிப் பாகங்கள் காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அறிமுகத்திற்கு முன் டாடா போல்ட் சிறப்பு பதிப்பின் உளவுப்படங்களில் சிக்கியது
சஃபாரி ஸ்டார்ம் SUV-வில், ஃபேக் லெம்ப்களை ஏறுமுகமாக கொண்ட முன்பக்க பம்பர், கார்மின் அளிக்கும் பர்சனல் நேவிகேஷன் சாதனம், ரூஃப்-மவுண்டேட் ஃபேக் லெம்ப்கள், ஹூட் ஸ்கூப், அலாய்களுடன் கூடிய மண் பகுதிகளுக்கு ஏற்ற டயர்கள், DRL-கள், ஹூட்-டிஃப்ளக்டர், கிரோம் கார்னிஷ், டெயில்கேட்-மவுண்டேட் சைக்கிள் கெரியர், லேசர் ஷேடுகள், டோர்-வீசர், கார் ஏவினிங், குளிர்ப்பான்/ வெப்பமாக்கி, சீட் ஆர்கனைசர், சீட் கவர்கள், சீட் ஹேங்கர் மற்றும் ரப்பர் மேட்கள் ஆகியவை காணப்படுகிறது. மேற்கூறிய சேர்ப்பிகளின் (ஏடு-ஆன்) உதவியோடு, இந்த SUV ஒரு தனித்தன்மை கொண்ட கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற வாகனமாக தோற்றமளிக்கிறது.
இதையும் படியுங்கள்: 2015 செப்டம்பரில் 45,215 யூனிட்களை டாடா மோட்டார்ஸ் விற்றது
இந்நிறுவனத்தின் ஹேட்ச்பேக்களின் தலைமையை ஏற்கும் தயாரிப்பான டாடா போல்ட், அதன் ரேலி பதிப்பை காட்சிக்கு வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சக்தி வாய்ந்த ஹேட்ச்பேக்களில் ஒன்றாக திகழும் போல்ட், தற்போது அதன் ரேலி பதிப்பை பெற்று, போல்ட்டின் வலிமையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த காரில் அலாய் வீல்கள், ரேலி டயர்கள், 5 பாயிண்ட் சேஃப்ட்டி ஹார்னஸ் மற்றும் ரேலி லிவரி ஆகிய அம்சங்கள் காணப்படுகிறது.
மேலும் படியுங்கள்: பஜாஜ் RE60 உடன் போட்டியிட டாடா மேஜிக் இரிக் தயார்
கடைசியாக, அதே நேரத்தில் உறுதியாக மட்டமானது அல்ல என்பது போல, அதிக ஸ்டைலாக அமைந்த ஜென்X நானோ பதிப்பு. இந்த காரில் ஒரு பாடி கிட் உடன் சன்ஃரூப், ஸ்பாய்லர், அலாய் வீல்கள், கிராஃபிஸ், ரிமோட் ஹேட்ச் ரிலீஸ், லேதர் சீட்களை மூடியுள்ள குஷின்கள், டோர் விசர் மற்றும் விரிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன. பெருகி வரும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை சமாளிக்க தக்கதாக, டாடா மோட்டார்ஸ் மூலம் களமிறக்கப்படும் இது, அந்நிறுவனத்திற்கு அதன் நிலையிலேயே சிறப்பாக நிலைநிற்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படியுங்கள்: கணேஷ் சதுர்த்திக்கு, 1,100 கார்களை டாடா மோட்டார்ஸ் அளித்தது.