டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதவராக லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் செயப்பட்டார்
published on நவ 03, 2015 06:11 pm by raunak
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் சொந்தக்காரரான டாடா மோட்டார்ஸ் , நான்கு முறை FIFA அமைப்பின் வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸியை உலக அளவில் டாடா மோட்டார்ஸின் ப்ரேன்ட் அம்பாசடராக ( தூதர் ) நியமித்துள்ளது. இந்த முழுதும் இந்தியாவில் வளர்ந்த டாடா மோடார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன ப்ரேண்ட்களின் விளம்பரங்களில் நீண்ட காலத்திற்கு லியோனல் மெஸ்ஸியை பயன்படுத்த உள்ளது.
லியோனல் மெஸ்ஸி, நான்கு - முறை FIFA தேர்ந்தெடுத்த உலக அளவில் சிறந்த வீரர், இந்த புதிய பொறுப்பு பற்றி பேசுகையில் , “ நமஸ்தே இந்தியா. ஒரு பெரிய இந்திய ப்ரேண்டுடன் ஆன புதிய உறவு என்னை மிகவும் உற்சாகமாக உணர வைப்பதுடன் டாடா மோட்டார்ஸ் குடும்பத்தில் ஒரு உறுப்பினராவதை எண்ணி மிகவும் குதூகலமடைய செய்துள்ளது. மேலும் இந்தியாவைப் பற்றியும் அதன் பல்வேறு சிறப்புக்களைப் பற்றியும் நான் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஒரு முறை அர்ஜென்டினா கால் பந்தாட்ட அணியுடன் இணைந்து இந்தியாவிற்கு வந்துள்ளேன். மீண்டும் அந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் உலக அளவில் பிரபலமான ஒரு நன்கு வளர்ச்சி அடைந்த இந்திய நிறுவனமாகும். நாம் நம்மை முழுமையாக நம்பி கடுமையாக முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் முதல் விளம்பர கேம்பைன் அமையும் . நாங்கள் இணைந்து பலரை இன்ஸ்பயர் செய்வோம்" என்று கூறினார்.
மெஸ்ஸியுடனான இந்த புதிய ஒப்பந்தம் பற்றி , டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிகப் பிரிவின் தலைவர், திரு. மாயன்க் பாரேக் கருத்து தெரிவிக்கையில், “ மெஸ்ஸியை எங்கள் டாடா குழுமத்தின் பயணத்தில் இணைத்து கொவதில் பேரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் ஒரு பன்முக திறமை கொண்ட வீரர் மட்டுமல்ல , இன்றைய பெரும்பான்மையான இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குபவர். அவர் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு மாயாஜால காட்சி போல் பிரமிப்பாக இருக்கும். அவரது விட முயற்சியையும், உறுதியையும் அவர் விளையாடுகையில் நன்கு உணர முடிவது மட்டுமின்றி நம்மை வெகுவாக பாதிக்கும் ( இன்ஸ்பயர் செய்யும் ). அவர் தன் திறமையின் மீது முழு நம்பிக்கை கொண்ட , நம்பகத்தன்மை மிக்க, தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு உறுதியுடன் போராடும் ஒரு நிஜமான வெற்றியாளர். அவரின் இந்த குணாதிசயங்கள் தான் எங்களது இந்த விளம்பர கேம்பைனுடைய " நம்மை எது உள்ளிருந்து ஊக்கப்படுதுகிறதோ அது தான் நம்மை மாபெரும் வெற்றியாளராக மாற்றும் " தாரக மந்திரத்திற்கு மிகவும் தகுதியானவரான அவரை தேர்வு செய்ய வைத்தது. உலகம் முழுமைக்கும் எங்களது ப்ரேன்ட் தயாரிப்புக்களை நாங்கள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள இந்த கால கட்டத்தில், எல்லைகளை கடந்து மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய தனித்துவமான திறமையை கொண்ட மெஸ்ஸி எங்கள் ப்ரேண்டுகளை உலக சந்தைக்கு கொண்டு செல்ல மிகவும் சரியான மனிதர் " என்று கூறினார்.
விரைவில் அறிமுகமாக உள்ள டாடாவின் தயாரிப்புக்கள் பற்றி பேசுகையில், கைட் சிப்ளிங் ஹேட்ச் வகை மற்றும் கச்சிதமான செடான் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் வரும் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும் அடுத்த வருட துவக்கத்தில் 2015 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஹெக்ஸா க்ராஸ்ஓவர் பிரிவு கார்களும், அதே சமயத்தில் நெக்ஸான் காம்பேக்ட் SUV வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். நிச்சயம் இந்த புதிய வாகனங்களை மார்கெடிங் செய்வதற்கு மெஸ்ஸி பயன்படுத்தப்படுவார் என்று அறிய முடிகிறது. மேலும் உலகம் முழுதும் பரவி உள்ள இந்த கால்பந்தாட்ட வீரரின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம், சர்வதேச சந்தையில் டாடா நிறுவன தயாரிப்புக்கள் வலுவாக காலூன்ற பேருதவியாக இருக்கும் என்ற உறுதியாக சொல்லலாம்.
இதையும் படியுங்கள் : டாடா நிறுவனம் போல்ட், செஸ்ட், நானோ, சபாரி மற்றும் இண்டிகோ கார்களின் பண்டிகைகால சிறப்பு எடிஷன்களை அறிமுகப்படுத்தியது.
0 out of 0 found this helpful