• English
  • Login / Register

விளம்பர தூதராக லையனல் மெர்ஸி-யை நியமிக்கலாமா?: டாடா மோட்டார்ஸ் ஆலோசனை

published on அக்டோபர் 27, 2015 04:35 pm by cardekho

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சென்னை:

இந்த பண்டிகை காலத்தில் தனது கைட் ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்கால சிறந்த கால்பந்தாட்ட வீரரான லையனல் மெர்ஸியை, இதற்கு பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. இதற்காக இந்த இந்திய வாகன தயாரிப்பு நிறுவனம், அர்ஜென்டினாவை சேர்ந்த ஃபார்வேடு வீரருடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டதாகவும், விளம்பர படப்பிடிப்பிற்காக சில கைட் கார்கள் ஸ்பெயின் நாட்டிற்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கைட் உடன், மெர்ஸி உட்பட தனது எல்லா துருப்பு சீட்டுகளையும் களமிறக்க உள்ள டாடா நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த காரின் பெயரை பிரபலப்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.

படித்து பாருங்கள்: போல்ட், செஸ்ட், நானோ, சஃபாரி மற்றும் இன்டிகொ ஆகியவற்றின் கொண்டாட்ட பதிப்பை டாடா அறிமுகம் செய்கிறது

விஸ்ட்டாவின் பிளாட்பாமை அடிப்படையாக கொண்ட கைட் கார், செஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவை போல உருவாக்கப்பட்டாலும், இந்த புதிய ஹேட்ச்பேக் முற்றிலும் ஒரு புதுமையான வடிவமைப்பை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாடா கைட்டில், புதிய 1.0-லிட்டர் 3-சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2-லிட்டர் ரிவிட்ரோன் பெட்ரோல் என்ஜின் ஆகியவற்றை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர, தரமான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸான AMT யூனிட்டையும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience