மின்சார வாகனங்களை ஊக்குவிக்க டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் மஹிந்த்ரா நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன
modified on டிசம்பர் 23, 2015 03:12 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்திய வாகன சந்தையில், முன்னணி இடத்தில் உள்ள மும்மூர்த்திகளான மாருதி சுசுகி, மஹிந்த்ரா & மஹிந்த்ரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மின்சார வாகன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய, முதல் முறையாக கைகோர்த்துள்ளனர் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவையான பாகங்களைத் தயாரிக்க இந்த முதலீடு உபயோகப்படுத்தப்படும். எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகன உற்பத்திக்கான ஆரம்ப நிலை முதலீடு அதிகமாக உள்ளதால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சி மிகவும் மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை தகர்த்தெரிய, இந்த மூன்று மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து முதலீடு செய்ய முன்வந்துள்ளதால், இந்த துறைக்கு இது நிச்சயமாக உற்சாகம் தருவதாகவும், ஊக்கம் தருவதாகவும் இருக்கிறது.
சுற்று சூழலை பாதிக்காத வாகனங்களை உபயோகத்திற்கு கொண்டு வருவதற்கான கூடுதல் முயற்சிகளை முழு முனைப்புடன் இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டறிவிப்பு போற்றுதலுக்குரியதாகும். ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்கவும், வேகமாக அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதை ஊக்குவிக்கவும், FAME (ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுஃபாக்சரிங்க் ஆஃப் ஹைபிரிட் அண்ட் எலக்ட்ரிக் வேகிக்லெஸ்) என்ற திட்டத்தை கடந்த 2015 ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. நேஷனல் எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷன் பிளான் (NEMMP) என்ற இந்திய அரசின் திட்டத்தின் முதல் கட்டம், இந்த FAME திட்டத்தில் உள்ளது. FAME திட்டத்தின் மூலம், மின்சார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவித்து, சுற்றுசூழல் மாசுபாட்டை குறைப்பத்தோடு மட்டுமல்லாமல், மேலும் பல நன்மைகளைத் தரும் என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த கார் தயாரிப்பாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஊக்குவிக்கும் விதத்தில், அரசு மானியங்களை வழங்குகிறது. சமீபத்தில், ‘FAME இந்தியா எக்கோ-ட்ரைவ்’ என்னும் நிகழ்ச்சியை கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ், இந்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சிக்கு மக்களிடமும், கார் தயாரிப்பாளர்களிடமும் இருந்து பேராதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மஹிந்த்ரா ரேவாவின் தலைவரான அர்விந்த் மாத்யூ, இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்து மின்சார வாகனங்களுக்கான பாகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு பொதுவான தரத்தை ஏற்படுத்தவும், அவற்றை தயாரிப்பதற்கான செலவுகளைக் குறைக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். இதன் மூலம், இந்த வாகனங்களின் விற்பனை விலை குறைவதால், வாங்குபவர்களின் செலவு குறைக்கப்படும் என்று உறுதி கூறுகிறார். இரண்டு மாதங்களில், வேரிட்டோ சேடான் மற்றும் மினி-டிரக் மாக்ஸிமோ வாகனங்களின் மின்சார வடிவம் தயாராகி, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்தார். தற்போது அதிக பயன்பாட்டில் உள்ள ஓலா போன்ற கேப் நிறுவனங்களுடன் இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்களது வாகனங்களை, அவர்களது நிறுவனங்களில் இயங்கும் பலவகை வாகனங்களோடு இணைத்துக் கொள்ளுமாறு இந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. NCR பகுதியில் உள்ள அனைத்து டாக்ஸிகளும் தங்களது வாகனங்களை CNG அமைப்பிற்கு, 2016 மார்ச் 31 –ஆம் தேதிக்குள் மாற்றி விடவேண்டும் என்று, அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தத்தை நாம் இப்போது நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் வாசிக்க