ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) அதிகமாக செலவு செய்யும் முதல் 50 நிறுவனங்களில் டாடா இடம்பிடித்துள்ளது .
published on டிசம்பர் 22, 2015 11:52 am by akshit
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ( R&D) அதிகமான முதலீட்டை செய்யும் உலகின் முதல் 50 நிறுவனங்களின் வரிசையில் டாடா இடம் பிடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 104 வது இடத்தில இருந்த டாடா விறுவிறு என்று முன்னேறி 49 ஆவது இடத்தை அடைந்துள்ளது ஆனால் பெரும்பான்மையான முதலீடு இந்நிறுவனத்தின் இங்கிலாந்து துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன R&D பிரிவிற்காகவே செய்யப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிற்கான வருடாந்திர தொழிற்துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) முதலீடு சம்மந்தமாக ஐரோப்பிய கமிஷன் தயாரித்துள்ள புள்ளி விவரங்களின் படி , ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பளர்களான வோல்க்ஸ்வேகன் நிறுவனம் முதல் இடத்தையும் ,அதனைத் தொடர்ந்து சேம்சங், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் நோவார்டிஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களையும் பிடித்துள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து நிறுவனங்களும் தங்களது முந்தைய இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், கூகுள் 9ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கும் ,பைசர் கடந்த வருடத்திய 15ஆவது இடத்திலிருந்து 5 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்திற்கும் வந்துள்ளன . இவை தவிர , ரோஷ், ஜான்சன் &ஜான்சன் மற்றும் டொயோடா நிறுவனங்கள் முறையே 7வது , 8வது மற்றும் 9 வது இடங்களைப் பிடித்திருப்பதாக ஐரோப்பிய கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இந்த பட்டியலிலுள்ள டாப் 2500 நிறுவனங்களில், அமெரிக்காவைச் சேர்ந்த 829 நிறுவனங்களும் , ஜப்பானை சேர்ந்த 360 நிறுவனங்களும் , 301 சீன நிறுவனங்களும் , 114 தைவான் நிறுவனங்களும் , 80 சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனங்களும் , கனடா மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தலா 27 நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன . இந்த பட்டியலில் 26 நிறுவனங்களுடன் இந்தியா 15 ஆவது இடத்தில உள்ளது. இவைகளைத் தவிர , இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்களான டாக்டர் . ரெட்டிஸ் லபோரடரிஸ் 404வது இடத்திலும் , M&M 451 வது இடத்திலும் ,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 540 வது இடத்திலும் , லுபின் 624 வது இடத்திலும் , சன் பார்மா 669 வது இடத்திலும் , சிப்லா 831 வது இடத்திலும் , இன்போசிஸ் 884 வது இடத்திலும் உள்ளன.
மேலும் வாசிக்க