டாடா மோட்டார்ஸ் மெகா சர்வீஸ் கேம்ப் ஒன்றை அறிவித்துள்ளது - நவம்பர் 20 முதல் 26 ஆம் தேதி வரை
published on நவ 17, 2015 06:42 pm by raunak
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாடு தழுவிய ஒரு வார காலத்திற்கான சர்வீஸ் கேம்ப் ஒன்றை' மெகா சர்வீஸ் கேம்ப் ' என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கேம்ப் மொத்தம் 287 நகரங்களில் நவம்பர் 20 – 26 ஆம் தேதி வரை அனைத்து டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களிலும் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களிலும் ( TASC ) நடத்தப்படும். இந்த சேவையை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் கை கோர்த்து நாடு முழுதும் சுமார் 1000 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த சேவையை வழங்க உள்ளது. இந்த ஆண்டில் இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது மெகா சர்வீஸ் கேம்ப் ஆகும்.
இந்த சர்வீஸ் கேம்பில் வாகனங்களின் வெளிப்புறம் முழுதும் கழுவி தரப் படுவதோடு மட்டுமின்றி வாகனத்திற்கு ஒரு முழுமையான ஹெல்த் செக்கப் செய்யப்படும். டாடா மோட்டார்ஸ் இந்த கேம்ப்புக்கென்று 16+ சப்ளையர்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்த சப்ளையர்கள் என்ஜின் ஆயில், லூப்ரிகன்ட் மற்றும் இன்ன பிற சிறப்பு சேவைகளின் மேல் 10% வரை தள்ளுபடி தர தயாராக உள்ளனர்.
இவைகளைத் தவிர தன்னுடைய ஒரிஜினல் உதிரி பாகங்கள் மற்றும் லேபர் சார்ஜ் மீது 20% வரை தள்ளுபடி வழங்குகிறது டாடா நிறுவனம். வேல்யூ கேர் என்ற வருடாந்திர பராமரிப்பு திட்டத்தின் ( கோல்ட் AMC ) மீது சிறப்பு சலுகையாக ரூ. 699 தள்ளுபடியும் வழங்குகிறது. புதிய பேட்டரி மீதும் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி பாலிசி மீதும் ரூ. 1000 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை மட்டுமா ? டாடா கார்களின் எக்ஸ்சேன்ஜ் திட்டத்தின் மீது சலுகை , சாலயோர உதவிகள் திட்டத்தில் சலுகை , புதுப்பிக்கப்படும் காப்பீட்டின் மீது சிறப்பு சலுகை என்று ஏராளமான சலுகைகள் இந்த மெகா கேம்ப் நிகழ்வில் கொட்டிக் கிடக்கிறது. எப்போதும் போல கவர்ச்சிகரமான எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் கிடைக்கிறது.
தவற விடாதீர்கள் : டாடா கைட்டின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் வெளியிடப்பட்டது
மாயன்க் பாரேக், தலைவர் , பயணிகள் வாகன வணிகப் பிரிவு, டாடா மோட்டார்ஸ் , “ வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் நாங்கள் பெருமையுடன் இந்த மூன்றாவது மெகா சர்வீஸ் கேம்பைபெருமையுடன் நடத்த உள்ளோம். எங்களுடைய சேவைகளை வழங்கும் ஆற்றலை பறை சாற்றும் விதமாகவும் , முந்தைய இரண்டு சர்வீஸ் நிகழ்வு பெற்ற மாபெரும் வரவேற்பையும் மனதில் கொண்டு இந்த மூன்றாவது கேம்பை நடத்த உள்ளோம். எண்கள் பயணத்தில் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ள நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயரிய சர்வீஸ் அனுபவத்தை தர விரும்புகிறோம். இந்த திசையில் நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரமாக JD பவர் CSI 2015 ல் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதை சொல்லலாம் என்று கூறினார்".
இதையும் படியுங்கள் :
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதவராக லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் செயப்பட்டார்