சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா கைட் படங்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டது ; தொலைக்காட்சி விளம்பர படத்தில் லியோனல் மெஸ்ஸி

அபிஜித் ஆல் நவ 04, 2015 02:06 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
17 Views

ஜெய்பூர் :

டாடா மோட்டார்ஸ், தனது அறிமுகமாக உள்ள ஹேட்ச்பேக் காரான கைட் கார்களின் விளம்பரப் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் இந்நிறுவனத்தின் உலக தூதராக ( க்ளோபல் அம்பாசெடர் ) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள உலக புகழ் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார். இந்த விளம்பரம் உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டு உலக அரங்கில் இந்நிறுவனத்தின் இமேஜ் - ஐ உயர்த்துவதற்காக டாடா நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள #மேட்ஆப்க்ரேட் (madeofgreat) கேம்பைனின் ஒரு அங்கமாகும்.

கைட் கார்கள் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகிய இரண்டு வகையான உடலமைப்புடன் வெளியாக உள்ளது. செலீரியோ, செவர்லே பீட், வேகன்ஆர் போன்ற கார்களுடன் இந்த கார்கள் போட்டியிடும். செடான் பிரிவு கைட் கார்களைப் பொறுத்தவரை எந்த போட்டியும் இல்லை என்றே சொல்லவேண்டும். இந்த பிரிவில் உள்ள ஒரே காராக கைட் செடான் கார்கள் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்டுள்ள டீஸரில் ஆரஞ்சு வண்ண கைட் கார்கள் தோன்றுகின்றன. மூக்கு பகுதி , ஹெட்லேம்ப் க்ளஸ்டர், டெயில் விளக்கு க்ளஸ்டர், பின்புற கதவின் கைப்பிடி போன்றவைகளை இந்த டீசர் படத்தில் பார்க்கமுடிகிறது.

இதையும் படியுங்கள் : லியோனல் மெஸ்ஸியை க்ளோபல் ப்ரேன்ட் அம்பாசெடராக டாடா ஒப்பந்தம் செய்துள்ளது

முகப்பு விளக்கு கொத்து ( ஹெட்லேம்ப் க்ளஸ்டர் ) ட்வின் -பாட் யுனிட் என்று சொல்லப்படும் தனித்தனி ஹெட் லேம்ப் மற்றும் இன்டிகேடர்கள் பொருத்தப்பட்ட அமைப்பாக உள்ளது. டாடா வாகனங்களில் எப்போதும் உள்ளது போன்ற க்ரில் பொருத்தப்பட்டுள்ள போதும், இந்த கைட் காரின் க்ரில் அதிக வளைவுகளுடன் உள்ளது. டெயில் விளக்கு அமைப்பு இதுவரை டாடா வாகனங்களில் உள்ளதில் இருந்து மாறுபட்டு டெயில் விளக்கின் தெளிவான கண்ணாடி பகுதியில் சிகப்பு நிற ஸ்டாப் விளக்குகள் பொருதப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் உள்ள டாடா நிறுவனத்தின் டிஸைன் அரங்கில் ஒரு உலக தயாரிப்பாக இந்த கார் உருவாகியுள்ளது. இந்த கார் எதிர்வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முன்னதாகவே டீஸர் வெளியாகி உள்ளதைப் பார்க்கும் போது இந்த கார்கள் இன்னும் மூன்று மாதங்கள் ஆட்டோ எக்ஸ்போ வரை காத்திருப்பில் வைக்கப்படாமல் விரைவிலேயே அறிமுகமாகும் என்று நினைக்க தோன்றுகிறது.

இந்த காரின் முதல் படங்கள் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது என்று சொல்லலாம். டாடா கவர்சிகரமான விலையையே இந்த கார்களுக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அடக்க விலை ரூ.3.5 லட்சத்தில் இருந்து 5.5 லட்சங்கள் வரை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

டாடா மோட்டார்ஸ் டீஸரில் லியோனல் மெஸ்ஸியை பாருங்கள்

இதையும் பாருங்கள்:

Share via

Write your Comment on Tata Kite Hatch

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.7.89 - 14.40 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை