டாடா ஹாரியர் ஆட்டோமேடிக் விரைவில் வெளியாகிறதா?
published on ஆகஸ்ட் 29, 2019 04:53 pm by dinesh for டாடா ஹெரியர் 2019-2023
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதில் ஹூண்டாயின் 6-வேக முறுக்குவிசை மாற்றி அலகு (6-speed torque converter unit) பொருத்தப்பட்டிருக்கும்.
-
பிஎஸ் 6 தரத்தில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஹாரியர் ஆட்டோமேடிக் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காம்பஸ் மற்றும் ஹெக்டாருக்கு நிகராக 170 PS சக்தியை வெளிப்படுத்தும், இது தற்போதைய பதிப்பைவிட 30 PS கூடுதல் சக்தி கொண்டது ஆகும்.
-
மேனுவல் மாடலை விட ரூ 1.5 லட்சம் கூடுதல் விலையை எதிர்பார்க்கலாம்.
-
ஹாரியர் ஆட்டோமேடிக் 2019 இறுதிக்குள் அல்லது 2020 இன் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
-
7-இருக்கை ஹாரியரில் ஆட்டோமேடிக் விருப்பத்தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரியரில் ஆட்டோமேடிக் வகையை அறிமுகப்படுத்துவதில் டாடா மும்முரமாக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். இந்த வசதியுடன் சோதனை செய்யப்பட்ட வாகனம் ஒன்று நம் கண்ணில் பட்டுள்ளது. ஹாரியர் ஆட்டோமேடிக் சோதனை ஓட்டத்தின் போது பார்வையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கூடிய சோதனை ஓட்ட வாகனம் ஒன்று ஜனவரி 2019ல் ஹாரியர் அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல காலம் முன்பே சோதனை செய்யப்படும்போது நம் பார்வையில் சிக்கியிருக்கிறது.
டாட்டா ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை ஹூண்டாயிடமிருந்து வாங்கப்போவதாக தெரிவித்துள்ளது. அது ஹூண்டாய் டுக்சானில் காணப்படும் 6-வேக தானியங்கு முறுக்கு விசை மாற்றி அலகு ஆகும்.
டாடா பிஎஸ் 6 டீசல் எஞ்சினுடன் மட்டுமே ஹாரியரில் தானியங்கி கியர்பாக்ஸை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஹாரியர் 140 PS மற்றும் 350 Nm உச்ச முறுக்குவிசையை (Torque) உருவாக்கக்கூடிய ஃபியட்டியமிருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயங்கும், . ஜீப் காம்பஸ் மற்றும் ஹெக்டரிலும் இதே எஞ்சின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஆனால் சில உயர்நுண் மாற்றங்களின் காரணமாக 170 PS சக்தி மற்றும் 350 Nm அதிகபட்ச முறுக்குவிசையை எஞ்சின் வெளிப்படுத்தும். தனது போட்டியாளர்களான ஹெக்டார் மற்றும் காம்பஸை போன்றே 170 PS சக்தியை ஹாரியர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திறக்கக்கூடிய மேற்கூரையுடன் டாடா ஹாரியர் ஆட்டோமேடிக் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட எஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன், ஹாரியரில் மின்னியங்கு திறக்கக்கூடிய மேற்கூரை பொருத்தப்பட வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் ஹாரியரில் திறக்கக்கூடிய மேற்கூரை வசதியை சந்தையில் விற்பனைக்கு பின்னான இணைப்பாக டாட்டா அறிமுகப்படுத்தியது.
டாடா ஹாரியர் ஆட்டோமேடிக்கின் விலை மேனுவல் வகையை விட சுமார் ரூ .1.5 லட்சம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விலையில் பிஎஸ் 6 டீசல் எஞ்சினின் அறிமுகம் கணக்கில் கொள்ளப்ப்படவில்லை என தெரிகிறது. தற்போது, ஹாரியர் ரூ.12.99 லட்சத்திலிருந்து ரூ.16.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது (எக்ஸ் ஷோரூம் டெல்லி)
வரவிருக்கும் சில வாரங்களில், ஹாரியரின் முழு கருப்பு வண்ண பதிப்பையும் டாட்டா அறிமுகப்படுத்தும். இதில் கறுப்பு வண்ண உராய்வு தட்டு (Skid plate) மற்றும் அலாயுடன் (Alloy) வெளிப்புறம் முழுக்க கருப்பு வண்ணத்தில் அமைந்துள்ளதோடு உட்புற வேலைப்பாடுகள் முழுக்க கருப்பு வண்ணத்தில் அமைந்திருக்கும்.
0 out of 0 found this helpful