Tata Curvv EV ரியர்ல்-வேர்ல்டு சார்ஜிங் சோதனை
published on அக்டோபர் 14, 2024 02:39 pm by ansh for டாடா கர்வ் இவி
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
எங்களிடம் டாடா கர்வ் -ன் 55 kWh லாங் ரேஞ்ச் வேரியன்ட் உள்ளது. இது DC 70 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் -கை சப்போர்ட் செய்கிறது.
சமீபத்தில் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபேவான டாடா கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 585 கி.மீ வரை ARAI கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது. 55 kWh பேட்டரி பேக்குடன் வரும் இந்த EV -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டை சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. மேலும் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 100 சதவீதம் வரை சார்ஜ் செய்தோம். டாடா 70 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி, 40 நிமிடங்களில் கர்வ் EV 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என்று கூறுகிறது. எனவே அதைச் சோதனைக்கு உட்படுத்தி இதன் கிளைம்டு சார்ஜிங் நேரங்களுக்கு இது எவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்பதைப் பார்க்க முடிவு செய்தோம்:
சார்ஜிங் லெவல் |
சார்ஜிங் விகிதம் |
எடுத்துக் கொண்ட நேரம் |
0-5 சதவீதம் |
65 கி.வா |
2 நிமிடங்கள் |
5-10 சதவீதம் |
62 கி.வா |
2 நிமிடங்கள் |
10-15 சதவீதம் |
56 கி.வா |
4 நிமிடங்கள் |
15-20 சதவீதம் |
56 கி.வா |
2 நிமிடங்கள் |
20-25 சதவீதம் |
56 கி.வா |
3 நிமிடங்கள் |
25-30 சதவீதம் |
58 கி.வா |
3 நிமிடங்கள் |
30-35 சதவீதம் |
59 கி.வா |
3 நிமிடங்கள் |
35-40 சதவீதம் |
47 கி.வா |
3 நிமிடங்கள் |
40-45 சதவீதம் |
47 கி.வா |
4 நிமிடங்கள் |
45-50 சதவீதம் |
47 கி.வா |
3 நிமிடங்கள் |
50-55 சதவீதம் |
47 கி.வா |
4 நிமிடங்கள் |
55-60 சதவீதம் |
47 கி.வா |
3 நிமிடங்கள் |
60-65 சதவீதம் |
47 கி.வா |
4 நிமிடங்கள் |
65-70 சதவீதம் |
47 கி.வா |
3 நிமிடங்கள் |
70-75 சதவீதம் |
48 கி.வா |
4 நிமிடங்கள் |
75-80 சதவீதம் |
48 கி.வா |
4 நிமிடங்கள் |
80-85 சதவீதம் |
48 கி.வா |
3 நிமிடங்கள் |
85-90 சதவீதம் |
24 கி.வா |
6 நிமிடங்கள் |
90-95 சதவீதம் |
18 கி.வா |
9 நிமிடங்கள் |
95-100 சதவீதம் |
8 கி.வா |
19 நிமிடங்கள் |
எடுத்துக் கொண்ட மொத்த நேரம் |
1 மணி 28 நிமிடங்கள் |
முக்கிய விவரங்கள்
-
கர்வ் EV ஆனது 70 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் அதிகபட்ச சார்ஜ் 65 kW ஆகும் அதுவும் ஆரம்ப சில நிமிடங்களில்.
-
0 முதல் 100 சதவிகிதம் வரை செல்ல எடுக்கப்பட்ட மொத்த நேரம் 1 மணிநேரம் 28 நிமிடங்கள் ஆகும். அதில் 10 முதல் 80 சதவிகிதம் நேரம் 47 நிமிடங்கள் ஆகும்.
மேலும் படிக்க: இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது
-
டாடாவால் கூறப்படும் 10-80 சதவீத எண்ணிக்கை 40 நிமிடங்கள் ஆகும், மேலும் நிஜ உலக சூழ்நிலையில் அந்த சார்ஜ் நிலையை அடைய கர்வ் EV இன்னும் 7 நிமிடங்கள் ஆகும்.
-
10 முதல் 35 சதவீதம் வரை, பேட்டரி 56 கிலோவாட் முதல் 59 கிலோவாட் வரை சார்ஜ் ஆனது. மேலும் 35 முதல் 85 சதவீதம் வரை அது சுமார் 48 கிலோவாட்டாக குறைந்தது.
-
இங்கிருந்து அடுத்த 5 சதவீதத்திற்கு சார்ஜிங் விகிதம் பாதியாக குறைந்தது. பின்னர் அது 20 கிலோவாட்டிற்கு கீழே 90 சதவீதம் வரை குறைந்தது.
-
கடந்த 5 சதவீதத்தில் 8 kW முதல் 9 kW வரையிலான சார்ஜிங் உடன் கர்வ் EV சார்ஜ் செய்யப்பட்டது.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
பேட்டரி பேக் |
45 kWh |
55 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் பவர் |
150 PS |
167 PS |
எலக்ட்ரிக் மோட்டார் டார்க் |
215 Nm |
215 Nm |
ARAI- கிளைம்டு ரேஞ்ச் |
502 கி.மீ |
585 கி.மீ |
கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் முன் சக்கரங்களை இயக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி பேக் அதிக சக்திவாய்ந்த மோட்டாரை கொண்டுள்ளது. மேலும் இது அதிக கிளைம்டு ரேஞ்சையும் கொண்டுள்ளது.
குறிப்பு:
-
EV -யை சார்ஜ் செய்யும் போது, வானிலை, வெப்பநிலை மற்றும் பேட்டரி ஆரோக்கியம் உட்பட பல விஷயங்கள் சார்ஜிங் நேரத்தை பாதிக்கலாம்.
-
பேட்டரி பேக் 80 சதவிகிதம் சார்ஜ் அடைந்த பிறகு அது கொஞ்சம் வெப்பமடையத் தொடங்குகிறது. பேட்டரி சேதமடைவதைத் தடுக்க சார்ஜிங் வேகம் குறைக்கப்படுகிறது. ஆகவே 80 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கிறது.
விலை & போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV -யின் விலை ரூ. 17.49 லட்சம் முதல் ரூ. 21.99 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. மேலும் இது MG ZS EV -க்கு நேரடியாக போட்டியிடுகிறது. தவிர டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 -க்கு அதிக பிரீமியம் மாற்றாகவும் இது இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா கர்வ் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful