5 படங்களின் மூலம் Tata Curvv EV-யின் வெளிப்புற டிசைனை பற்றி தெரிந்து கொள்ளலாம்
published on ஜூலை 22, 2024 06:11 pm by shreyash for டாடா கர்வ் இவி
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
கனெக்டட் LED DRL-கள் உட்பட, தற்போதுள்ள டாடா நெக்ஸான் EV-இலிருந்து பல டிசைன் குறிப்புகளை டாடா கர்வ் EV பெறுகிறது.
புரொடக்ஷன்-ஸ்பெக் டாடா கர்வ் EV காரின் வெளிப்புறத்தை காட்டும் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்தியாவில் முதன்முதலில் வெகுஜன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபே இதுவாகும், மேலும் இது Acti.ev தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது டாடா பன்ச் EV-க்கு அடிப்படையாக உள்ளது. இந்த 5 படங்களில் டாடா கர்வ் EV -யின் வெளிப்புறத்தை பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம்.
முன்பக்கம்
கர்வ் EV-யின் முன்பகுதி டாடா நெக்ஸான் EV யை போலவே இருக்கிறது. LED ஃபாக் லைட்களுடன் முழுமையான LED ஹெட்லைட் செட்-அப் உடன் இணைந்து, சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் மனதை ஈர்க்கும் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களைக் கொண்ட கனெக்டட் LED DRL-களை கொண்டுள்ளது. ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் பம்பர் டிசைன் நெக்ஸான் EV-இன் தனித்துவமான பாணியை பிரதிபலிக்கிறது.
பக்கவாட்டு தோற்றம்
பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது கர்வ் EV அதன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை (ICE) நினைவூட்டும் ஒரு நேர்த்தியான கூபே ரூஃப்லைனை கொண்டுள்ளது. இது ஃப்ளஷ்-ஸ்டைல் டோர் ஹேண்டில்களை அறிமுகப்படுத்துகிறது. இது டாடா கார்களில் முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் EV என்பதை காட்டும் வகையில் ஏரோடைனமிக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை கொண்டுள்ளது. கூடுதலாக வீல் ஆர்ச்களை சுற்றியுள்ள க்ளாஸ் பிளாக் கிளாடிங் அதன் அதிநவீன ப்ரொபைலை மேம்படுத்துகின்றன.
கர்வ் EV காரின் ORVM-கள் (ஔட்சைட் ரியர் வியூ மிரர்ஸ்) கருப்பு நிறத்தில் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் ORVM-களின் கீழ் பகுதியில் ஒரு எம்போஸ் உள்ளது. இது மேம்பட்ட பார்வை மற்றும் பாதுகாப்பிற்காக 360 டிகிரி கேமரா செட்-அப் சேர்க்கப்பட்டிருப்பதை இது குறிக்கிறது.
பின்பக்கம்
பின்புறத்தில் டாடா கர்வ் EV ஆனது கனெக்டட் LED டெயில் லைட்கள் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் மனதை ஈர்க்கும் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களுடன் காட்சிப்படுத்துகிறது. பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட நேர்த்தியான, இன்டெகிரேட்டட் ரூஃப் ஸ்பாய்லர் கூடுதல் அழகைச் சேர்க்கிறது. பின்பக்க பம்பரில் கருப்பு நிற ட்ரீட்மென்ட் உள்ளது. கீழே ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட் மூலம் நிரப்பப்பட்டு. அதன் அட்டகாசமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை மேம்படுத்துகிறது.
எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் கிளைம் செய்யப்படும் ரேஞ்ச்
கர்வ் EV-க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த மாடல் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் 500 கி.மீ ரேஞ்சை வழங்கக்கூடும். இது நெக்ஸான் EV -யை போலவே, கர்வ் EV ஆனது V2L (வெஹிகிள்-டு-லோட்) மற்றும் V2V (வெஹிகிள்-டு-வெஹிகிள்) செயல்பாடுகளை உள்ளடக்கியிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV-யின் விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV உடன் போட்டியிடும். கூடுதலாக, இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV-க்கு ஒரு பிரீமியம் மாற்றாகக் கருதப்படுகிறது, இது ஒரு எலக்ட்ரிக் காரின் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் செயல்திறனைத் விரும்புவர்களுக்கு உயர்தர ஆப்ஷனை வழங்குகிறது.
டாடா கர்வ் பற்றிய கூடுதல் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful