அறிமுகத்திற்கு முன்பே டாடா போல்ட் சிறப்பு பதிப்பு, உளவுப்படத்தில் சிக்கியது
published on செப் 28, 2015 07:47 pm by cardekho for டாடா போல்ட்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: இனிவரும் பண்டிகை காலத்தில் சிறந்த விற்பனையை பெறும் வகையில், தற்போது நிலுவையில் உள்ள தனது தயாரிப்புகளின் சிறப்பு பதிப்பு வகைகளின் மீது டாடா மோட்டார் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த கார் டாடா போல்ட்டின் கொண்டாடத்திற்கான சிறப்பு பதிப்பு கிட் ஆகும். அந்த காரின் ஒப்புயர்வற்ற அறிமுகத்திற்கு முன்பாகவே, உளவுப்படங்களில் சிக்கியுள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்கான சிறப்பு பதிப்பின் விற்பனை, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிப்பின் கிட்டில் பக்கவாட்டு பகுதி, மேற்கூரை மற்றும் பேனட் ஆகிய பகுதிகளில் டெக்கால்களை கொண்டிருக்கும். மேலும் ஒளிரும் தன்மை கொண்ட சில் பிளேட்டுகள், மேற்கூரை மீது ஏறி செல்லும் அமைப்பைக் கொண்ட பின்புற ஸ்பாய்லர் மற்றும் “கொண்டாட்ட பதிப்பு” பேட்ஜ் ஆகியவை டீலர்களின் அளவிலான இணைப்பி என்பதால், இவை எல்லா வகையிலும் காணப்படலாம். இதுவே இந்த கிட் கொண்டுள்ள ஒரு முக்கிய சிறப்பம்சம் ஆகும். இந்த கூடுதல் கிட் முழுக்க முழுக்க காரின் அழகியலுக்கு மட்டுமே பயன்படுவதாகும்.
வாடிக்கையாளர்களால் இந்த கிட், தனியே வாங்கப்பட்டால், அதன் விலை ரூ.20,000-மும், இந்த சிறப்பு பதிப்பு மாடலுடன் சேர்த்து வாங்கப்பட்டால், அதற்கு ரூ.13,000-மும் செலவாகிறது.
என்ஜின் சிறப்பம்சங்களை பொறுத்த வரை, எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2-லிட்டர் நான்கு-சிலிண்டர் ரிவோட்ரோன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலம் 90 PS ஆற்றலும், 140 NM முடுக்குவிசையையும் அளிக்கிறது. டீசல் என்ஜினான 1.3-லிட்டர் குவான்ராஜெட் மூலம் 75 PS ஆற்றலும், 190 Nm முடுக்குவிசையையும் பெறலாம். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு என்ஜின்களும், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு செயல்படுகிறது.
செஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய இரு கார்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவில் எட்டாத நிலையில், இந்த சிறப்பு பதிப்பு வெளியிடப்படுகிறது. இந்த போல்ட் சிறப்பு பதிப்பு மூலம் அந்நிறுவனம், அதன் போட்டியாளர்களுக்கு சிறந்த போட்டியை அளிக்க எதிர்பார்க்கிறது.
0 out of 0 found this helpful