சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Acti.EV முழுமையான விவரம்: 600 கி.மீ ரேஞ்ச், AWD, பல்வேறு அளவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது

sonny ஆல் ஜனவரி 08, 2024 12:04 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்த புதிய இயங்குதளம் மூலமாக டாடா பன்ச் EV முதல் டாடா ஹாரியர் EV வரை அனைத்தையும் கட்டமைக்க முடியும்

இந்தியாவில் பிரபலமான EV -களுக்கான முன்னணி பிராண்டான டாடா நிறுவனம் அதன் புதிய தலைமுறை EV தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இது Acti.EV என்று அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பல்வேறு அளவுகளில் இருக்கும் டாடா -வின் அனைத்து சந்தை EV கார்களையும் இந்த தளம் மூலமாக கட்டமைக்க முடியும். அதைப் பற்றிய முழுமையான விவரங்கள் இங்கே:

பெயருக்கான விளக்கம்

டாடா அதன் பிளாட்ஃபார்ம் பெயர்கள் சுருக்கமாக பெயரிட்டு வருகின்றது, இதுவும் அதிலிருந்து வேறுபட்டதல்ல. Acti.EV என்பது Advanced Connected Tech Intelligent Electric Vehicle architecture என்பதன் சுருக்கமாகும். இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Gen2 டாடா EV இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும், மேலும் இது ஒரு பியூர் EV கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது: Tata Punch EV -க்கான முன்பதிவு தொடக்கம்! காரின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன

தற்போதைய டாடா EV இயங்குதளங்களில் இருந்து இது எப்படி வேறுபடுகின்றது ?

டாடா EV -களின் வரிசை இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் மின்சார பவர்டிரெய்ன்கள் இரண்டையும் கட்டமைக்கும் வகையிலான தளத்தை இப்போது பயன்படுத்துகிறது. இது இரண்டையும் வைத்திருக்க வேண்டும் என்பதால், புதிய EV -களுக்கான அமைப்பு மற்றும் பேக்கேஜிங் ஆப்ஷன்களில் சில சிக்கல்கள் உள்ளன.

ஆனால் Acti.EV தளம் ஒரு பியூர் EV தளமாகும், இது டாடா பொறியாளர்களுக்கு இட வசதி மற்றும் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்கான அனைத்து கூறுகளையும் தொகுக்க சுதந்திரம் அளிக்கிறது. இது வாகன அளவு, பேட்டரி பேக் அளவு, டிரைவ் டிரெய்ன் வகைகள் மற்றும் சார்ஜிங் திறன் ஆகியவற்றில் நெகிழ்வுத்தன்மையையும் அனுமதிக்கிறது. இது ஒரு பியூர் EV கட்டமைப்பு தளம் என்பதால், அனைத்து Acti.EV அடிப்படையிலான மாடல்களும் அவற்றின் தற்போதைய ICE மாடல்களில் இருந்து தனித்தனியாக தயாரிக்கப்படும்.

தொழில்நுட்ப திறன்கள்

Acti.EV பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான EV -கள் 600 கிமீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும் என்று டாடா தெரிவித்துள்ளது. இந்த EV -கள் 11kW AC சார்ஜிங் மற்றும் 150kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த EV களுக்கான செயல்திறன் திறன்கள் பற்றி எங்களிடம் எந்த விவரங்களும் இல்லை என்றாலும், புதிய ஜென் ஆர்க்கிடெக்சர் ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD), ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் பவர் ட்ரெயின்களை பயன்படுத்தும் என டாடா தெரிவித்துள்ளது.

பேட்டரி பேக் அளவுகளுக்கான சரியான புள்ளிவிவரங்களை டாடா குறிப்பிடவில்லை என்றாலும், பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கலாம், மேலும் இது பல்வேறு கார் அளவுகளை ஆதரிக்கலாம். Acti.EV இயங்குதளமானது, வரவிருக்கும் டாடா EV -கள், அதிக தூரம் செல்லக்கூடிய மற்றும் சந்தையில் மிகவும் மாறுபட்ட ஆப்ஷன்களில் கிடைப்பவை -யாக மாற உதவும்.

பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள சில பாதுகாப்பான வெகுஜன-சந்தை கார்களுடன் (NCAP ஆல் சோதிக்கப்பட்டது), இந்த புதிய தூய EV ஆர்க்கிடெக்சர் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளை இலக்காகக் கொண்ட வலுவான விபத்து கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. இது ஏற்கனவே லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இணக்கமாக இருக்கும் மற்றும் லெவல் 2+ அம்சங்களுக்கும் தயாராக இருகின்றது.

மேலும், இந்த பிளாட்ஃபார்மிற்கான சேஸ் வடிவமைப்பும் இந்தியாவை மையமாகக் கொண்டது மற்றும் போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்தியாவின் சாலை நிலைமைகளுக்கு ஏற்ற ரேம்ப்-ஓவர் கோணங்களைக் கொண்ட மாடல்களை உருவாக்க உதவும்.

Acti.EV அடிப்படையிலான EVகள்

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய தலைமுறை இயங்குதளம் அனைத்து எதிர்கால டாடா EV களையும் கட்டமைக்க பயன்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டின் மத்தியில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் EV -கள் இங்கே:

புதிய பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான வெளியாகும் முதல் காராக மேலே உள்ள பட்டியலில் உள்ள பன்ச் EV இருக்கும். இது ஜனவரி 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். பன்ச் மற்றும் ஹாரியரின் ICE பதிப்புகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. அதன்படி, டாடா கர்வ்வ் ஒரு ICE பதிப்பையும் பின்னர் பெறலாம்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை