• English
  • Login / Register

மாருதி இன்விக்டோவின் வேரியன்ட் வாரியான அம்சங்கள் இங்கே

published on ஜூலை 13, 2023 03:42 pm by rohit for மாருதி இன்விக்டோ

  • 53 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி இன்விக்டோ இரண்டு விதமான வேரியன்ட்களில் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது: ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ்.

Maruti Invicto

டொயோட்டா இன்னோவா ஹகிராஸ் -லிருந்து பெறப்பட்ட மாருதி இன்விக்டோ பிந்தைய  தயாரிப்புகளிலிருந்து முதன்மை MPV யாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது  இரண்டு விதமான டிரிம்களில் விற்கப்படும்: ஜெட்டா பிளஸ்  மற்றும் ஆல்பா பிளஸ். இரண்டும்  7 இருக்கைகள் கொண்ட  லே அவுட்டுடன், நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளுடன்  உள்ளன, ஆனால் என்ட்ரி  லெவல் கார்  மட்டுமே 8 இருக்கை லே அவுட்டின் தேர்வைப் பெறுகிறது. இன்விக்டோ அதன் பெரும்பாலான உபகரணங்களை டொயோட்டா MPV உடன் பகிர்ந்து கொண்டாலும், அது மிகவும் விலை குறைவாக இருப்பதால் சில பிரீமியம் அம்சங்களை இழக்கிறது.

தொடர்புடையவை: மாருதி இன்விக்டோ vs டோயோட்டா இன்னோவா ஹைகிராஸ் vs கியா கரேன்ஸ்:விலை ஒப்பீடு

மாருதி MPV -யின் வேரியன்ட் வாரியான அம்சங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:

Maruti Invicto dual-zone climate control


தனித்துவமான அம்சங்கள்


ஜெட்டா+


ஆல்பா+ (ஸீட்டா+வுக்கு மேல்)


வெளிப்புறம்

  • LED DRL களுடன் இரட்டை LED ஹெட்லைட்கள்

  • LED டெயில்லைட்கள்

  • ORVMகளில் டர்ன் இண்டிகேட்டர்கள்

  • பாடி கலர்டு கதவு கைப்பிடிகள்

  • 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • குரோம் வெளிப்புற கதவு கைப்பிடிகள்

  • வீல் ஆர்ச்  கிளாடிங்


உட்புறம்

  • ஷாம்பெயின் தொடுகைகள் கொண்ட முழுவதுமான கருப்பு கேபின் தீம்

  • குரோம் உட்புறக் கதவு கைப்பிடிகள்

  • ரூஃபைச் சுற்றி சுற்றுப்புற விளக்குகள், கப் ஹோல்டர்கள் மற்றும் கோ-டிரைவரின் டேஷ்போர்டு

  • துணியாலான இருக்கைகள்

  • ஸ்டீயரிங் மற்றும் கியர் நாப் ஆகியவற்றிற்கான  தோலினால் ஆன உறை

  • ஸ்லைடு மற்றும் சாய்வு செயல்பாடு கொண்ட கேப்டன் இருக்கைகள் (7 இருக்கைகள்)

  • இரண்டாவது வரிசையில் (8 இருக்கைகள்) 60:40 பிரிவுடனான பெஞ்ச் இருக்கைகள்

  • மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு 50:50 பிரிப்பு

  • சேமிப்பகத்துடன் கூடிய  தோலினால் ஆன முன் ஆர்ம்ரெஸ்ட்

  • இரண்டாவது வரிசை தனிப்பட்ட ஆர்ம்ரெஸ்ட்கள் (7 இருக்கைகள்)

  • கப் ஹோல்டர்களுடன் கூடிய இரண்டாவது வரிசை ஆர்ம்ரெஸ்ட் (8 இருக்கைகள்)

  • குளிர்விக்கும் செயல்பாடு கொண்ட முன்புற கப்பை உள்ளிழுக்கும் ஹோல்டர்கள்

  • முன் வகை-A மற்றும் வகை-C USB போர்ட்கள்

  • இரண்டாவது வரிசைக்கான 2x வகை-C USB போர்ட்கள்

  • முன்புற மற்றும் இரண்டாவது வரிசை வாசிப்பு விளக்குகள்

  • பின்புற கேபின் விளக்கு

  • பகல்/இரவு  IRVM

  • தையலுடன் முன் கதவு  பேடுகளுக்கு சாஃப்ட்-டச் ஃபினிஷ்

  • தோலினால் ஆன இருக்கைகள்

  • ஆட்டோ -டிம்மிங் IRVM


சௌகர்யம் மற்றும் வசதி

  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை

  • கேப்டன் இருக்கைகளுக்கான பக்கவாட்டு மேசை (7 இருக்கைகள்)

  • புளோயர் கட்டுப்பாட்டுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை ACவென்ட்கள் கொண்ட ஆட்டோ  AC

  • இரண்டாவது வரிசை சன்ஷேடுகள்

  • ஏர் ஃபில்டர்

  • பேடில் ஷிஃப்டர்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • கீலெஸ் எண்ட்ரீ

  • ஸ்டார்ட்-ஸ்டாப் புஷ் பட்டன்

  • பவர்டு ORVMகள்

  • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட்

  • பூட் லேம்ப்

  • பனோரமிக் சன்ரூஃப்

  • பவர்டு டெயில்கேட்

  • நினைவக செயல்பாட்டுடன் 8-வழி  ஆற்றல் -சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை

  • வென்டிலேட்டட் முன்புறஇருக்கைகள்

  • டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்

  • PM2.5 ஏர் ஃபில்டர்

  • வெல்கம் லைட் செயல்பாடு கொண்ட ORVM கள்

  • ஜன்னல்களுக்கான ரிமோட் கண்ட்ரோல்கள்

  • கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம்

  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • 6 ஸ்பீக்கர்  மியூசிக் சிஸ்டம்

  • கனெக்ட்டட் கார் டெக்னாலஜி

  • 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே

பாதுகாப்பு

  • ஆறு ஏர்பேக்குகள்

  • ரிவர்சிங் கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்

  • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்

  • முன்புற சீட்பெல்ட் நினைவூட்டல்

  • அனைத்து பயணிகளுக்கும் 3-புள்ளி சீட்பெல்ட்கள்

  • ISOFIX குழந்தை இருக்கை ஆங்கரேஜ்கள்

  • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

  • வாஷர்களுடன் கூடிய பின்புற வைப்பர்

  • வழிகாட்டுதல்களுடன் 360 டிகிரி கேமரா

  • முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்

  • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை சீட்பெல்ட் நினைவூட்டல்

  • பின்புற டிஃபோகர்

Maruti Invicto 10.1-inch touchscreen

இன்விக்டோ  நிலையானதாக நன்கு பொருத்தப்பட்டுள்ளது, ஆனால்  அகலமான சன்ரூஃப், ஆற்றல் பெறும் ஓட்டுனர் இருக்கை, 10.1- இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற தலைசிறந்த பிரீமியம் அம்சங்களுக்கான டாப் வேரியன்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும். இருப்பினும், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற டிஃபோகர், TPMS மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM போன்ற சில முக்கியமான செயல்பாடுகளும் ஆல்பா பிளஸ் வேரியன்ட்டுக்காக  மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

தொடர்புடையவை: மாருதி சுஸுகி இன்விக்டோ  மதிப்பீடு: உண்மையில் அந்த பேட்ஜ் தேவையா?

போனட்டின் கீழ் என்ன இருக்கிறது

இன்விக்டோ, இன்னோவா ஹைக்ராஸின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது. அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்:


விவரக்குறிப்புகள்


ஸ்ட்ராங்- ஹைப்ரிட் பவர்டிரெய்ன்

 

இன்ஜின்


2-லிட்டர் பெட்ரோல்

Power
ஆற்றல்


186PS (ஒருங்கிணைந்த), 152PS (இன்ஜின்) மற்றும் 113PS (மின் மோட்டார்)


டார்க்


187Nm (இன்ஜின் ) மற்றும் 206Nm (எலக்ட்ரிக் மோட்டார்)

 

டிரான்ஸ்மிஷன்

e-CVT


டிரைவ்டிரெயின்

FWD


கிளைம்டு மைலேஜ்

23.24கிமீ/லி

விலை மற்றும் போட்டியாளர்கள்

Maruti Invicto rear

மாருதி இன்விக்டோ கார்களின்  விலை ரூ. 24.79 லட்சம் முதல் ரூ. 28.42 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்  இந்தியா முழுவதும் ) இருக்கும். அதன் ஒரே நேரடி போட்டியாளர் டொயோட்டா இன்னோவா ஹகிராஸ் ஆகும், மேலும் இது . கியா கேரன்ஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவுக்கு  பிரீமியம் மாற்றாக நிலைநிறுத்தப்படுகிறது

மேலும் தெரிந்து கொள்ள : மாருதி இன்விக்டோ 4 வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது
மேலும் படிக்கவும்: மாருதி இன்விக்டோ ஆட்டோமெட்டிக் 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti இன்விக்டோ

1 கருத்தை
1
B
boja rajendran
Jul 12, 2023, 10:47:54 AM

Good to get required information in this Article. Thanks for the Updatiing. What is on road price of Maruth Invicto Top End Model in Chennai. & What is the Booking Amount

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience