டோக்கியோ மோட்டார் கண்காட்சி – சுசூக்கியின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை
published on அக்டோபர் 05, 2015 09:39 am by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில், சுசூக்கி நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ள பல விதமான கார்களின் பட்டியலை இந்நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த 44 -ஆவது ஆண்டு டோக்கியோ கார் கண்காட்சி, இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த அரிய நிகழ்ச்சியில், சுசூக்கி ஜப்பான் நிறுவனம் அதிகமான வகையில் மின்சார வாகனங்களையும், கோட்பாட்டு கார்களையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. மிகப்பெரும் வாகன தயாரிப்பாளரான சுசூக்கி நிறுவனம் தனது 100 -வது ஆண்டு நிறைவு விழாவை, வரும் 2020 -ஆம் ஆண்டு கொண்டாட இருப்பதால், இந்த கண்காட்சியில் சுசூக்கியின் பூத் ‘சுசூக்கி நெக்ஸ்ட் 100’ என்ற கருத்தை வலியுறுத்துவதாக இருக்கும். இந்த பூத், அடுத்து வரும் 100 வருடங்களுக்கான சுசூக்கி நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையில், இதன் திட்டங்களை தெளிவாக எடுத்துரைக்கும்.
இந்நிகழ்ச்சியில், சுசூக்கியின் பூத்தில் இடம்பெறப் போகும் மைட்டி டெக் என்ற கோட்பாட்டின் மூலம் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக காரில், நேர்த்தியான கித்தான் திரை துணியால் உருவாக்கப்பட்ட மேற்கூரை மற்றும் மாற்றி அமைக்கக்கூடிய திறந்த நிலையில் உள்ள டெக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிறிய ரக காருடன், “ஏர் ட்ரைசர்” என்ற பெயருடன், 3 கதவுகளைக் கொண்ட கச்சிதமான மினிவேனும் காட்சிப்படுத்தப்படும். இதன் உட்புற வடிவமைப்பு, பிரைவேட் லௌஞ்ஜ் கோட்பாட்டை ஒத்து இருக்கிறது. மேலும், மேல் விதானத்தை தொடும் அளவில் உள்ள ஒரு காட்சி திரை, B பில்லர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
மற்றொரு கோட்பாடு கார் மாடலான இக்னிஸ் காரையும் நாம் இந்த கண்காட்சியில் எதிர்பார்க்கலாம். இந்த புதிய மாடல், சுசூக்கியின் கச்சிதமான க்ராஸ் ஓவர் பிரிவு கார்களின் போட்டியாளர்களை, பகிரங்கமாக எதிர்கொள்ள உள்ளது. கரடு முரடான சாலையில் பயணிக்கும் வகையில் இதன் செயல்திறனை அமைப்பதற்கு, இந்நிறுவனம் தனி கவனம் மேற்கொண்டுள்ளது.
பல விதமான கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்தாலும், அனைவரின் கண்ணைக் கவரும் புதிய மாடல்களாக பலேனோ மற்றும் எஸ்குடோ ஆகிய கார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்விஃப்ட், சோலியோ, சோலியோ பண்டிட் மற்றும் SX4 S-க்ராஸ் ஆகிய கார்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே கார் ஆர்வலர்கள் மத்தியில் புகழடைந்து ரீங்காரம் இட்டபடி, அறிமுகப்படுத்தப்படும் நிலையில் இருக்கும் பலேனோ மாடலில், இதனை விரும்பி வாங்குபவர்களுக்காக இரண்டு மாறுபட்ட இஞ்ஜின் விருப்ப தெரிவுகளை வழங்கவுள்ளது. அதில் ஒன்றாக, புதிதாக உருவாக்கப்பட்ட 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர் ஜெட் இஞ்ஜினும், மற்றொண்டாக 1.2 லிட்டர் டுயல் ஜெட் இஞ்ஜினும் இருக்கிறது. எஸ்குடோ (ஜப்பான் தவிர மற்ற நாடுகளில் விஸ்தாரா என அழைக்கப்படுகிறது) கார், அசாதாரணமாக கரடுமுரடான சாலையில் பயணிக்கும் தனது செயல்திறன் மூலம், மிக பெரிய வெற்றி வாகை சூடும் என்று கருதப்படுகிறது. பலேனோ மாடல் சிறிய வகை கார் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளது. விஸ்தாரா மாடல் பந்தய பயன்பாட்டு வாகனமாக (SUV) இருக்கும் என அறியப்படுகிறது. மேலும், இந்த கண்காட்சியில், ஒரு கணிசமான இடத்தை, சிறிய வகை கார்களான வேகன் – R, ஹுஷ்ட்ளர், ஆல்டோ, ஆல்டோ லாபின், ஜிம்னி மற்றும் ஸ்பாசியா ஆகியன பிடித்துக்கொள்ளும் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful