ஸ்கோடா தனது விஷன் S கான்செப்டை 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளது.
published on பிப்ரவரி 18, 2016 12:50 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
செக் நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஸ்கோடா நிறுவனத்தினர் தங்களது விஷன் S SUV கான்செப்டை 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள இந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த கான்செப்டை உலகுக்கு ஸ்கோடா காட்சி படுத்த உள்ளது. இந்த விஷன் S கான்செப்டில் பின்பற்றப் பட்டுள்ள வடிவமைப்பு கோட்பாடு போஹிமியன் கிறிஸ்டல் கலை மற்றும் செக் நாட்டின் சிறப்புமிக்க செக் க்யூபிஸம் ஆகியவற்றின் பாதிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வடிவமைப்பு கோட்பாடு , SUV வாகனங்கள் கூரான வளைவுகளைக் கொண்ட உடலமைப்புடன் இருந்தால் மட்டுமே சட்டென்று பார்பவர்களை தன் பக்கம் ஈர்க்கும் என்று கூறுகிறது. இந்த வடிவமைப்பு உத்தி தான் எதிர்காலத்தில் ஸ்கோடா தயாரிக்கும் SUV/ க்ராஸ்ஓவர் வாகனங்களிலும் பின்பற்றப்படும் என்று ஸ்கோடா தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய கான்செப்ட் SUV வாகனங்கள் தற்போதய ஸ்கோடா எடி SUV வாகனங்களை விட பெரியதாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கான்செப்டில் பநோரமிக் சன்ரூப் மற்றும் காரின் உட்புற கேபின் பகுதியில் வோல்க்ஸ்வேகனின் MIB தொழில் நுட்பம் ( சேட்டிலைட் நேவிகேஷன், ஆன்ட்ராய்ட் ஆட்டோ , ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கேன்டன் ஒலி அமைப்பு ) ஆகியவை இணைக்கப்படலாம் என்றும் யூகங்கள் உலவுகின்றது.
இப்போதைக்கு இந்த கான்செப்ட் ஆறு - இருக்கைகள் கொண்ட அமைப்புடன் தான் காட்சிக்கு வைக்கப்படும் என்றாலும் அறிமுகமாகும் போது தயாரிப்பு மாடல் 7 – இருக்கை வசதியுடன் இருக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்த கான்செப்ட் ' கோடியாக் ' என்ற பெயருடன் வெளியிடப்படலாம் என்றும் நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஸ்கோடா கோடியாக் வாகனங்கள் தங்களது தாய் நிறுவனமான வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் MQBப்லேட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம் என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நமக்கு யூகங்களின் அடிப்படையில் கிடைக்கும் செய்திகளை பார்க்கையில் இந்த ஸ்கோடா கோடியாக் வாகனங்கள் 5 – இருக்கை வசதியுடன் வெளியிடப்படும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை வோல்க்ஸ்வேகனின் 1.6 -லிட்டர் TSI மற்றும் 2.0 லிட்டர் TDI என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : வோல்க்ஸ்வேகன் இந்தியா 8 சதவிகித விற்பனை வளர்ச்சியை ஜனவரி 2016ல் பதிவு செய்துள்ளது
0 out of 0 found this helpful