• English
  • Login / Register

5,00,000-வது எட்டி காரை, ஸ்கோடா வெளியிட்டது

modified on டிசம்பர் 23, 2015 12:36 pm by raunak

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

செக் குடியரசு நாட்டு வாகன தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம், தனது 5,00,000-வது எட்டி காரை, செக் குடியரசு நாட்டில் உள்ள அதன் மூன்று தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றான கெய்வாசினியில் இருந்து வெளியிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் எட்டி காரை அறிமுகப்படுத்திய ஸ்கோடா நிறுவனம், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV-க்கு, அதன் இடைக்கால மேம்பாடு (மிட்-லைப் அப்டேட்) அளிக்கப்பட்டது. இந்த வாகனத்தை, ஐரோப்பா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் தயாரிக்கப்படுவதாக, இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்கோடா தயாரிப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் குழுவின் உறுப்பினரான மைக்கேல் ஓயில்ஜிகிளவ்ஸ் கூறுகையில், “ஸ்கோடா எட்டியின் தயாரிப்பு 5 லட்சத்தை எட்டியது, கெய்வாசினி தொழிற்சாலையின் மற்றொரு மைல்கல்லாக விளங்குகிறது. எட்டி காரின் அறிமுகம் முதலே, ஐரோப்பிய வாடிக்கையாளர்களையும், சர்வதேச சந்தைகளையும் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வெற்றியை கெய்வாசினியில் உள்ள அணிக்கு மட்டுமே உரியது அல்ல. இது அவர்களின் தொழிற்நுட்ப திறன்கள், நிபுணத்துவம் மற்றும் உயர்ந்த சமர்ப்பணம் ஆகியவை மூலம், அந்த தொழிற்சாலைக்கு கிடைத்த நற்பெயர் ஆகும். எனவே அடுத்த சில ஆண்டுகளுக்கு, கெய்வாசினியின் உற்பத்தி அளவு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடையும். இதில் SUV-யின் தயாரிப்பு, ஒரு முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

அதன் உற்பத்தியை குறித்த விளக்கத்தில், ஸ்கோடா எட்டியை கெய்வாசினியில் மட்டுமின்றி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனாவில் உள்ள ஷாங்காய் வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் எட்டியை உள்ளூரிலேயே, சீனா சந்தைக்கு ஏற்ப ஒரு நீட்டிக்கப்பட்ட பதிப்பாக தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவில் உள்ள அந்நாட்டு தயாரிப்பாளரான காஸ் குழுவினருடன் இணைந்து, நிழ்நிய் நவ்கோராட் தொழிற்சாலையில் இந்த கச்சிதமான SUV-யின் தயாரிப்பு நடைபெறுகிறது. இந்திய தயாரிப்பை குறித்து கூறுகையில், மகாராஷ்டிராவின், அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா இந்தியாவின் தயாரிப்பு தொழிற்சாலையில், CKD கிட்ஸ் மூலம் எட்டி கார், உள்ளூரிலேயே கூட்டிணைக்கப்படுகிறது.

மேலும் படிக்க:

  • ஸ்கோடா ஆக்டேவியா ஆண்டு விழா பதிப்பு ரூ.15.75 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

  • புதுப்பிக்கப்பட்ட 2014 ஸ்கோடா எட்டி ரூ.18.63 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience