செக்கோஸ்லோவாக்கியா கார் தயாரிப்பாளரின் புதிய SUV காருக்கு ஸ்கோடா கோடியாக் என்ற பெயர் சூட்டப்படுமா?

published on டிசம்பர் 23, 2015 12:09 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

D-செக்மெண்ட் கார் பிரிவில், ஸ்கோடா நிறுவனம் தனது புதிய காரை அறிமுகப்படுத்த, முழு மூச்சுடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், ஸ்கோடா கோடியாக் என்றுதான் இதற்கு பெயர் சூட்டப்படும் என்று யூகங்கள் குறிப்பிடுகின்றன. SUV பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், 7 நபர்கள் அமர்ந்து செல்லக் கூடியதாக இருக்கும். இதற்கு முன், ஸ்கோடா போலார் என்ற பெயர் சூட்டப்படும் என்றும், ஸ்கோடா ஸ்னோமேன் என்ற பெயர் சூட்டப்படும் என்றும், ஏராளமான வதந்திகள் பரவின. 7 இருக்கைகள் கொண்ட இந்த புதிய க்ராஸ்ஓவர் கார், அடுத்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள Autoblid அறிக்கையின் படி, இதற்கு ஸ்கோடா நிறுவனம் கோடியாக் என்று பெயர் சூட்டும் என்றும் தெரிகிறது. ஸ்கோடா எட்டிக்கான மாற்றாக இது இருக்காது, ஏனெனில், ஸ்கோடாவின் கார் வரிசையில் வரும் இந்த புதிய கார் எட்டி மாடலை விட சிறந்தாக இருக்கும்.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கோடியாக் தயாரிக்கப்படும். இதே தொழில்நுட்பம், அடுத்து வரவுள்ள வோக்ஸ்வேகன் டிகுவான் XL SUV காரிலும்  உபயோகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. கோடியாக் மாடலை, குறைந்த விலை டிகுவான் கார் என்று குறிப்பிடலாம், ஏனெனில், இது இந்தியா மற்றும் சீனா வாகன சந்தையை குறி வைத்து, அவற்றின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.

கோடியாக் காரின் இஞ்ஜின் தேர்வுகளைப் பார்த்தால் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. ஏனென்றால், 1.4 லிட்டர் இஞ்ஜின் வகையில் ஆரம்பித்து 2.0 லிட்டர் இஞ்ஜின் வரை, பல விதமான இஞ்ஜின் ஆப்ஷங்களுடன் இந்த கார் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் (TSI) மற்றும் டர்போ டீசல் (TDI) என்ற இரண்டு விதமான வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்கும். 7 ஸ்பீட் DSG மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இதன் இஞ்ஜின்கள் இணைக்கப்பட்டு வரும் என்று தெரிகிறது.

2016 பாரிஸ் மோட்டார் ஷோ கண்காட்சியில், உலகிலேயே முதல் முறையாக  இந்த புதிய SUV அறிமுகப்படுத்தப்படும். அக்டோபர் முதல் தேதியில் இருந்து 16 –ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும். மேற்சொன்ன செய்தி உண்மையாக இருந்தாலும், அடுத்து வரும் பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் ஆகும் முன்னரே, கோடை காலத்தில் இந்த SUV அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுவிடும் என்று Autobild, தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

புகைப்பட ஆதாரம்: Autobild

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience