• English
    • Login / Register

    இரண்டாவது-தலைமுறையான ஹூண்டாய் கிரெட்டாவின் முதல் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டது

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 க்காக பிப்ரவரி 07, 2020 01:59 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 27 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இது பிப்ரவரி 6 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் மார்ச் 2020 க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    Second-gen Hyundai Creta Teased In First Official Sketches

    • புதிய கிரெட்டாவானது இதன் சீன மாதிரியின் (ஐ‌எக்ஸ்25) ஒரே விதமான தன்மையைக் கொண்டுள்ளது.

    • 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் மற்றும் 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகு கொண்ட க்யா செல்டோஸுடன் ஆற்றல் இயக்கிக்கான விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும்.

    • இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் மற்றும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்கக் கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு புதிய சிறப்பம்சங்களைப் பெற வாய்ப்புள்ளது.

    • ரூபாய் 10 லட்சத்துக்குக் குறைவான ஆரம்ப விலையில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முக்கிய போட்டிகளாக க்யா செல்டோஸ் மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளது.

     இரண்டாவது தலைமுறையான கிரெட்டாவை இந்தியாவுக்குக் கொண்டுவர ஹூண்டாய் தயாராக இருக்கின்றது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் எஸ்யூவியை வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தும். இது இப்போது இந்திய-தனிச்சிறப்பு எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டுள்ளது மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Second-gen Hyundai Creta Teased In First Official Sketches

    (படம்: ஹூண்டாய் ஐ‌எக்ஸ்25)

    வடிவமைப்பு படங்களிலிருந்து, அதன் சீன மாதிரியான இரண்டாவது- தலைமுறையான ஐ‌எக்ஸ்25 இன் அதிகமான தன்மைகளை ஒத்து இருக்கும்’ என்பது தெளிவாகிறது. இது ஹூண்டாயின் புதிய சென்சுவஸ் 2.0 வடிவமைப்பை பெறுகிறது, இது முதன்முதலில் வென்யூவில் இடம்பெற்றது. இருப்பினும், ஐ‌எக்ஸ்25 உடன் ஒப்பிடும்போது அதன் முன்பக்க பாதுகாப்பு சட்டம் மாறியிருக்கிறது மற்றும் படங்களில் காணப்படுவது போல், இது வென்யூவில் உள்ளதை போல அடுக்கு பாதுகாப்பு சட்டகத்தைப் பெறும்.

    ஹூண்டாய் அதன் சீன மாதிரியைப் போலவே முகப்புவிளக்கு அலகுகளுக்கு மேலே இருக்கும் எல்இடி டிஆர்எல்களுடன் இரண்டாவது தலைமுறையான கிரெட்டாவை வழங்கும். பின்புற அமைப்பும் எக்ஸ்25யை ஒத்ததாக இருக்கின்றது, முன்புறத்தில் ஒளிரும் டிஆர்எல்-களுடன் கூடிய எல்இடி விளக்குகளுடன் காணப்படுகிறது. இதன் பக்கவாட்டிலிருந்து காணும் போது,  பாக்ஸி அமைப்புடனும், வளைவான சக்கர உறைகளும், பக்கவாட்டு பட்டிகளும் இருப்பதாக தோன்றுகிறது.

    ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவியின் இரண்டாவது தலைமுறை ஆனது அதன் பிஎஸ்6 ஆற்றல் இயக்கி விருப்பங்களை க்யா செல்டோஸுடன் பகிர்ந்து கொள்ளும். இது செல்டோஸ் 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகுடன் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கப்படும். 1.5-லிட்டர் பெட்ரோல் சிவிடியையும், 1.5-லிட்டர் டீசல் 6-வேக முறுக்கு திறன் மாற்றியையும், 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் 7-வேக டி‌சி‌டியையும் பெறும்.

    முன்பகுதியில் இருக்க கூடிய சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இது ஒரு தானியங்கி முறையிலான தடை நிறுத்த அமைப்பு, இணைய அணுகல் கார் தொழில்நுட்பம், செல்டோஸ் போன்ற 10.25 அங்குல தொடுதிரை அமைப்பு மற்றும் அதனுடைய முக்கிய சிறப்பம்சங்களாக வெளிப்புற காட்சிகளைப் பார்க்கக் கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Second-gen Hyundai Creta Teased In First Official Sketches

    ஹூண்டாய் புதிய கிரெட்டாவிற்கு அதனுடைய க்யா மாதிரியைப் போலவே விலையை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையுடன் வழங்கப்படும் என்றும், உயர்-சிறப்பம்ச வகைக்கு ரூபாய் 17 லட்சம் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கிறோம். க்யா செல்டோஸ், நிசான் கிக்ஸ், மாருதி சுசுகி எஸ்-கிராஸ் மற்றும் ரெனால்ட் கேப்டூர் மற்றும் டஸ்டர் போன்ற போட்டியாளர்களுடன் இது தொடர்ந்து போட்டியிடும். வரவிருக்கும் வோக்ஸ்வேகன் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஸ்கோடா காம்பாக்ட் எஸ்யூவி ஆகியவை 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இரண்டாவது தலைமுறையான கிரெட்டாவுடன் போட்டியிடும்.

     மேலும் படிக்க: கிரெட்டா டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா 2020-2024

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience