ஜெய்பூர்: விற்பனை புள்ளி விவரங்கள் வெளியீடு: ஹோண்டா நிறுவன தயாரிப்புக்களில் ஹோண்டா அமேஸ் கார்கள் முதன்மை!
published on அக்டோபர் 05, 2015 02:16 pm by manish
- 21 Views
- ஒரு கர ுத்தை எழுதுக
ஜெய்பூர்:
இந்தியாவின் நான்காவது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது செப்டம்பர் 2015 ஆம் ஆண்டின் விற்பனை புள்ளி விவரங்களை வெளியிட்டது. செப்டெம்பர் மாதம் கடந்த 2014 ஆம் ஆண்டு விற்பனையான 15,395 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) நிறுவனம் இந்த ஆண்டு செப்டெம்பரில் ஏற்றுமதியையும் சேர்த்து மொத்தம் 19,291 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 23% அதிகமாகும்.
இந்திய சந்தையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இந்த 2015 செப்டெம்பரில் ஹோண்டா வாகனங்களின் விற்பனை 23% அதிகரித்து மொத்தம் 18,509 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. ஏற்றுமதி பிரிவின் விற்பனை புள்ளி விவரங்களை மட்டும் தனியாக பிரித்து பார்க்கையில் , செப்டம்பர் 2014 ல் வெறும் 380 வாகனங்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதுவே இந்த 2015 செப்டெம்பரில் 106% உயர்ந்து 782 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா நிறுவனம் தற்போது இதிய சந்தையில் 6 விதமான கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை : அமேஸ், சிட்டி, ஜாஸ், பிரயோ, CR – V SUV மற்றும் மொபிலியோ MPV. இந்த வரிசையில் அதிகமாக விற்பனையாகி முதல் இடத்தைப் பிடித்திருப்பது ஹோண்டா அமேஸ் கார்களாகும். 6,577 அமேஸ் விற்பனையாகியுள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தை செடான் பிரிவை சேர்ந்த ஹோண்டா சிட்டி கார்கள் பிடித்துள்ளன. மொத்தம் 5,702 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை ஆகியுள்ளன. 4,762 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இவைகளைத் தவிர 759 ப்ரியோ கார்களும், 643 மொபிலியோ கார்களும், 66 CR – V கார்களும் விற்பனையாகி உள்ளன.
0 out of 0 found this helpful