• English
  • Login / Register

மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர்: பிப்ரவரி 4 –ஆம் தேதி வெளியிடப்படும்

published on ஜனவரி 29, 2016 03:53 pm by raunak

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உள்ளும் புறமும் மிக அதிகமான அழகிய தோற்ற மேம்பாடுகளைப் பெற்றுள்ள புதிய ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், முதல் முறையாக ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் அறிமுகமாகிறது. 

2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் இரண்டாவது நாளான பிப்ரவரி 4 –ஆம் தேதியன்று, புதிய டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிடப் போவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருட ஏப்ரல் மாத முதல் தேதியில், ரெனால்ட் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலை பிரேசில் நாட்டு வாகன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஃபிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த சில மாதங்களாக இந்திய சாலைகளில் தனது மேம்படுத்தப்பட்ட டஸ்டரை ஒட்டிப் பார்த்து சோதனை செய்து கொண்டிருந்தது. இந்தியாவில் இந்தப் புதிய மாடல் எப்போது அறிமுகமாகும் என்று காத்துக் கொண்டிருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி – அடுத்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அல்லது அதற்கடுத்த ஒரு சில வாரங்களில், இந்தியாவில் இந்த காரின் விற்பனை ஆரம்பமாகிவிடும் என்று தெரிகிறது. 

புதுமையான அழகிய தோற்ற மேம்பாடுகளைப் பெற்றுள்ள புதிய டஸ்டரின் முகப்பு பகுதியில், ஹெட் லைட் ஃபிரேமை மாற்றாமல் இரட்டை பேரல் வடிவத்தில் உள்ள விளக்குகள் மற்றும் ரெனால்ட்டின் சின்னம் இடம்பெற்றுள்ள இரட்டை பட்டைகளைக் கொண்ட கிரில் போன்றவை பொருத்தப்பட்டுள்ளதால் இந்த கார் மேலும் பொலிவடைந்துள்ளது. அது மட்டுமல்ல, முன்புற பம்பரிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இதன் பக்கவாட்டுப் பகுதிகளில் மிகவும் குறைவான மாற்றங்களே இடம்பெற்றுள்ளன. புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் ரூஃப் ரைல்ஸ் போன்றவை டஸ்டரின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. பின்புற தோற்றத்தைப் பார்க்கும் போது, டெய்ல் லாம்ப்களில் இடம்பெற்றுள்ள புதிய கிராபிக்ஸ் நம்மை வசீகரிக்கிறது. மேலும், பிரேசிலில் வெளியான வெர்ஷனில் உள்ளதைப் போல இதிலும் LED லைட்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது. புதிய டஸ்டரின் உட்புற கேபினிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட டஸ்டரில் புதிய சென்ட்ரல் கன்சோல் மற்றும் சற்றே மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் ஆகியவை இடம் பிடித்துள்ளன. அது மட்டுமல்ல, 2015 மாடல் டஸ்டரில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களும் இந்த மாடலிலும் இடம்பெறும். 

2012 –ஆம் வருடம் டஸ்டர் அறிமுகமானதற்கு பின், முதல் முறையாக AMT (ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) ஆப்ஷனை 2016 டஸ்டர் மாடலில் ரெனால்ட் நிறுவனம் வழங்கும் என்று, தற்போது உளவாளிகள் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. கடந்த வருடம் ஜெனீவா மோட்டார் ஷோ கண்காட்சியில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்நிறுவனத்தின் பிரெத்தியேக ஈசி-R AMT ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இதில் பொருத்தப்படும். அனேகமாக, இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு, 1.5 லிட்டர் dCi டீசல் மோட்டாரின் 110 PS வெர்ஷனுடன் இணைக்கப்படும். இது தவிர, தற்போது இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் டஸ்டர் மாடலில் உள்ள அனைத்து மெக்கானிக்கல் ஆப்ஷன்களும், தொடர்ந்து புதிய மாடலிலும் இடம்பெறும்.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience