• English
  • Login / Register

லோட்டஸ் நிறுவனத்தின் ஃபார்முலா 1 அணியை வாங்குவதற்கு, ரினால்ட் விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டது

published on செப் 30, 2015 03:04 pm by cardekho

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ரினால்ட் நிறுவனம், லோட்டஸ் ஃபார்முலா 1 அணியின் கட்டுப்பாட்டு உரிமையை பெறும் வகையில் “விருப்ப கடிதத்தில்” (லெட்டர் ஆஃப் இண்டெண்ட்) கையெழுத்திட்டது. இதன் மூலம், 2016 –ஆம் ஆண்டு பந்தய காலத்தில், தனது ரினால்ட் ஃபார்முலா 1 அணி திட்டத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இந்த விருப்ப கடிதத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ரினால்ட் குழுமத்திற்கும், லோட்டஸ் உரிமையாளர்கள் ஜெனீ கேபிட்டல் SA  -வின் இணை நிறுவனமான கிராவிட்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் S..a.r.l நிறுவனத்திற்கும் இடையே, ஒரு புதிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, முதல் முறையாக ஃபார்முலா 1 ரேஸில் போட்டியிடுவதற்கு,  ரினால்ட் ஃபார்முலா 1 அணியை உருவாக்க, இந்நிறுவனம் மேற்கொண்ட முதல் அதிகாரபூர்வ செயலாக இந்த உடன்படிக்கை இருக்கும் என்று தெரிகிறது.

Renault

ரினால்ட் தனது 38 ஆண்டு கால வெற்றிகரமான பயணத்தை நீட்டிக்க, உலகின் முதன்மையான மோட்டார் ஸ்போர்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இணையவுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக கருதப்படுகிறது.

திங்கள் கிழமை அன்று ரினால்ட் ஸ்போர்ட் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், “லோட்டஸ் F1 டீம் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு உரிமையை ரினால்ட் நிறுவனம் பெறும் வகையில் “விருப்ப கடிதத்தில்” கையெழுத்திட்டதை, ரினால்ட் குழு மற்றும் ஜெனீ கேபிட்டல் SA  -வின் இணை நிறுவனமான கிராவிட்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் S. a.r.l நிறுவனம், ஆகியோர் இணைந்து, இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,”என்று தெரிவித்தது.
“இனி வரும் வாரங்களில், ரினால்ட் குழுவும் கிராவிட்டியும் இணைந்து செயல்பட்டு, இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளை, தாங்களும் மற்ற ஆர்வ தரப்புகளுக்கும் ஒத்துக்கொண்ட பின்பு, இந்த முதல் முயற்சியை உறுதியான பரிவர்த்தனையாக மாற்றுவர்”

லோட்டஸ் தலைமை நிர்வாகியான மத்தேவ் கார்ட்டர் இது பற்றி கூறுகையில், “உண்மையில், லோட்டஸ் குழுவை ரினால்ட் நிறுவனம் வாங்குவது உறுதியாகிவிட்டதால் லோட்டஸ் நிறுவனம், நிர்வாக பொறுப்பை தவிர்க்கிறது, அனைத்தும் உறுதியாகிவிட்டதால், இதன் அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் அடுத்த வாரமே வரவுள்ளது. அனைத்து அம்ஸங்களும் சாதகமாக இருப்பதால், அடுத்த வாரத்தில் பத்திரிக்கை ஊடகங்களில் அதிகாரபூர்வ செய்தி ரினால்ட் நிறுவனத்திடம் இருந்து வரும்,”என்றும் தெரிவித்தார்.

Renault

லோட்டஸ் அதிகாரிகள் செலுத்தப்படாத வரி காரணமாக நீதிமன்றத்தில் இருந்த போது ரினால்ட் நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience