இந்தியாவின் முதல் new'R ஷோரூமை சென்னையில் திறந்தது ரெனால்ட் நிறுவனம்
உலகளாவிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தம் புதிய கண்ணோட்டத்தைப் காட்டும் வகையில் புதிய 'R ஸ்டோரை சென்னையின் அம்பத்தூரில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் திறந்துள்ளது.
-
ரெனால்ட்டின் புதிய அடையாளத்தைத் காட்டும் இந்தியாவில் முதல் ஷோரூம் இதுவாக இருக்கும்
-
ஷோரூம் வெளிப்புறம் முழுக்க கறுப்பு நிறத்திலும் மற்றும் வெள்ளை நிறத்தில் 2D ரெனால்ட் லோகோவுடன் வருகிறது.
-
ஷோரூம் உள்ளே இது டூயல்-டோன் தீம் மற்றும் நவீன லைட்டிங்ஸ் மற்றும் சீட்டிங் எலமென்ட்களுடன் வருகிறது.
-
வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவை பகுதிகளும் இப்போது புதிய ஷோரூமின் எல்லைக்குள் உள்ளன.
-
தற்போதுள்ள 100 ஷோரூம்கள் 2025 -க்குள் புதிய அடையாளத்தின்படி புதுப்பிக்கப்படும்.
-
மற்ற ஷோரூம்கள் 2026 இறுதிக்குள் புதுப்பிக்கப்படும்.
2021 ஆண்டில் ரெனால்ட் குழுமம் அதன் உலகளாவிய அடையாளத்தை மாற்றியது. மற்றும் மாறிவரும் டிரெண்டுக்கு ஏற்ப புதிய 2D லோகோவையும் அறிமுகப்படுத்தியது. இப்போது 2025 ஆம் ஆண்டில் புதிய அடையாளத்தின் அடிப்படையில் இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை திறந்துள்ளது. சென்னையின் அம்பத்தூரில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் முற்றிலும் புதிதாக உள்ளது. இது ரெனால்ட்டின் புதிய வரவிருக்கும் ஷோரூம்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது. கார் தயாரிப்பாளரின் தற்போதைய ஷோரூம்களில் இருந்து புதிய ஷோரூம்கள் எவ்வாறு வேறுபடும் என்பதை இப்போது பார்க்கலாம்:
புதிய ஷோரூம் -களுக்கும் பழைய ஷோரூம் -களுக்கும் என்ன வித்தியாசம்?
அம்பத்தூரில் உள்ள நியூ'ஆர் ஸ்டோர் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புடன் வருகிறது. வெளியே இது கறுப்பு கலர் முன்பக்கத்துடன் வெள்ளை நிறத்திலான புதிய 2D ரெனால்ட் லோகோவை கொண்டுள்ளது. உட்புறங்கள் டூயல் டோன் தீம் மற்றும் கறுப்பு மற்றும் புரோன்ஸ்-டைப் ஃபினிஷ் மற்றும் ஏராளமான நவீன லைட்டிங்குகள் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் கார்களைப் பார்க்க அனுமதிக்கும் வகையில் இப்போது கார்கள் பிரகாசமான விளக்குகளின் கீழ்பக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கான ஓய்வறை மற்றும் விற்பனை நிர்வாக அலுவலகங்கள் போன்ற அனைத்து வாடிக்கையாளர் சேவை பகுதிகளும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்தையும் எளிதாக அணுகும் வகையில் ஷோரூமின் எல்லைக்குள்ளேயே உள்ளன. பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் கார் வாங்கும் அனுபவத்தை உயர்த்த புதிய கடையின் உள்ளே நிறைய விளக்குகள் மற்றும் சீட்களை பயன்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இந்த பிப்ரவரியில் ஒரு சப்காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டிற்கு கொண்டு வருவற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்
தற்போதுள்ள ஷோரூம்களின் நிலை என்ன ?
2025 ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள 100 ஷோரூம்களை புதிய அடையாளத்துடன் சீரமைக்க ரெனால்ட் இந்தியா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தற்போதுள்ள மற்ற அனைத்து ஷோரூம்களும் 2026 -ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும்.
இந்தியாவில் ரெனால்ட்
ரெனால்ட் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது 380 -க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களும் 450 க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்களும் உள்ளன. கார் தயாரிப்பு நிறுவனம் தற்போது இந்தியாவில் ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கைகர் என்ற மூன்று தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. ரெனால்ட்டிலிருந்து அடுத்ததாக வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட ட்ரைபர் மற்றும் கைகர், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், பிராண்ட் புதிய தலைமுறை டஸ்டர் மற்றும் அதன் 7-சீட்டர் பதிப்புகளின் அறிமுகத்துடன் விற்பனை வரிசையை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
புதிய ரெனால்ட் ஷோரூமை பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.