சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரெனால்ட் க்விட் புக்கிங் இப்போது நடைபெறுகிறது !

modified on செப் 15, 2015 06:35 pm by konark for ரெனால்ட் க்விட் 2015-2019

மும்பை : 2015 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் க்விட் கார்களின் முன்பதிவை தாமதம் செய்யாமல் ரெனால்ட் நிறுவனம் திங்கட்கிழமை துவக்கியது. சமீப காலத்தில் இந்த கார் ஏற்படுத்தியுள்ள பரபரப்பை பயன்படுத்தி முன்பதிவை அதிகரிக்கும் விதத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது இந்த குறைந்த விலை காரை ரூ. 25000 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும் என்பது மட்டுமின்றி ஒருவேளை அந்த முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில் செலுத்திய பணமும் திரும்பி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் கூட்டாக வடிவமைத்துள்ள CMF - A பிளாட்பார்மை (தொழில்நுட்பம்) அடிப்படையாக கொண்டு இந்த க்விட் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி இதே தொழில்நுட்பத்தை டாட்சன் நிறுவனமும் வரும் காலத்தில் அறிமுகமாக உள்ள தனது ஆரம்ப நிலை கார்களுக்கு பயன்படுத்தும் என்று தெரிகிறது. முகப்பு தோற்றம் மிகவும் கம்பீரமாக ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான டஸ்டர் கார்களை போல் மிடுக்குடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்புற கிரில் அமைப்பில் நீள்சதுர ஸ்லேட்கள் பொருத்தப்பட்டு இருப்பது இந்த சிறிய காருக்கு SUV போல ஒரு கம்பீரமான தோற்றத்தை தருகிறது.

54 Bhp அளவிலான சக்தியையும் 72 Nm அளவிலான உந்து விசையையும் வெளியிடக்கூடிய ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள 799cc ,3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் 5 - வேக கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இந்த க்விட் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதைவிட முக்கியமாக, இந்த சிறிய க்விட் கார்கள் அனைத்து சிறிய வகை கார்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக லிட்டருக்கு 25.17 கி.மீ மைலேஜ் தரும் பெட்ரோல் என்ஜின் கார் இந்த க்விட் கார்கள் தான் என்று நம்பப்படுகிறது. இந்த அம்சத்தையே ரெனால்ட் நிறுவனமும் பெரிதாக பேசி விற்பனையை அதிகரிக்க விரும்புகிறது. இதைத் தவிர 180mm அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிரௌண்ட் க்லியரன்ஸ் நமது கரடு முரடான சாலைகளில் சுகமாக பயணிப்பதற்கு ஒரு வரப்ரசாதமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

ரூ. 3 - 4 லட்சதிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார் செலுத்தும் பணத்திற்கு மேல் பலமடங்கு அற்புதமான அம்சங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்றே சொல்லலாம். மேலும் க்விட் காரின் நேரடி போட்டியாளர்களான மாருதி ஆல்டோ 800 மற்றும் ஹயுண்டாய் இயான் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய க்விட் கார்கள் வாடிக்கையாளருக்கு சிறந்த தேர்வாக தோன்றும் என்பதில் ஐயமில்லை.

க்விட் கார்கள் நான்கு வேரியன்ட்களில் வெளி வர உள்ளது. Std ,RxE, RxL, மற்றும் RxT. இவை அனைத்திலும் பெரும்பாலும் இந்த வகை கார்களிலேயே முதல் முறையாக பல அம்சங்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 7 - அங்குல தொடு - திரை டிஸ்ப்ளே உடன் கூடிய மீடியா - நேவிகேஷன் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்டர் மற்றும் மிக தாராளமான 300 - லிட்டர் கால் வைப்தற்கான இடவசதி(பூட் ஸ்பேஸ்) போன்ற அம்சங்களையும் நாம் காண முடிகிறது.இந்த கார் இந்த மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத துவக்கத்திலோ விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Alert me when launched

k
வெளியிட்டவர்

konark

  • 11 பார்வைகள்
  • 3 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் க்விட் 2015-2019

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை