சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அறிமுகமானது புதிய ரெனால்ட் கார்டியன்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே

modified on அக்டோபர் 27, 2023 05:04 pm by rohit for ரெனால்ட் kardian

ரெனால்ட் கார்டியன் கார் தயாரிப்பாளரின் புதிய மாடுலர் பிளாட்ஃபார்ம் மற்றும் 6-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உடன் புதிதாக உருவாக்கப்பட்ட 1-லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அறிமுகத்தைக் குறிக்கிறது.

ரெனால்ட் கார்டியன் என்பது லத்தீன் அமெரிக்கா உட்பட ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள சில சந்தைகளுக்கான பிரெஞ்சு மார்க்கெட்டின் புதிய எஸ்யூவி கார் ஆகும். 2027 வரையிலான அதன் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ரெனால்ட் பத்திரிகையாளர் சந்திப்பில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. ரெனால்ட் எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே:

புதிய மாடுலர் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலானது

இந்த நிகழ்வில் , லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 4 வெவ்வேறு உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மாடுலர் தளத்தை ரெனால்ட் அறிவித்தது, ரெனால்ட் கார்டியன் இந்த புதிதாக உருவாக்கப்பட்ட வடிவமைப்பு அடிப்படையிலான முதல் மாடல் ஆகும், இது 4 முதல் 5 மீட்டர் நீளம் கொண்ட கார்களை ஆதரிக்கிறது. ரெனால்ட்டின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 4120 மிமீ நீளம், 2025 மிமீ அகலம் (ORVM உட்பட), 1596 மிமீ உயரம் (ரூஃப் ரெயில்ஸ் உட்பட) மற்றும் 2604 மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 209 மிமீ ஆகும்.

A post shared by CarDekho India (@cardekhoindia)

வடிவமைப்பு விவரங்கள் உள்ளும் புறமும்

ரெனால்ட் கார்டியன் ஒரு கூர்மையான முன்பக்க தோற்றத்தை கொண்டுள்ளது, அனைத்து எல்இடி ஹெட்லைட் அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் கிரில்லில் ஒரு கிளாஸ்-பிளாக் பேனல் இன்செர்ட் -டை கொண்டுள்ளது, இது ரெனால்ட் பேட்ஜை ஒத்த பல ரோம்பஸ்களை கொண்டுள்ளது. அந்த LED DRL -கள் ஹேமர்-ஸ்டைல் வோல்வோ ​-வின் ஹெட்லைட்களை நினைவூட்டுகின்றன. அதன் பம்பரில் ஒரு பெரிய ஏர் டேம், ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட், முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ரேடார் உள்ளது.

அதன் பக்கவாட்டில் தெளிவாக தெரிகின்ற ஃபங்ஷனல் ரூஃப் ரெயில்ஸ் (80 கிலோ வரை சுமைகளை சுமக்கும் திறன் கொண்டது), 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஃபுளோட்டிங் ரூஃப் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன . பின்புறத்தில், எஸ்யூவி எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது, இது ரெனால்ட் கைகர் போன்ற சி-வடிவ LED டெயில்லைட்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டைக் கொண்ட ஒரு தடித்த பம்பர் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் கன்சோலில் சில்வர் டச் கொண்ட கார்டியனுக்கு ஆல் பிளாக் கேபின் தீம் ரெனால்ட் தேர்வு செய்துள்ளது. டாஷ்போர்டில் ஒரு கிளாஸ்-பிளாக் இன்செர்ட் உள்ளது, இது டாஷ்போர்டின் அகலம் முழுவதும் மட்டுமல்ல மற்றும் ஏசி வென்ட்களையும் கொண்டுள்ளது. எஸ்யூவி ஆனது ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கான்ட்ராஸ்ட் ஆரஞ்சு நிற ஸ்டிச் டோர் பேட்கள், முன் மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இருக்கைகளில் கூட, ரெனால்ட் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் eC3 மற்றும் C5 ஏர்கிராஸ் -ல் இருப்பதைப் போன்ற நவீன ஜாய்ஸ்டிக் பாணியிலான கியர் செலக்டரையும் ரெனால்ட் பொருத்தியுள்ளது.

இதையும் பார்க்கவும்: லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா காரை வாங்கிய நடிகை ஷ்ரத்தா கபூர்... அனுபவ சிங் பாஸி புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை தேர்ந்தெடுத்துள்ளார்

ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்டை இது இன்ஸ்பையர் செய்யலாம்

இந்த வடிவமைப்பு மாற்றங்கள், 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரெனால்ட் கைகரின் தோற்றத்தை ஊக்குவிக்கும். வெளிப்புறத்தைப் போலவே, கைகரின் உட்புறத்தைப் புதுப்பிக்கும் போது ரெனால்ட் கார்டியனின் கேபினிலிருந்தும் வடிவமைப்பு குறிப்புகளை எடுக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

ரெனால்ட் கார்டியன் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 8-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன்), 8-ஆம்பியன்ட் லைட்ஸ், பேடல் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. இது மொத்தம் 4 USB போர்ட்களை (முன்பக்கத்தில் 2 மற்றும் பின்புறத்தில் 2) பெறுகிறது.

இதன் பாதுகாப்பு அம்சங்களில் மொத்தம் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். இது 13 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களையும் கொண்டுள்ளது, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ்-எம்ர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கியுள்ளன.

இதையும் படியுங்கள்: இந்தியாவில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜ் கொண்ட ரூ.10 லட்சத்திற்குள் உள்ள 7 கார்கள்

ஒரு புத்தம் புதிய பவர்டிரெய்ன்

ரெனால்ட் கார்டியன் பிரெஞ்சு கார் தயாரிப்பாளரின் வரிசையில் ஒரு புதிய பவர்டிரெய்னின் அறிமுகத்தையும் குறிக்கும். இது புதிய 1-லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் டேரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது, 120Ps மற்றும் 220Nm அவுட்புட்டை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) வரும், இது லத்தீன் அமெரிக்காவில் ரெனால்ட்டின் முதல் சலுகையாகும். கார்டியனில் 3 டிரைவிங் மோடுகள் உள்ளன: இகோ, ஸ்போர்ட் மற்றும் மைசென்ஸ்.

கார்டியன் இங்கு வர வாய்ப்பில்லை என்றாலும், ரெனால்ட் நிறுவனம் மூன்றாம் தலைமுறை டஸ்ட்டரை ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவுக்கு கொண்டுவரும், இது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவரை, நீங்கள் ரெனால்ட் கார்டியனை இந்தியாவில் பார்க்க விரும்புகிறீர்களா என்பதையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

r
வெளியிட்டவர்

rohit

  • 199 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் kardian

A
alapati chandra sekhar
Nov 4, 2023, 4:57:38 PM

Which batteries are using and the capacity

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை