• English
  • Login / Register

ரெனால்ட் இந்தியா உள்நாட்டில் 160% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

modified on ஜனவரி 06, 2016 11:52 am by nabeel

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Renault Kwid

ரெனால்ட் நிறுவனத்திற்கு 2015 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்நிறுவனத்தின்   சமீபத்திய வெளியீடான ரெனால்ட் க்விட் கார்கள் தான் என்றால் அது மிகையாகாது. இந்த பிரெஞ்சு தேசத்து கார் தயாரிப்பாளர்கள், டிசெம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு அசாத்தியமான 160% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.  கடந்த மாதம் மொத்தம் 10,292  வாகனங்களை விற்பனை செய்துள்ள இந்நிறுவனம், 2014 ஆம் ஆண்டு டிசம்பரில்  வெறும் 3,956 வாகனங்களையே விற்பனை செய்திருந்தது. 2015 ஆம் ஆண்டு முழுதும்  கணக்கெடுத்தால் மொத்தமாக 53,847 வாகனங்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.  இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.1%  கூடுதல் ஆகும். மேலும் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது . தற்போது  நாடு முழுக்க சுமார் 200  ரெனால்ட் விற்பனை மற்றும் சர்வீஸ் ( சேவை ) மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது ரெனால்ட் நிறுவனம் ப்ளூயன்ஸ், கொலியோஸ், பல்ஸ் , டஸ்டர் , ஸ்கேலா , லாட்ஜி மற்றும் க்விட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

டஸ்டர் SUV வாகனங்களுக்கு பிறகு க்விட் கார்கள் தான் ரெனால்ட் தயாரிப்புக்களில்  பெரும் வெற்றி பெற்றுள்ளது . கடந்த செப்டம்பர் 2015 ல் அறிமுகப்படுத்தப்பட்ட  க்விட் கார்கள் தொடக்கத்திலேயே 25,000  பதிவுகளை (புக்கிங்)  தொட்டன.  . அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து அக்டோபர் இறுதிக்குள்  50,000  என்ற வியத்தகு எண்ணிக்கையை தொட்டது. இதன் காரணமாக இந்த காரை புக் செய்து விட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் காலம் 2 மாதமாக நீண்டது.  தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த க்விட் கார்கள் , ரெனால்ட் நிறுவனம் கடந்த நவம்பரில் 144% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்ய மிக முக்கிய காரணமாக இருந்தது.  க்விட் கார்களின் க்ளட்ச் இல்லாத AMT வெர்ஷன் மற்றும் 1.0 லிட்டர் வேரியன்ட் ஒன்றும் விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

SUV பிரியர்கள் மத்தியில் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார்கள் மிகவும் பிரசித்தம்.  இந்த வாகனத்தின் கச்சிதமான அளவு மற்றும் கரடு முரடான பாதைகளில் வெகு நேர்த்தியாக பயணிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட டஸ்டர் கார்களின் AWD வேரியன்ட் உலகம் முழுக்க பலரது இதயங்களை  கொள்ளை கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.  மேலும் ,  இந்த டஸ்டர் கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை எதிர் வரும் ஆட்டோ எக்ஸ்போவில்  ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது என்பதும் ஒரு கூடுதல்  செய்தி.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience