ரெனால்ட் டஸ்டர் வகைகளில், எதை வாங்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!
published on டிசம்பர் 15, 2015 09:51 am by sumit for ரெனால்ட் டஸ்டர் 2016-2019
- 15 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: சந்தையில் எத்தனையோ புதிய போட்டியாளர்கள் வந்தாலும், தனது பிரிவில் முன்னணி வகிக்கும் ரெனால்ட் டஸ்டர், தொடர்ந்து நிலைநின்று வருகிறது. ஹூண்டாய் க்ரேடா மற்றும் மாருதி S கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றாலும், தனது கடினமான பணியை நம்பகமான முறையில் டஸ்டர் செய்து வருகிறது (விரிவான ஒப்பீட்டை படித்து அறியுங்கள்). வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் இந்த கார் புதுப்பிக்கப்பட்ட உருவில் வெளியிடப்பட்டு, அதன் மிரட்டும் தோற்றத்தின் மூலம் எல்லா மக்களையும் விழிப்படைய செய்ய தயாராக உள்ளது. ஒரு வேளை நீங்கள் இந்த ரெனால்ட் நிறுவனத்தின் தலைசிறந்த SUV-யை வாங்க திட்டமிடுவதாக இருந்து, எந்த வகையை வாங்குவது என்று திணறுவதாக இருந்தால், இதோ உங்கள் வேலையை எளிதாக்கும் வகையில், நாங்கள் ஒரு விரிவான ஆய்வை இங்கே வெளியிடுகிறோம். ரெனால்ட் டஸ்டர் மொத்தம் 3 வகையான என்ஜின்களுடன் வெளியிடப்படுகிறது. அவையாவன: 1.5L dCi THP என்று அறியப்படும் அதிக சக்திவாய்ந்த என்ஜின் (AWD தேர்வையும் பெற்றுள்ளது), 1.6L K4M என்று அறியப்படும் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5L dCi HP என்று அறியப்படும் குறைந்த சக்திவாய்ந்த என்ஜின் ஆகியவை ஆகும். இதில் அதிக சக்திவாய்ந்த மற்றும் குறைந்த சக்திவாய்ந்த ஆகிய இரு என்ஜின்களும் டீசலில் இயங்குபவை. RxE, RxL மற்றும் RxZ ஆகிய 3 வகைகளில் டஸ்டர் வெளியிடப்படுகின்றன.
1. RxE வகை: ரூ.8.8 லட்சம் முதல் 9.6 லட்சம் வரை
RxE வகையில், பெட்ரோல் என்ஜின் மற்றும் குறைந்த சக்திவாய்ந்த என்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. மேலும் இதில் மியூஸிக் சிஸ்டம் மற்றும் அலாய் வீல்கள் இருக்காது. ஆனால் மற்ற சில அம்சங்கள், RxE வகையை தோற்ற பொலிவு மிகுந்ததாக மாற்றுகிறது. இதில் காணப்படும் சில பண்புகளாவன:
- ABS+EBD உடன் பிரேக் அசிஸ்ட்
- முன்பக்க பவர் விண்டோக்கள்
- இரு கப் ஹோல்டர்கள்
- டிஜிட்டல் கடிகாரம்
- ஒரு டச் டேன் இன்டிகேட்டர்
- தரமான ஸ்டீல் வீல்கள்
- கீலெஸ் என்ட்ரி
- பவர் ஸ்டீயரிங்
- ஹெட்லைட் ‘ஆன்’ அலாரம்
இது குறைந்த பட்ஜெட்டை கொண்டவர்களுக்கு ஏற்றது. என்ஜின் சக்தியில் (கொஞ்சம் குறைவாக) சமரசம் செய்து கொள்ளக் கூடியவர்கள் இந்த RxE வகையை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதன் மேம்பட்ட அம்சங்களின் மூலம், டஸ்டர் நிச்சயமாக கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டதாகும்.
2. RxL வகை: ரூ.10.2 லட்சம் முதல் 12.3 லட்சம் வரை
இது மூன்று வகையான என்ஜின்களுடனும் கிடைக்கிறது. மேலும் இதில் மியூஸிக் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற கட்டாயம் காணப்பட வேண்டிய அம்சங்களை கொண்டுள்ளது. மற்ற அம்சங்கள் கீழே காண்பவை:
- டிரைவர் ஏர்பேக் (பயணிக்கு தேர்வுக்கு உட்பட்டது)
- ஆல் வீல் டிரைவ் அல்லது AWD (அதிக சக்திவாய்ந்த என்ஜினில் தேர்வுக்கு உட்பட்டது)
- ஸ்டைலான ஸ்டீல் வீல்
- ஸ்போர்ட்டியான அலுமினியம் அலாய் வீல்கள் (தேர்வுக்குட்பட்டது)
- ஸ்போர்ட்டி பெர்ன்ட் ரெட் ஃபேப்ரிக் (AWD உடன்)
- மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உடன் கூடிய ஆல்போர்டு ட்ரிப் கம்ப்யூட்டர்
- மீடியாNAV சிஸ்டம் உடன் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் (தேர்வுக்குட்பட்டது)
- முன்பக்க மற்றும் பின்பக்க 12 V உபரி பாக சாக்கெட்
- வெளிபுற தட்பவெப்ப நிலை டிஸ்ப்ளே
- ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள் (தேர்வுக்குட்பட்டது)
இசை விரும்பிகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கு இது ஏற்றது. மேலும் அதிக சக்தி வாய்ந்த என்ஜினை பெற விரும்புகிறவர்களும் RxL வகையை தேர்வு செய்யலாம். ஏனெனில் RxE மாடலில் இது அளிக்கப்படுவதில்லை.
3. RxZ வகை: ரூ.13.1 லட்சம் முதல் 14.4 லட்சம் வரை
டஸ்டரின் உயர்ந்த வகையாக இதில், அதிக சக்தி வாய்ந்த என்ஜின் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது. இதில் உள்ள சில உயர்தர அம்சங்கள் பின்வருமாறு:
- இரட்டை ஏர்பேக்குகள்
- ஸ்போர்ட்டி அலுமினியம் அலாய் வீல்கள்
- அந்திராக்சிட் அலாய் வீல்கள் (AWD-யில் மட்டும்)
- முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர் ஸ்கிட் பிளேட்
- கிரோம் பினிஷ் பார்க்கிங் பட்டன்
- க்ரூஸ் கன்ட்ரோல் உடன் ஸ்பீடு லிமிட்டர்
- கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
- இகோ மோடு
- விளைவை உணரும் (இம்பேக்ட் சென்ஸிங்) ஆட்டோ டோர் அன்லாக்
- ஸ்பீடு உணரும் ஆட்டோ டோர் லாக்
- இன்டிக்ரேட்டடு டச்ஸ்கிரீன் மீடியாNAV (தேர்வுக்குட்பட்டது)
- பின்பக்க AC (தேர்வுக்குட்பட்டது)
விளைவை உணரும் ஆட்டோ டோர் அன்லாக் மற்றும் ஸ்பீடு உணரும் ஆட்டோ டோர் லாக் உள்ளிட்ட உயர்தர அம்சங்களால் நிறைந்து காணப்படும் இந்த உயர்தர வகையில், உங்களின் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful