ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிள் நவம்பரில் அறிமுகமாகிறது
லேண்டு ரோவர் ரேஞ்ச் rover evoque 2016-2020 க்காக அக்டோபர் 06, 2015 11:33 am அன்று bala subramaniam ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
உலகின் முதல் ஆடம்பரமிக்க கச்சிதமான மாற்றத்திற்குட்பட்ட SUV-யான ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிள் கார், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்ஜில்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கரடுமுரடான பகுதிகள், சிரமத்துடன் கடக்கும் நீர்நிலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் கன்வெர்டபிள் கார் ஈடுபடுத்தப்பட்டதை காட்டும் வீடியோவை ரேஞ்ச் ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உயர்தரமான ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு தொழில்நுட்பங்களை தாங்கி வரும் ரேஞ்ச் ரோவர் இவோக், இங்கிலாந்தில் உள்ள லெஜன்டரி ஈஸ்ட்னர் கேஸ்டில் எஸ்டேட்டில் தனது இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றத்திற்குட்பட்ட SUV-வின் விற்பனை, 2016-ன் வசந்தகாலத்தில் இருந்து துவங்கும்.
இது குறித்து, லேண்ட் ரோவர் வாகன இன்டிகிரிட்டி மூத்த என்ஜினியரான மைக் கிராஸ் கூறுகையில், “எந்த மாதிரியான நிலப்பகுதியாக இருந்தாலும், அதற்கேற்ப வாகனங்களை தயாரிப்பதில் முன்னோடியாக இருக்கிறோம் என்பதில் லேண்ட் ரோவர் நிறுவனம் பெருமை அடைகிறது. இவோக் கன்வெர்டபிளில் கூட அதில், எந்த மாற்றமும் இல்லை. புதுமையான என்ஜினியரிங் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இவோக் கன்வெர்டபிள், உலகம் முழுவதும் சோதிக்கப்பட்டுள்ளதால், சக்தி வாய்ந்த மற்றும் நிச்சயமான ஒரு SUV-யின் அனுபவத்தை அளிக்கும். எனவே நாங்கள் அதை, “எல்லா காலநிலைகளுக்கும் ஏற்ப மாற்றத்திற்கு உட்பட்டது” என்று அழைக்கிறோம்” என்றார்.
ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிளுக்கு, இங்கிலாந்து அரசின் மண்டல வளர்ச்சி நிதியின் (RGF) ஆதரவு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், அரசின் RGF சுமார் 3 பில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 100,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி RGF-ன் ஆதரவு இல்லாமல் ரவுண்ட் 6 மற்றும் 7 ஆகியவற்றில் 56 புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல் என்ற வகையில், 63 திட்டங்கள் மற்றும் செயல்முறை திட்டங்களை வகுத்து அதற்காக 297 மில்லியன் பவுண்ட்களை அளித்துள்ளது. மேலும் கூடுதலாக 1.5 பில்லியன் பவுண்ட் நிதியை தனியார் முதலீடாகவும் வெளியிட உள்ளது.