ஹூண்டாய் கிரிடாவின் அறிமுகத்திற்கு பிறகும் மாருதி எஸ்-கிராஸ் அதே உத்வேகத்துடன் எதிர்பார்க்கப்படுகிறதா?
published on ஜூலை 31, 2015 10:58 am by raunak for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: பல மாதங்களுக்கு முன்னமே ஹூண்டாய் கிரிடா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி சுசுகி எஸ்-கிராஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. எஸ்-கிராஸ் உடன் ஒப்பிடும் போது, கிரிடா வாகன சந்தையில் அசுர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது உண்மையிலும் உண்மை. ஏற்கனவே எதிர்பார்த்தது போல, கொரியன் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம், தனது சிறந்த தயாரிப்பிற்கு கொஞ்சம் அதிக விலை நிர்ணயித்து, அதன்மூலம் அதிக வருமானத்தை ஈட்டியது. அதே நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி-சுசுகி நிறுவனத்திடம் இருந்து அடுத்த வாரம் அறிமுகமாக உள்ள எஸ்-கிராஸ், சாதாரணமான ஏதோ ஒரு பொருள் போல இருக்காது.
பார்வைக்கு மற்றும் சாலையில் செல்லும் அனுபவம் ஆகியவற்றை வைத்து பார்க்கையில் கிரிடாவிற்கே முழு மதிப்பெண்களும் கிடைக்கும். இதில் எஸ்-கிராஸ் கொஞ்சம் பின்தங்குகிறது. இதிலிருந்து இயந்திர பாகங்களையும், அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கையில், எஸ்-கிராஸ் நிச்சயம் சிறந்ததாக தோன்றுகிறது. தற்போது பியட்டின் 1.6 மல்டிஜெட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுவது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் இத்தாலி வாகன தயாரிப்பாளர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த 1.6 மல்டிஜெட்டை இவர்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்தனர். இதில் உள்ள ஆயில் பர்னர் சிறியது போல இருந்தாலும் சக்தியை அளிக்கும் போது, 320 என்எம் டார்க் என கொப்பளிக்கிறது. இது கிரிடாவின் 1.6 சிஆர்டிஐ விட 60 என்எம் அதிகம் பெற்றுள்ளது அபாரம். மேலும் ஆல்-ஆரவுண்டு டிஸ்க் பிரேக், முன்பகுதி காற்றோட்டம், பின்புற திட தன்மை ஆகியவை கொண்டு எல்லா சக்தியையும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் கிரிடாவில் பின்புற டிஸ்க்குகள் இல்லை.
அதற்கும் மேலாக, 300 என்எம் டார்க் கொண்டுள்ள எஸ்-கிராஸ், கிரிடாவுடன் ஒப்பிட்டால் லிட்டருக்கு அதிக கிலோமீட்டர்களை தருகிறது. இது மாருதி அல்லவா – நீண்டகாலம் வாழ எண்ணம் கொண்டது, “எத்தனை கிலோமீட்டர்கள் கிடைக்கும்!” என்ற கேள்விக்கு நிச்சயம் பதில் உண்டு. ஏஆர்ஏஐ சான்றிதழ் பெற்றுள்ள கிரிடா 1.6லி சிஆர்டிஐ, லிட்டருக்கு 19.67 கி.மீ தருகிறது. கிரிடா 1.4லி சிஆர்டிஐ லிட்டருக்கு 21.38 கிமீ தருகிறது. மறுபுறம் மாருதி எஸ்-கிராஸ் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர்களை கடக்கிறது. 1.6லி டிடிஐஎஸ் லிட்டருக்கு 22.7 கிமீட்டரும், 1.3லி டிடிஐஎஸ் லிட்டருக்கு 23.65 கிமீட்டரும் அளிக்கிறது.
இதையெல்லாம் விட நான் மேலே கூறியது போல, எஸ்-கிராஸ் உடன் ஒப்பிட்டால் பார்த்தவுடன் கவருவதில் கிரிடா, பல மைல்களை தாண்டி செல்கிறது. இதற்கு உள்ள செழிப்பான மற்றும் கவரும் தன்மைக்கு முன்னால், எஸ்-கிராஸின் முன்பக்க விளக்குகளை பெரியதாக கொண்டு மாடு போல இருக்கும் தன்மையை ஒப்பிட்டால், முற்றிலும் வேறுபட்டதாக தெரியும். மங்கிய பழுப்பு நிறம் கொண்ட அலோய்கள் மற்றும் நிழல் போன்ற எழுச்சி ஆகிய தன்மைகள் எஸ்-கிராஸுக்கு அவ்வளவாக உதவாது.
மாருதியின் தயாரிப்பில் இருந்து அது எந்த வகையிலும் ஹூண்டாயை போல தயாரிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. இதை அவர்கள் ‘பிரிமியம் கிராஸ்ஓவர்’ என்று அழைக்கின்றனர். இதில் கீழ்க்கண்ட சிறப்புகளான குரூஸ் கட்டுப்பாடு (முதலில் ஒரு பிரிவில்), பை-சினான் ஹெச்ஐடி ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் (இதுவும் முதலில் ஒரு பிரிவில்), அனைத்தும் கருப்பு கோடுகள் கொண்ட தோல் அமைப்பு, நெவிகேஷன் மற்றும் தரமான இரட்டை ஏர்பேக் கொண்ட 7 இன்ச் டச்ஸ்க்ரீன் (அடிப்படையில் ஓட்டுநர் ஏர்பேக் மட்டுமே) மற்றும் எல்லா நெக்ஸா அனுபவங்களையும் உட்படுத்தி, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதையெல்லாம் கொண்டு பார்த்தால் உண்மையில் இது பிரிமியம் கிராஸ்ஓவர் தான்! மேலும் இது உங்கள் தகவலுக்காக, கிரிடாவை ஒரு ‘தலைசிறந்த எஸ்யூவி‘ ஆக ஹூண்டாய் களமிறக்கி உள்ளது. ஆனால் அது மென்மையானது என்பதற்கு சொர்க்கமே சாட்சி. எனவே கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற ஒரு ‘தலைசிறந்த எஸ்யூவி’யை போல இதை பயன்படுத்த முடியாது. எது, எப்படியோ, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அதாவது அடுத்த வாரம் மாருதி தனது எஸ்-கிராஸை வெளியிட்டால், எல்லா விஷயங்களும் தெள்ளத் தெரிவாக தெரிந்துவிடும். இதில், மாருதியின் அறிமுக கிராஸ்ஓவரான இதன் விலை நிர்ணயம் முக்கிய பங்கு வகிக்கும்.