புது பொலிவுடன் போலோ பண்டிகைக்கு தயாராகிவிட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?  

published on செப் 08, 2015 04:41 pm by manish for வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தீபாவளி பண்டிகை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைத்து கார் தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை ஈற்பதற்கென்றே பல விதமான சலுகைகளை அள்ளித் தெளிக்கின்றனர். இதே போல, VW நிறுவனமும் தனது சிறிய ஹாச்பேக் ரக போலோ காரின் புதிய வேரியான்ட்டை, ஆரம்ப மும்பை ஷோரூம் விலையாக ரூபாய் 5.24 லட்சத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்நிறுவனம், கூடுதலாக சில சிறப்பம்ஸங்களை இந்த காரில் பொறுத்தியுள்ளது. இந்த புதிய ரக கார், சென்ற செப்டெம்பர் 1, 2015 அன்று, நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புண்டோ அபார்த் மற்றும் புதிய புதுப்பிக்கப்பட்ட போலோவும், அதிகரித்து வரும் போட்டியில் இந்த நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

அடிப்படை போலோ மாடல்களில், சொகுசாக செல்லவும், நவீனமாக பயனிக்கவும் ட்ரெண்ட்லைன் மற்றும் கம்போர்ட் லைன் திருத்தங்கள்; மற்றும் பின்புறத்தை காட்டும் விங் மிர்ரரில், திரும்பும் போது எரியும் டர்ன் இன்டிகேட்டர் விளக்குகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உயர்தர மாடல்களில் மின்முறையில் மடக்கக் கூடிய ORVM –உடன் வரும், திரும்பும் போது எரியும் இன்டிகேட்டர் விளக்குகள்; குளிரூட்டப்பட்ட கிலோவ் பகுதி; மற்றும் வேகத்தை சீர் செய்யும் க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்பு போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பம்ஸங்கள், அனைத்து விதமான போலோ வரிசை கார்களிலும் கிடைக்கின்றன. இஞ்ஜின்கள் 1.2 லிட்டர் MPI, 1.2 லிட்டர் GT TSI, 1.5 லிட்டர் TDI மற்றும் 1.5 லிட்டர் GT TDI என்று, மாடலுக்கு ஏற்றார்போல பொருத்தப்படுகின்றன. மெக்கானிக்கல் ரீதியாக பார்க்கும் போது, இந்த கார் எந்தவிதமான மாற்றமும் பெறவில்லை. அதே விதமான செயல்திறன்களையே பெறுகின்றன.

போலோவின் க்ராஸ் ஓவர் ரகமான க்ராஸ் போலோ காரிலும், பெட்ரோல் மற்றும் டீசல் ரகங்களிலும், இதே விதமான மாற்றங்களே இடம்பெறுகின்றன.

வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்திய விற்பனையின், வோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் பிரிவு இயக்குனரான மைக்கேல் மேயர், இந்த மேம்பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, “இந்த புதிய போலோவின் மூலம், மேம்படுத்திய ஓட்டும் வசதியை எங்கள் வாடிக்கையாளர்கள் பெறுவர். பண்டிகை காலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அம்சங்கள், பகுத்தாராய்ந்து கார் வாங்குவோரை நிச்சயமாக ஈர்க்கும் என்று நம்பிக்கையாக உள்ளோம்...” என்று கூறினார்.

2015 VW போலோ 1.2 MPI – ரூபாய் 5.23 லட்சம் முதல்

2015 VW போலோ 1.5 TDI – ரூபாய் 6.55 லட்சம் முதல்

2015 VW க்ராஸ் போலோ 1.2 MPI – ரூபாய் 7.04 லட்சம் முதல்

2015 VW க்ராஸ் போலோ 1.5 TDI – ரூபாய் 8.31 லட்சம் முதல்

2015 VW போலோ GT TSI – ரூபாய் 8.41 லட்சம் முதல்

2015 VW போலோ GT TDI – ரூபாய் 8.41 லட்சம் முதல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience