இ -ட்ரோன் குவாட்ரோ கான்செப்ட்கார்களின் வரைபடத்தை ஆடி நிறுவனம் வெளியிட்டது.

published on ஆகஸ்ட் 20, 2015 04:03 pm by manish

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் புதிய கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளது. அந்த காரின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இ -ட்ரோன் குவாட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் அடுத்த மாதம் நடக்க உள்ள ப்ரேன்க்பார்ட் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2018 ஆம் ஆண்டு அறிமுகமாக உள்ள Q6 கார்களின் உற்பத்தியானது சற்று குறைவான அளவின் உற்பத்தி செய்யப்படும் இந்த இ -ட்ரோன் குவாட்ரோ கார்களை பொறுத்தே அமையும். ஆடி நிறுவனம் வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த கான்செப்ட் கார்கள் தயாரிப்பில் இருந்த நேரத்தில் இந்த காரைப் பற்றி குறிப்பிடுகையில் C – BEV என்ற சங்கேத குறியீட்டைக் கொண்டே இந்த காரின் பெயரைக் கூறியது. இந்த கார் முழுதும் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி பிரிவை சேர்ந்ததாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு இந்த கார் அறிமுகமாகும் போது டெஸ்லா - எக்ஸ் கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கான்செப்ட் காரானது தன்னுடைய மின்சார செலுத்தும் சக்தியை மற்ற பாகங்களுடன் சேர்ந்து மிக சமீபத்திய R8 E - tron என்ஜின் மூலம் பெறுகிறது. இந்த எஸ்யூ வி யில் மொத்தம் 3 சக்திவாய்ந்த மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்று கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு மற்ற இரண்டும் பின் புற சக்கரத்தில் தனித் தனியாக சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. ஆடி நிறுவனத்தின் கூற்றுப் படி இந்த கார் 500 குதிரை சக்தியை வெளியிடும் அளவுக்கு இயங்கும்.

கடந்த நவம்பர் மாதமும் ஆடி நிறுவனம் திகைப்பூட்டும் வகையில் ப்ரோலோக் என்ற பெயரில் ஒரு கான்சப்ட் கரை வெளியிட்டது. அந்த கார் முரட்டுத்தனமான முன் பகுதியில் முரட்டுத்தனமான ஒற்றை கிரில் பொருத்தப்பட்டு இந்த கான்சப்ட் காரை விட சற்று அகலமாகவும் உயரம் குறைவாகவும் இருந்தது. அந்த கம்பீரமான முன்புற கிரில் அமைப்பு அந்த கான்சப்ட் கான்சப்ட் காருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. முகப்பு விளக்குகள் புதிய கிராபிக் உடனும் லேசர் லைட் மற்றும் ஆடி மேட்ரிக்ஸ் பீம் - ச்ப்ளிடிங் என இரண்டு தொழில்நுட்பங்கள் ஈனைந்து உருவாக்கப்படிருந்தன.

அந்த ப்ரோலோக் கான்செப்ட் கார் ஆடியின் 4.0 லிட்டர் TFSI மில், மூலமாக சக்தியூட்டப்பட்டது. இந்த என்ஜின் 605 பிஎச்பி யையும் 753 என்ற அளவுக்கு அதிகபட்ச முறுக்கு விசையையும் வெளியிட வல்லது. மேலும் எட்டு - வேக டிப்ட்ரானிக் தானியங்கி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால் 0 வில் இருந்து 100 கி.மீ வேகத்தை இந்த கார் வெறும் 3.7 நொடிகளில் அடைந்து காற்றைப்போலபறக்கிறது.  

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience