• English
  • Login / Register

நிசான் இந்திய நிறுவனம் தனது புதிய உதிரி பாகங்கள் பகிர்மான மையத்தை தொடங்கியுள்ளது.

published on ஜூலை 18, 2015 04:55 pm by அபிஜித்

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியா தனது இந்திய செயல்பாடுகளை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக புத்தம்புதிய உதிரி பாகங்கள் பகிர்மான மையத்தை (பிடிசி) ஹரியானா மாநிலத்தில் உள்ள லுஹாரி என்னும் இடத்தில் நிறுவி உள்ளது. இந்த மையமானது இந்தியாவின் வட பகுதி மாநிலங்கள் பெரிதும் பயன் பெரும் வகையில் பிரத்யேகமாக வட இந்தியாவிற்காகவென்றே அர்பணிக்கப்படுகிறது.சுமார் 9,050 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது வாடிக்கையாளர்களின் நிசான் உதிரி பாகங்களுக்கான தேவையை மிக லாவகமாகவும் துரிதமாகவும் பூர்த்தி செய்கிறது.

இந்த புத்தம் புதிய உதிரி பாகங்களுக்கான மையத்தை (பிடிசி) பற்றி நிஸ்ஸான் மோட்டார் இந்தியா பி.லிமிடெட்டின்(என்ஐஎம்பிஎல்) இந்திய நிர்வாக இயக்குனர் திரு, அஷோக் மல்ஹோத்ரா பின்வருமாறு குறிபிடுகிறார். “ எங்களுடைய இந்த பிராந்திய பகிர்மான மையம்(Distribution Centre) வட இந்திய பகுதிகளில் விற்பனைக்கு பிந்தைய எங்களது சேவை சம்மந்தமான செயல் பாடுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும். விற்பனைக்கு பிந்தைய சேவையும் குறித்த நேரத்தில் தரமான உதிரி பாகங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் தான் வெற்றிக்கான மிக முக்கியமான விஷயங்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த புதிய பிராந்திய மையமானது துரிதமாகவும் வாடிக்கையாளரின் உடனடி நிசான் வாகன உதிரி பாக தேவைகளையும் சட்டென நிறைவேற்றி அவர்களை திருப்தி படுத்தும்” என்று கூறினார்.

மேலும் இந்த பிடிசி யில் பல்முனை மென்பொருள் அமைப்பு (மல்டி டிபோ சாப்ட்வேஇத்தகைய நடவடிக்கைகள் ர் சிஸ்டம்) பயன் படுத்தப்படுகிறது. இந்த மென்பொருள் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை பெறுதல் மற்றும் அதனை சரியான நேரத்தில் விநியோகித்து பூர்த்திசெய்தல் போன்ற செயல்களை வகு லாவகமாகவும் எந்த வித தடங்கலும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. நிஸ்ஸான் நிறுவனத்தின் உதிரி பாகங்கள் பகிர்மான மையம் (பிடிசி) முதல் முதலாக இந்த வருட துவக்கத்தில் தான் சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த பகிர்மான மையம் தான் நிஸ்ஸான் நிறுவனத்தின் மிகப்பெரிய பகிர்மான மையம் என்பதும் ஒரு கூடுதல் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்த நடவடிக்கைகள் விற்பனைக்கு பிந்தைய சேவையில்(சர்வீஸ்) நிசான் இந்தியா நிறுவனம் தான் மிகச்சிறந்தது என்று வாடிக்கையாளர்களை பேச வைக்கும் என்பது உறுதி.   

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience