ஆட்டோ எக்ஸ்பே ா 2016-க்கு, நிசான் GT-R சீறிப் பாய்ந்து வருகிறது
published on ஜனவரி 14, 2016 03:04 pm by cardekho for நிசான் ஜிடிஆர்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒவ்வொரு உண்மையான டிரைவிங் ஆர்வலரின் கனவும், மற்ற எல்லா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர்களின் நெடுநாள் ஆசையுமாக, நிசான் GT-R என்ற கார் திகழ்கிறது. இது, மணிக்கு 0-100 கி.மீ முடுக்குவிசையை எட்டும் நேரத்தில், மற்ற எல்லா சூப்பர் கார்களுடனும் போட்டியிட்டு, அவற்றை பின்னுக்கு தள்ளி வெட்கப்படுத்துகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு இதன் அறிமுகம் நடைபெற்ற பிறகு, முடுக்குவிசை மற்றும் கார்னரிங் ஆகியவற்றிற்கு GT-R, ஒரு அளவுகோலாக மாறிவிட்டது. இந்த காரின் சிறப்பு எப்படிப்பட்டது என்றால், ஃபாஸ்ட் அண்டு ஃபியூரியஸ் 6 திரைப்படத்தின் கடைசி ரேய்ஸில், டாமினிக் டேரிட்டோவின் டோட்ஜ் சேலன்ஜர் SRT-க்கு எதிராக, பிரையன் ஓ கோன்னர் இதில் தான் களமிறங்குவார். முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டது போல, இந்த அக்னி கக்கும், சேற்றை வாரி இறைத்து செல்லும் கார், இந்த ஆண்டு இந்தியாவிற்குள் நுழையலாம் என்று தெரிகிறது. அடுத்து வரவிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில், ஆடியின் புதிய R8-க்கு போட்டியாக, இந்த GT-R-யை நிசான் காட்சிக்கு வைக்க உள்ளது. அப்படி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இதற்கு ரூ.2 கோடியை ஒட்டி விலை நிர்ணயிக்கப்பட்டு, ஆடி மட்டுமின்றி போர்ஸ் 911-க்கும் எதிராகவும் போட்டியிடும். இந்த காரை ஃபையர், ஃபோம் மற்றும் ஃபைனீஸ் என்ற 3 F-வார்த்தைகளை கொண்டு, சுருக்கி கூற முடியும்.
ஃபையர்
இது குறித்து நிசானின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “GT-R-ன் என்ஜின் கூட்டிணைப்பு பணி, உலகின் 4 தலைசிறந்த கலைஞர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் டாகுமி என்று அறியப்படுகின்றனர். ஒரு தலைசிறந்த கலைஞர் தனது கடும்உழைப்பு மற்றும் சமர்ப்பணத்தை பல ஆண்டுகளாக செலுத்தி, தனது திறமைகளை சிறப்புடையதாக மாற்றுகிறார் என்பதை குறிப்பதற்கு, இந்த ஜப்பானிய வார்த்தை பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. மேற்கூறிய டாகுமியினால் கூட்டிணைக்கப்பட்ட என்ஜின்கள் 3.8-லிட்டர் ட்வின் டர்போ V6 அமைப்பாக, 6,400 rpm-ல் 554 bhp வெளியீடையும், 3,200 இருந்து 5,800 rpm-க்கு இடைப்பட்ட நிலையில், 632 Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. இந்த கட்டுக்கடங்கா ஆற்றலை, ஒரு 6-ஸ்பீடு டயல் கிளெச் டிரான்ஸ்மிஷன் வழியாக, ஒரு தனிப்பட்ட டிரான்ஸாக்சில் 4WD-க்கு அளிக்கப்படுகிறது. இந்த காரின் முழு ஆற்றலையும் நிலத்தில் காட்ட அதற்கு உதவும் வகையில், இதில் ஒரு LSD (லிமிடேட் சிலிப் டிஃப்பரன்டியல்) நிறுவப்பட்டுள்ளது. இதன் காரின் அதிகபட்ச வேகமாக மணிக்கு 315.4 கி.மீ வரை எட்டும் நிலையில், மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்ட இதற்கு 2 வினாடிகள் போதுமானது.
ஃபார்ம்
“துல்லியமான கட்டமைப்பு: அசம்பிள் செய்யும் போது, பாடி பேனல்கள் மற்றும் கூறுகளை துல்லியமான இடத்தில் நிறுத்த “ஜீக்ஸ்” –அதாவது துணைச் சாதனங்கள் பயன்படுத்தபட்டன. அதிர்வு சோதனை (வைபிரேஷன் டெஸ்ட்டிங்), லேசர் அளவீடுகள் செய்யப்பட்டு, அதில் உயர் தரமான துல்லியம் மற்றும் கூட்டணைப்பில் துல்லியம் ஆகியவற்றை பெற்று, நீண்டகால செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது”. வெறும் 0.26 கோஎஃப்பிஷன்டு கொண்டுள்ள GT-R, உலகிலேயே அதிக ஏரோடைனாமிக்ஸிற்கு எதுவான ஸ்போர்ட்ஸ் காரில் ஒன்றாகும். முன்பக்கத்தில் கருப்பு கிரில் மற்றும் ஒரு GT-R பேட்ஜ் ஆகியவற்றை முக்கிய அம்சமாக கொண்டு ஒரு பெரிய முன்பக்க முகத்தை பெற்றுள்ள இந்த கார், குறிப்பிடத்தக்க ஜப்பானிய ஸ்டைலில் அமைந்திருந்தாலும், ஒரு நவீன தோற்றத்தை பெற்றுள்ளது. பூட் உடன் சரியாக பொருந்தும் ஒரு சரியும் ரூஃப்லைன் உடன் கருப்பு A-பில்லர்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு பின்பக்க சிறகு (விங்) கூடுதல் ஸ்போர்ட்டி தன்மையை அளித்து, அதிவேகத்தின் போது, தேவைப்படும் டவுன்ஃபோர்ஸை அளிக்கிறது. பின்புறம் 4 பெரிய வட்ட டெயில் லைட்களால் ஆளப்பட்டு, அவை கிரோமில் மூழ்கிய 4 எக்சாஸ்ட் டிப்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஃபைன்னஸ்
GT-R-ன் உள்புற அமைப்பியல், எந்த ஒரு துருப்புச்சீட்டு காரையும் வென்றுவிடும் தன்மையை காண முடிகிறது. கியர் லீவரின் பின்புறத்தில் புஷ் பட்டன் ஸ்டார்ட் அமைக்கப்பட்டிருப்பதால், இதன் ஸ்போர்ட்ஸ் தன்மை அதிகரிக்கிறது. டேஸ்போர்டு வழக்கமானது என்றாலும், அதில் AC மற்றும் மியூசிக் பட்டன்கள் மற்றும் காரில் நடைபெறும் இயந்திரவியல் செயல்பாடுகளை விளக்கும் ஒரு பெரிய டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டு, நவீனமாக தோற்றம் அளிக்கிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரை பொறுத்த வரை, பழைய மற்றும் நவீன என்ற இரு வகையான டிஜிட்டல் காரியங்களின் கூட்டு கலவையாக உள்ளது. டிரைவருக்கு உதவும் வகையில், ஸ்டீயரிங்கில் அதிகளவிலான கன்ட்ரோல்கள் காணப்படுகின்றன. செயல்பாடுகளை குறித்த தகவல்களை டேஸ்போர்டு ஸ்கிரீன் டிஸ்ப்ளே அளிக்கிறது. நேரத்திற்கு ஏற்ப கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே, இதன் செயல்திறன், கார்னரிங், முடுக்குவிசை மற்றும் புவிஈர்ப்பு விசை குறித்த தகவல் ஆகியவற்றை காட்டும் இது, ஒரு உள்ளுணர்வு அமைப்பு ஆகும்.
மேலும் வசிக்க
0 out of 0 found this helpful