நிஸ்ஸான் நிறுவனம் கிக்ஸ் க்ராஸ்ஓவர் வாகனங்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளதை உறுதி செய்தது.
published on ஜனவரி 08, 2016 11:00 am by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
காம்பேக்ட் க்ராஸ்ஓவர் பிரிவு வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருகி வரும் வரவேற்பை பார்க்கையில் , நிஸ்ஸான் நிறுவனம் இந்த வாகனத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்
இலத்தீன் அமெரிக்காவில், கிக்ஸ் க்ராஸ்ஓவர் கன்செப்ட்டின் தயாரிப்பு வெர்ஷன் ஒன்றை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த போவதாக நிஸ்ஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தயாரிப்பு வெர்ஷன் கிக்ஸ் என்று அழைக்கப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் இலத்தீன் அமெரிக்க நாட்டு கார் சந்தைகளில் தொடங்கி பின் படிப்படியாக உலகம் முழுதும் இந்த க்ராஸ்ஓவர் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
“ முதல் க்ராஸ்ஓவர் வாகனங்களை 2003 ஆம் ஆண்டு முரானோ என்ற பெயரில் நிஸ்ஸான் புதிதாக அறிமுகப்படுத்தியது " என்று நிஸ்ஸான் மோட்டார் கம்பனி லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் கோஷ் கூறியுள்ளார்.
“ அன்று முதல் உலக அளவில் க்ராஸ்ஓவர் பிரிவில் ஜூக், கஷ்காய் மற்றும் X - ட்ரேயில் போன்ற மாபெரும் தனித்துவமிக்க வெற்றி படைப்புக்களை தயாரித்து அளித்து முன்னணியில் இருந்து வருகிறது நிஸ்ஸான் நிறுவனம். இந்த புதிய கிக்ஸ் வாகனங்கள் , க்ராஸ்ஓவர் பிரிவில் எங்கள் நிறுவனத்திற்கு உள்ள தேர்ந்த , தனித்துவமிக்க நிபுணத்துவத்தை உலகின் பல பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும்" என்று மேலும் பேசுகையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள நிஸ்ஸான் நிறுவனத்தின் க்ளோபல் டிஸைன் சென்டரின் தலைமையின் கீழ் இந்த கிக்ஸ் கான்செப்ட் வடிவமைப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சாண்டியாகோ நகரில் உள்ள நிஸ்ஸான் டிசைன் அமேரிக்கா (NDA) மற்றும் ரியோ நகரில் உள்ள நிஸ்ஸானின் மற்றுமொரு வடிவமைப்பு மையமான நிஸ்ஸான் டிஸைன் அமெரிக்கா - ரியோ ஆகியவற்றை சேர்ந்த வல்லுனர்களும் ஒன்றாக இணைந்து தயாரிப்பு மாடலை உருவாக்குவதில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். 2014 ஆம் நடந்த சாவ் போலோ மோட்டார் ஷோ மற்றும் 2015 ல் நடந்த ப்யுநஸ் ஏயர்ஸ் மோட்டார் ஷோவிலும் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கிக்ஸ் க்ராஸ்ஓவர் வாகனங்களின் கான்செப்ட் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றதாலேயே அதன் தயாரிப்பை தொடங்க நிஸ்ஸான் முடிவு செய்து களமிறங்கி உள்ளது. இந்த கார்கள் பற்றிய வேறு எந்த வித தகவலையும் நிஸ்ஸான் வெளியிடவில்லை. இருப்பினும் ரெனால்ட் - நிஸ்ஸான் கூட்டு தயாரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த வாகனங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், எக்ஸ் - ட்ரேயில் SUV வாகனங்களை வரும் 2016 பிப்ரவரியில் நடக்க உள்ள ஆட்டோ ஷோவில் நிஸ்ஸான் மறு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் ப்ரீமியம் SUV பிரிவில் உள்ள வாகனங்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த பிரிவில் தனது பிரதான எதிரியான ஹோண்டா CR-V வாகனத்தை சமாளிக்க நிஸ்ஸான் நிறுவனம் எக்ஸ்- ட்ரெயில் வாகனங்களின் ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றை வெளியிடும் என்ற வதந்திகளும் உலவுகின்றன.
மேலும் வாசிக்க