2016 ஆட்டோ எக்ஸ்போவில் X-ட்ரெயில் SUV-யை, நிசான் அறிமுகம் செய்கிறது
published on நவ 23, 2015 06:14 pm by nabeel for நிசான் எக்ஸ்-டிரையல்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்த ஜப்பான் நாட்டு வாகன தயாரிப்பாளர் வெளியிட்ட நிசான் X-ட்ரெயில், பிரிமியம் SUV-களில் சேர்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இதை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், சில உள்ளான காரணங்களால் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இந்த SUV, வாடிக்கையாளர்கள் இடையே பெரியளவில் பிரபலமடைய தவறியதால் இதன் தயாரிப்பு கைவிடப்பட்டது.
இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் மோட்டார் ஷோ 2015 (IIMS 2015)-ல் நிசான் X-ட்ரெயிலின் இந்த மூன்றாம் தலைமுறை வாகனத்தை நிசான் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. இந்த இந்தோனேஷியா மாடலில் ஒரு 2.0-லிட்டர் நேரடி-இன்ஜெக்டேட் 4-சிலிண்டர் என்ஜின் மூலம் 144 PS ஆற்றலையும், 200 Nm முடுக்குவிசையையும் பெறலாம் அல்லது ஒரு 2.5-லிட்டர் MPI 4-சிலிண்டர் என்ஜின் மூலம் 171 PS ஆற்றலையும், 233 Nm முடுக்குவிசையையும் பெற முடியும். இதில் 2.5 லிட்டர் என்ஜின், ஒரு எக்ஸ்ட்ரோனிக் CVT உடன் பொருத்தப்பட்ட நிலையில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் என்ஜின், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஒரு எக்ஸ்ட்ரோனிக் CVT ஆகிய இரு தேர்வுக்குரிய வகையில் கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் கார்களில் பெரும்பாலும் ஒரு நிசான் 2.0 DCi மோட்டாரை கொண்டு, அது ஒரு CVT கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்ட நிலையில் கிடைக்கலாம்.
இந்த காரின் தோற்றத்தில், ஸ்லிம் ஹெட்லேம்ப்கள் ‘V-மோஷன்’ கிரில், C-வடிவிலான டெயில்லேம்ப்கள் மற்றும் D-பில்லர் கின்ங் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த கார், ஆட்டோ ஹெட்லைட்கள், ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல் மற்றும் LED டேடைம் ரன்னிங் லேம்ப்கள் ஆகிய அம்சங்களை தாங்கி வருகிறது. இதை தவிர உயர்தர வகையில், சிறப்பான டோர் மிரர்கள், முழு- LED ஹெட்லைட்கள், கீலஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமெட்டிக் வைப்பர்கள், டயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக்கலி பவர்டு முன்புற சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 18-இன்ச் வீல்கள், லேதர் சீட்கள் மற்றும் அரவுண்ட் வ்யூ மானிட்டர் ஆகிய அம்சங்கள் கூடுதலாக காணப்படுகிறது. செவ்ரோலேட் ட்ரெயில்ப்ளேஸர் காருக்கு எதிராக போட்டியிடும் வகையில் இந்த காருக்கு விலை நிர்ணயிக்கப்படலாம். தற்போது இந்தியாவில் பிரிமியம் SUV-கள் என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவு என்பதால், எல்லா வாகன தயாரிப்பாளர்களும் இதன் பலனை பெற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்