இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016: நிசான் தயாரிப்புகளை குறித்த விவரம்
published on பிப்ரவரி 01, 2016 06:07 pm by அபிஜித்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் நிசான் நிறுவனத்தை ஒரு சிறந்த வெளியீட்டாளர் என்று கூற முடியுமா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். உண்மையை கூறினால், அந்நிறுவனத்தை சிறப்பான ஒன்று எனலாம். அரினாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஸ்டாலை சென்று பார்த்தால், காட்ஸ்வில்லா என்ற பெயரில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய GT-R கார், அங்கே நிறுத்தப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதன் பக்கத்திலேயே புதிய X-ட்ரெயில் மற்றும் நிசான் பேட்ரோல் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவிற்கான அதன் தயாரிப்பு வரிசையை வெளியிடுவதில், இந்த தயாரிப்பாளர் சிரமப்பட்டு வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் அதன் தற்போதைய எந்த காரும் நிர்ணயிக்கப்படும் இலக்கை எட்டிச் சேர்வதாக இல்லை. காரணம் என்னவென்றால், அவை எல்லாமே காலம் கடந்தவையாக உள்ளன. எனவே இந்தியாவில் GT-R-யின் சாகசம் மூலம் வாகன ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோருக்கு முன்பாக, தனது நிலையை உயர்த்தலாம் என்று அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே நொய்டாவில் நிசான் நிறுவனத்தின் மூலம் காட்சிக்கு வைக்கப்பட உள்ள வாகனங்களை குறித்த ஒரு வெள்ளோட்டத்தை இங்கே காண்போம்.
GT-R
இந்த காட்ஸ்வில்லா, தனது அருமையான செயல்திறன் மூலம் ஆர்வலர்களை நிச்சயம் கவரும். இதில் காணப்படும் 3.8-லிட்டர் V6 என்ஜினைக் கொண்டு, 545 bhp ஆற்றலை வெளியிடுகிறது. மேற்கண்ட ஆற்றலகம், ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் பொருத்தப்பட்டு, இதன் ஆற்றல் ஒரு ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு அளிக்கப்படுகிறது. இது ஒரு சூப்பர்காரின் செயல்திறனை மட்டும் கொண்டிருப்பதோடு நில்லாமல், GT-R-ன் தோற்றமே மக்களை மிரள வைக்கும் வகையில் உள்ளது. இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இதற்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு நடைமுறைக்கு ஒத்து போகும் ஒரு சேடனாக உள்ளது. 2-டோர் கொண்ட சூப்பர்காரான இதில், 4 பேர் உட்காரும் சீட்கள் உள்ளதோடு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொருட்களை எடுத்துச் செல்லும் வகையிலான பூட் வசதியும் உள்ளது.
X-ட்ரெயில்
மோசமான விற்பனையின் விளைவாக, கடந்த 2014 ஆம் ஆண்டு X-ட்ரெயிலை, நிசான் நிறுவனம் கைவிட்டது. ஆனால் தற்போது கரடுமுரடான பாதைகளில் ஓட்ட விரும்பும் ஆர்வலர்களின் உணர்வையும், தங்களின் நிலையையும் உயர்த்தும் வகையில், அதை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த 5-சீட்களை கொண்ட SUV-யை ஏறக்குறைய ரூ.25 லட்சம் என்ற விலை நிர்ணயத்துடன் திரும்பக் கொண்டு வரப்படலாம். ஆனால் CBU வழியில் கொண்டு வரப்பட்டால், விலையில் இன்னும் உயர்வு ஏற்படலாம். இந்த SUV-க்கு 2.0 DCi டீசல் மோட்டார் உகந்த ஆற்றலை அளிப்பதோடு, சாதாரண சாலை மற்றும் கரடுமுரடான சாலை என்ற வித்தியாசத்தில் தேர்விற்குரிய செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில், டியூனிங் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து, அதன் முன்னோடியை போலவே அதே நிலையிலான செயல்திறனை வெளிப்படுத்த, இந்த AWD செட்அப் உதவுகிறது.
பேட்ரோல்
SUV-க்களின் உருவாக்கத்தில் சர்வதேச அளவில் நிசானுக்கு நல்ல மரியாதை உள்ள நிலையில், அதன் வலிமை மிகுந்த முன்னணி தயாரிப்பு பேட்ரோல் ஆகும். இந்த மரியாதைக்கான முக்கிய காரணங்களில், இந்த பயன்பாட்டு வாகனமும் (யூட்டிலிட்டி வெஹிக்கிள்) ஒன்று. ஆடி Q7, டொயோட்டா லேண்ட் க்ரூஷர், மெர்சிடிஸ்-பென்ஸ் GL மற்றும் பல வாகனங்களுடன், இந்த பேட்ரோல் போட்டியிட உள்ளது. வசதிகளின் அடிப்படையில் பார்த்தால், இதில் நவீன இன்ஃபோடெயின்மெண்ட் / நேவிகேஷன் சிஸ்டம், டெர்ரெயின் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஸன்கள் மற்றும் பல வசதிகளை கொண்டுள்ளது.
கிக் தொழிற்நுட்பம்
ஒரு சர்வதேச அளவிலான கச்சிதமான SUV-யை கொண்டு வர வேண்டும் என்ற இந்த தயாரிப்பாளரின் கனவை, இந்த முக்கிய தொழிற்நுட்பம் நம்பியுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை, 2014 ஸா பாலோ மோட்டார் ஷோ மற்றும் 2015 பிவேநொஸ் ஏர்ஸ் மோட்டார் ஷோ என்ற இரு ஆட்டோ ஷோக்களில் காட்சிக்கு வைத்ததன் மூலம் இதற்கு அதிகளவிலான பிரபலம் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த காரை, நிசான் நிறுவனம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
மேலும் வாசிக்க