மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஹயுண்டாய் எலான்ட்ரா கொரியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது .
published on செப் 10, 2015 10:49 am by konark for ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஹயுண்டாய் எலான்ட்ரா கொரியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலக சந்தையில் இது ஆறாவது மேம்படுத்தப்பட்ட மாடல் என்றாலும் இந்தியா இது வரை ஒரே ஒரு மாடலை தான் இதுவரை பார்த்துள்ளது.
அளவுகளைப் பொறுத்தவரை இந்த புதிய அடுத்த தலைமுறை எலான்ட்ரா 20mm அளவு நீளமும் 25mm அகலமும் கூட்டப்பட்டு உள்ளது. இதனால் முந்தைய எலான்ட்ரா மாடல்களை விட இந்த மாடல் உட்புறம் அதிக இடவசதி கொண்டதாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் இந்த பிரிவு கார்களுக்கே ஒரு புதிய அளவுகோளை காட்டி இருக்கிறது என்று கூறலாம். ஒரு விமான காக்பிட் போல ஓட்டுனரைப் பார்த்தாற் போல் கண்ட்ரோல் பொத்தான்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் தரமான பொருட்களைக் கொண்டு மென் - தொடு இன்ஸ்ட்ருமென்ட் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய எலான்ட்ரா வாகனத்தில் ஸ்டீரிங் வீல் பெரிதாக பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கவில்லை. இந்த முறை அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த புதிய எலான்ட்ரா கார்களில் கூடுதல் வசதியுடனான பயணத்திற்கும் , எளிதாக கையாளுவதற்கும் ஏற்ற வகையில் சஸ்பென்ஷன் அமைப்புக்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் உட்பட மொத்தம் மூன்று மாடல்கள் கொரியன் சந்தையில் அறிமுகமாகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
1.6 VGT டீசல்: 134bhp, 30.59kgm அளவிலான டார்க் உடன், 1.6 GDi பெட்ரோல்: 130bhp, 16.41 kgm அளவிலான டார்க் உடன் 2.0 Nu பெட்ரோல் : 147bhp, 18.35kgm.
டீசல் என்ஜின் தான் இந்திய சந்தையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2லிட்டர் பெட்ரோல் என்ஜின் இந்திய சந்தையில் அறிமுகமாகாது என்றே தோன்றுகிறது. அப்படியே பெட்ரோல் எஞ்சின்கள் அறிமுகமானாலும் அது 6 - வேக கைகளால் இயக்கக்கூடிய அல்லது தானியங்கி கியர் அமைப்பு பொருத்தப்பட்டு வெளிவரும். டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை புதிய 7 - வேக DCT ட்ரேன்ஸ்மிஷன் வசதியுடன் வெளியாகும்.
0 out of 0 found this helpful