2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் தங்களது புதிய R8 கார்களை பிரதானமாக காட்சிபடுத்த உள்ளது. இன்னும் இரண்டு மாடல்களும் இடம் பெறுகின்றன.
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ள கார்களின் வரிசையில், புதிய R8 மாடல் முதன்மையானதாக இருக்கும். பிப்ரவரி 4, 2016 அன்று ஆரம்பமாகவுள்ள வாகன கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மொத்தம் 3 வாகனங்களைக் காட்சிப்படுத்தும் என்று தெரிகிறது.
முதல் முறையாக 2015 ஜெனீவா மோட்டார் ஷோ கண்காட்சியில் வெளியான இந்த புதிய R8 காரின் உள்ளே ஏராளமான மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. இதற்கு முன் வெளியான R8 மாடலின் முன்னோடிகளை ஒப்பிடும் போது, இதில் விதவிதமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால், முந்தைய மாடல்களில் இருந்த மல்ட்டிமீடியா இன்டர்ஃபேஸ் ஸ்கிரீனுக்கு பதிலாக, இப்போது 12.3 அங்குல டிஜிட்டல் ஆடி விர்ச்சுவல் காக்பிட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது, மொத்த கேபினுக்கும் புதுப் பொலிவு தருகிறது. ஓட்டுனர்கள் தங்களது தேவைக்கேற்ப இதில் உள்ள டிஸ்ப்ளேவை மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் இந்த மாடலை வெளியிடும் போது, இந்த அமைப்பு பொருத்தப்பட்டு வருமா என்பது தெரியவில்லை. முந்தைய காரின் வடிவமைப்பை எந்த விதத்திலும் மாற்றாமல், இந்த காரிலும் அதே வடிவமைப்பை இந்நிறுவனம் பின்பற்றியுள்ளது.
மக்கள் மனதில் நிலையான இடம் பெற்றுள்ள மெர்சிடிஸ் AMG GT, போர்ஷ் 911 டர்போ மற்றும் மேக்லாரன் 570S போன்ற கார்களுடன் இந்த புதிய கவர்ச்சிகரமான, ஸ்டைலான, அஜைலான கார் போட்டியிடும். R8 LMS காரில் இடம்பெற்றுள்ள உபகரணங்களில், கிட்டத்தட்ட பாதி உபகரணங்கள் இந்த காரிலும் இடம்பெறுகின்றன.
5.2 லிட்டர் V10 இஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த காரில் இரண்டு விதமான இஞ்ஜின் ஸ்பெசிஃபிகேஷன்கள் வருகின்றன. அதாவது R8 பிளஸ் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த இஞ்ஜின் வகை, அதிகபட்சமாக 610 hp திறனை உற்பத்தி செய்கிறது. அதே நேரம், மற்றொரு இஞ்ஜின் வகை, அதிகபட்சமாக 540 hp திறனை உற்பத்தி செய்கிறது.
R8 பிளஸ் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள இஞ்ஜின், 3.2 வினாடிகளில் 100 kmph வேகத்தை எட்டவும், அதிகபட்ச வேகமாக 330 kmph வரை செல்லவும் உதவுகிறது. மேலும், இந்த இஞ்ஜின் 7 ஸ்பீட் எஸ்-ட்ரானிக் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. குவாட்ரோ AWD அமைப்பு மூலம், அனைத்து சக்கரங்களுக்கும் சக்தி அனுப்பப்படுகிறது. அடுத்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட புதிய R8 கார், அனைத்து கார் பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
மேலும் வாசிக்க
2016 ஆட்டோ எக்ஸ்போ: ஆடி நிறுவனம் மூன்று கார்களை காட்சிப்படுத்தும்