புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.
போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
-
போர்ஷே 911 கரேரா காரின் விலை ரூ.1.99 கோடியில் தொடங்குகிறது.
-
போர்ஷே 911 கரேரா 4 GTS விலை ரூ.2.75 கோடியில் இருந்து தொடங்குகிறது.
-
இரண்டு மாடல்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது
-
இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
கரேரா 4 GTS ஒரு புதிய T-ஹைப்ரிட் பவர்டிரெய்னை கொண்டுள்ளது. அதே நேரத்தில் கரேரா முற்றிலும் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3-லிட்டர் பாக்ஸர் இன்ஜினை பெறுகிறது.
போர்ஸ் இந்தியா நிறுவனம் 911 கரேரா மற்றும் 911 கரேரா 4 GTS ஆகிய கார்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இவை சமீபத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. போர்ஷே 911 கரேரா விலை ரூ. 1.99 கோடியில் தொடங்குகிறது. அதே சமயம் GTS மாடல் விலை ரூ.2.75 கோடியில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், இந்தியா). இரண்டு மாடல்களுக்கும் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த கார்களுக்கான டெலிவரிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்.
விலை
மாடல்களின் விலை விவரங்கள் இங்கே:
மாடல் |
போர்ஸ் 911 கரேரா |
போர்ஷே 911 கரேரா 4 GTS |
விலை |
ரூ.1.99 கோடி |
ரூ.2.75 கோடி |
விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா
ஃபேஸ்லிப்ட்க்கு முந்தைய விலைகளுடன் ஒப்பிடும் போது 911 கரேரா காரின் விலை ரூ. 13 லட்சம் அதிகரித்துள்ளது. மேலும் 911 கரேரா 4 GTS இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாமல் இருந்தது.
பவர்டிரெய்ன்
போர்ஷே 911 கரேரா 4 GTS ஆனது புதிதாக உருவாக்கப்பட்ட 3.6-லிட்டர் ஆறு-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பாக்ஸர் இன்ஜின், டர்போசார்ஜரை விரைவாக பூஸ்ட் செய்ய அனுமதிக்கும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கூடுதல் செயல்திறனுக்காக 8-ஸ்பீடு டூயல்-கிளட்ச் PDK டிரான்ஸ்மிஷனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மோட்டார் உடன் வருகிறது. இது 541 PS மற்றும் 610 Nm என்ற மொத்த அவுட்புட்டை உருவாக்குகிறது.
மறுபுறம் 911 கரேரா அதன் 3-லிட்டர் ட்வின்-டர்போ பாக்ஸர் இன்ஜினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது முற்றிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது 394 PS மற்றும் 450 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
அதே போன்ற வெளிப்புறம்
இந்த புதிய போர்ஷே கார்களும் ஒட்டுமொத்த தோற்றத்தை பெரும்பாலும் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளன. கூடுதலாக முன் மற்றும் பின்புறத்தில் நுட்பமான டிஸைன் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் இப்போது புதிய LED மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள் உள்ளன. GTS ஆனது லார்ஜர் லோவர் ஏர் இன்டேக்குகள் , 10 ஆக்டிவ் ஏர் காற்று ஃபிளாப்ஸ் மற்றும் லைசென்ஸ் பிளேட்டின் கீழ் மாற்றப்பட்டுள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பின்புறத்தில் ஒரு புதிய லைட் பார் நேர்த்தியான டெயில் லேம்ப் வடிவமைப்பை அதன் மேலே உள்ள போர்ஸ் பேட்ஜிங்குடன் இணைக்கிறது. இது ஒரு புதிய கிரில் மற்றும் அட்ஜஸ்ட்டபிள் ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறுகிறது. 911 கரேரா 4 GTS ஆனது ஸ்டாண்டர்டான ஸ்போர்ட்டி எக்சாஸ்ட் அமைப்பையும் கொண்டுள்ளது.
புதிய உட்புறங்கள்
உள்ளே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இப்போது 12.6-இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளேவுடன் முழுவதுமாக டிஜிட்டல் ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 10.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதுப்பிக்கப்பட்ட கண்ட்ரோல் யூனிட்டையும் கொண்டுள்ளது. இது டிரைவ் மோடுகள் மற்றும் அமைப்புகளை எளிதாக அணுக அனுமதிக்கிறது. இந்த காரில் 15W வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஹை-பவர் USB-C PD போர்ட்கள் மற்றும் ஸ்டாண்டர்டன கரேராவுக்கான ஸ்டீயரிங் வீலில் டிரைவ் மோட் சுவிட்ச் ஆகியவை அடங்கும். GTS ஆனது இருக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள GTS பேட்ஜ்கள் மற்றும் GTS-ஸ்பெசிஃபிக் எலமென்ட்களுடன் ஆல்-பிளாக் இன்ட்டீரியரையும் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
போர்ஷே 911 காரின் ரேஞ்சில் அதிக பவர் உடன் இதனுடன் போட்டியிடும் மாடல்களாக ஃபெராரி 296 GTB மற்றும் மெக்லாரன் அர்துரா ஆகியவை இருக்கும்.
மேலும் படிக்க: 911 ஆட்டோமெட்டிக்