இன்டீரியரில் மிரள வைக்கும் டெக் அப்டேட்டுடன் வரப்போகும் புதிய ஜென் மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ். செல்ஃபி கேமராவும் உண்டு
published on பிப்ர வரி 24, 2023 07:22 pm by shreyash for மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2021-2024
- 70 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிதாக வரவிருக்கும் இ-கிளாஸுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் வரும் ஏப்ரல் மாதத்தில் அதன் அடுத்த தலைமுறை இ-கிளாஸ் காரை உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, ஜெர்மன் கார் உற்பத்தியாளரான இந்த நிறுவனம் காரில் இடம்பெறப்போகும் புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இது புதிய இ-கிளாஸ் உடன் சில சுவாரஸ்யமான அம்சங்களையும் வழங்குகிறது.
இந்த காரில் பெரிய டிஸ்பிளேவுடன் கூடிய MBUX ( Mercedes-Benz User Experience ) -தான் முக்கியமான அம்சமாக இருக்கப்போகிறது. ஓரு ஒரு முழுமையாக ஒன்றை கண்ணாடி-யை பயன்படுத்தியுள்ள இந்த டிஸ்பிளேவானது அருகில் இருக்கும் பயணிகள் பக்கம் வரை நீள்கிறது. இது மட்டுமின்றி எங்கள் கவனத்தை ஈர்த்த புதிய இ-கிளாஸில் இருக்கும் சில சுவாரஸ்யமான அம்சங்களின் விரைவான கண்ணோட்டம் இதோ:
வீடியோ அழைப்புகளுக்கான செல்ஃபி கேமரா
நீங்கள் புதிய இ-கிளாஸ் காருக்குள் இருந்தால், வீடியோ கான்ஃபெரென்ஸில் பங்கேற்க உங்கள் லேப்டாப் தேவைப்படாது. சூப்பர் ஸ்கிரீனின் டாஷ்போர்டின் மேல் உள்நோக்கி ஒரு கேமரா வைக்கப்பட்டுள்ளது. ஜூம் அல்லது வெபெக்ஸ் பயன்பாடுகள் மூலம் வீடியோ சந்திப்புகளில் பங்கேற்க இதைப் பயன்படுத்தலாம். கேபின்களுக்குளே செல்ஃபிகளை எடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக காரை ஓட்டும்போது இந்த கேமராவைப் பயன்படுத்த முடியாது.
மேலும் படிக்க: உங்கள் மாருதி ஜிம்னியை மினி ஜி-வேகனாக மாற்றுவதற்கான சிறந்த 5 கிட்டுகள் இவை
சவுண்ட் விசுவலைசேஷன்
காட்சிப்படுத்தல் செயல்பாட்டில் இயங்கும் புதிய இ-கிளாஸ் இண்டீரியருக்குள் மாற்றமடையும் ஆம்பியண்ட் மூட் லைடிங் மூலமாக அருமையான உணர்வை கொடுக்கிறது . இன்ஸ்ட்ருமெண்ட் பேனலின் மேல் மற்றும் டோர் பேனல்களின் முன்புறமும் இசைக்கேற்ப ஒளியை ஒளிரச்செய்யும் வகையிலான சவுண்ட் விசுவலைசேஷனை வழங்க ஒரு ஆக்டிவ் லைட் ஸ்ட்ரிப் வைக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, வேகமான இசை விரைவான ஒளி மாற்றங்களை ஏற்படுத்தும், அதே நேரத்தில் மெதுவான இசை ஒன்றிணைக்கும் லேசான மனநிலையை உருவாக்கலாம்.
மெர்சிடிஸ் வழங்கக்கூடிய இந்த வசதியானது தொழிற்துறையில் சிறந்த ஆம்பியண்ட் லைடிங் சிஸ்டம்களில் ஒன்றாக இருப்பதால், இது கார்களின் நாம் பார்க்கக்கூடிய சிறந்த ஒலி தொடர்பான லைடிங் அம்சமாக இருக்கக்கூடும். இது இ-கிளாஸின் பர்மெஸ்டர் 4டி சரவுண்ட் சவுண்ட் மற்றும் சீட் பேக்ரெஸ்ட்களில் பொருத்தப்பட்ட சவுண்ட் டிரான்ஸ்யூசர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
மோஷன் சிக்னெஸ் தடுப்பு
புதிய இ-கிளாஸ் மோஷன் சிக்னெஸ்ஸை தடுக்க உதவும் 'எனர்ஜைசிங் கம்ஃபர்ட்' செயல்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. காரின் சீட்டில் இருப்பவர் சற்று அசௌகரியத்தை உணரும்போது , அவரை இருக்கையை சாய்ந்து கொள்ளும்படி கேட்கிறது, குஷனிங்கை சரிசெய்து, பயணிகளின் மனநிலையை மாற்றும் வகையில் நறுமணம் கலந்த புதிய காற்றை வழங்குகிறது.
இவை தொழில்நுட்பம் நிறைந்த புதிய தலைமுறை இ-கிளாஸின் சில சிறந்த அம்சங்கள் மட்டுமே. வரவிருக்கும் மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னதாக அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் அதன் முதல் உலகளாவிய அறிமுகத்தைத் தொடர்ந்து, புதிய இ-கிளாஸ் காரானது கூடிய விரைவிலேயே அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகம் விற்பனையாகும் மெர்சிடிஸ் மாடல் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6 மற்றும் வோல்வோ எஸ்90ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இது போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் டீசல்
0 out of 0 found this helpful