MY25 அப்டேட்டுடன் MG Astor-இன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் விற்பனை நிறுத்தப்பட்டது!
எம்ஜி ஆஸ்டர் க்காக பிப்ரவரி 10, 2025 08:25 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 1 View
- ஒரு கருத்தை எழுதுக
MG ஆஸ்டர் ஆனது ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ ஆகிய ஐந்து வேரியன்ட்களில் தற்போது கிடைக்கிறது. மேலும் இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
MG ஆஸ்டர் சமீபத்தில் அதன் MY 2025 (மாடல் ஆண்டு 2025) அப்டேட்டைப் பெற்றது, சில வேரியன்ட்களின் விலை ரூ.38,000 வரை உயர்த்தப்பட்டன. அதே சமயம் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்டின் விலை குறைந்துள்ளது. கூடுதலாக, 140 PS மற்றும் 220 Nm-ஐ வழங்கிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் நிறுத்தப்படுவதைக் கார் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 MG ஆஸ்டரின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
MG ஆஸ்டர் அதன் 2025 அப்டேட்டுடன் இப்போது, 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது, அதன் விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
110 PS |
டார்க் |
144 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீட் MT, CVT* |
*CVT = கன்டின்யுயஸ்லி வேரியபிள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
முன்னர்க் குறிப்பிட்டது போல, டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு 140 PS மற்றும் 220 Nm-ஐ உருவாக்கிய அந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜனவரி 2025-இல் Hyundai Creta-வின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது
2025 MG ஆஸ்டரின் பிற அப்டேட்கள்
பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களான ஸ்பிரிண்ட் மற்றும் டாப்-எண்ட் சாவி புரோவின் விலைகள் மாறாமல் இருந்த போதிலும், வேறு சில வேரியன்ட்களின் விலை ரூ.38,000 வரை உயர்ந்துள்ளது.
கூடுதலாக, ரூ.12.48 லட்சம் விலையில் உள்ள லோவர்-ஸ்பெக் ஷைன் வேரியன்டில் பனோரமிக் சன்ரூஃப் அம்சம் உள்ளதால், இப்போது அது எளிதாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது. மேலும், ரூ.13.82 லட்சம் முதல் ரூ.14.85 லட்சம் விலையில் உள்ள மிட்-ஸ்பெக் செலக்ட் வேரியன்டில் இப்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. முன்பு, இந்த இரண்டு வசதிகளும் டாப்-ஸ்பெக் சாவி புரோ வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
2025 MG ஆஸ்டரின் பிற அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
2025 MG ஆஸ்டரில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 6-வே அட்ஜஸ்டபிள் டிரைவரின் சீட்டுடன் காற்றோட்டமான முன் சீட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இதன் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை 2025 MG ஆஸ்டரில் 6 ஏர்பேக்குகள், வெளிப்புற ரியர்வியூ மிரர்கள் (ORVM-கள்), பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்டுடன் கூடிய 360-டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்றவற்றுடன் வருகிறது. கூடுதலாக, இதில் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் அடங்கும்.
2025 MG ஆஸ்டரின் விலை மற்றும் போட்டியாளர்கள்
2025 MG ஆஸ்டரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.17.56 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் போன்ற பிற சிறிய ரக எஸ்யூவி-களுடன் போட்டியிடுகிறது.
ஆஸ்டரின் டர்போ-பெட்ரோல் இன்ஜின் நிறுத்தப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கீழே உள்ள கமெண்ட்ஸ் பிரிவில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.