மெக்ஸிகோ, வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது $8.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது .

published on பிப்ரவரி 16, 2016 02:36 pm by sumit

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

எமிஷன் மோசடி  சம்மந்தமான சிக்கல்கள் ஓரளவுக்கு தீர்ந்து விட்டதாக எண்ணி வோல்க்ஸ்வேகன்  நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் 
 இந்த எமிஷன் மோசடிக்காக மெக்ஸிகோ அரசாங்கம் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது $8.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து அவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். 

இந்த அபராதமானது ,  எமிஷன் மற்றும் ஒலி சம்மந்தமான விஷயங்களில்    முறையான ஒப்புதல் பெறப்படாமல் 45,000   வாகனங்களை விற்பனை செய்ததன் காரணமாக வோல்க்ஸ்வேகன் மீது விதிக்கப்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டின் அனைத்து மாடல்கள் மற்றும் வோல்க்ஸ்வேகன் , ஆடி , சியட் போர்ஷ் மற்றும் பென்ட்லி உள்ளிட்ட ப்ரேன்ட்டுகள் இதில் அடங்கும்.  சுற்றுசூழல் பாதுகாப்பு  சம்மந்தமான நடவடிக்கைகளுக்கு  பொறுப்பான  துறை இந்த அபராதத்தை விதித்துள்ளது. 

எமிஷன் சோதனையை ஏமாற்றிவிடும் விதத்தில் பொருத்தப்பட்டிருந்த குறைபாடுள்ள கருவிகள் இந்நிறுவனத்தின் கார்களில்  பொருத்தப்பட்டிருப்பது  கண்பிடிக்கப்பட்டதால்  வோல்க்ஸ்வேகன் நிறுவனம் வாகன உலகில் இதுவரை கண்டிராத  மிகப்பெரிய மோசடி குற்றச்சாட்டில் சிக்கியது . இந்த மோசடியை முதலில் அமெரிக்க மாணவர் குழு ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.   அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகமாக  மாசுபடுத்தும் துகள்களை இந்த வாகனங்கள் வெளியிடுவது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. . இதன் காரணமாக அமெரிக்காவில்  இந்நிறுவனத்தின் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டு விசாரணையில் உள்ளன.  வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மேல்மட்ட நிர்வாகம் ,  குறைபாடுள்ள கருவி தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டிருப்பது  தங்களுக்கு தெரியாமல் நடந்ததாக வாதிடுகிறது. இது இப்படி இருக்கையில் ,  இந்நிறுவனத்தின் முன்னாள் CEO திரு. மார்டின் விண்டர்கர்னிடம் இந்த விஷயம் 2014 ஆம் ஆண்டே தெரிவிக்கப்பட்டு விட்டதாக ஒரு வதந்தி கிளம்பி உள்ளது.  இந்த விஷயம் நிரூபிக்கப்பட்டால் வோல்க்ஸ்வேகன் மீது $20  பில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. .

இந்தியாவில்  எமிஷன் சம்மந்தான விதிமுறைகள்  அந்தளவுக்கு கெடுபிடியாக இல்லை என்பதால் இங்கே இந்த மோசடி குறித்து எந்த வித பெரிய அளவிலான சலசலப்புக்கள் ஏற்படவில்லை.  மேலும், வோல்ஸ்வேகன் நிறுவனமும்  இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருவதில் நல்ல வேகம் காட்டுகிறது. . இந்த பிரச்சனை முதலில்  வெடித்த போது   அந்த மாதத்தில்  15% விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே விற்பனை வீழ்ச்சியை  வெறும் 2% என்ற அளவுக்கு குறைத்து விட்டது.  அதுமட்டுமின்றி , கடந்த ஜனவரியில் இந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை 3.7 % உயர்ந்துள்ளது. 

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience