ஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்
published on ஆகஸ்ட் 26, 2015 09:37 am by அபிஜித் for மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 2012-2021
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக் கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கிளாஸிக் எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்டின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்-கிராஸ் கவுப்-பை அடிப்படையாக கொண்ட இந்த கார், “உலகின் மிகவும் இதமளிக்கக் கூடிய மற்றும் மாற்றத்தகுந்தது” என்று தயாரிப்பாளர் தரப்பில் வர்ணிக்கப்பட்டுள்ளது. மற்ற மெர்சிடிஸ் கார்களைப் போலவே, இதிலும் தோல், மரம் மற்றும் தரமான உலோக மேலோட்டங்களைக் கொண்டு, உட்புறம் மற்றும் வெளிபுற அமைப்புகள் அலங்கரிக்கப்பட்டு, வழக்கமான எஸ்-கிளாஸை போல காட்சியளிக்கிறது. மேலும், சிறப்பான சீட்கள், ஆம்ரெஸ்ட்கள், இதனுடன் கலைத் தன்மையின் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கும் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவற்றையும் உட்கொண்டுள்ளது. அதிகபடியான காற்றை எதிர்கொள்ளும் வகையில், மாற்றக்கூடிய மேற்கூரை கீழே இறக்கப்பட்டு, அதற்கு ஒரு ஏர்கேப் ஆட்டோமெட்டிக் விண்டு ப்ரோடெக்ஷன் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
இது குறித்து டையிம்லர் ஏஜி-களின் மன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.ஓலா கேலினியஸ் கூறுகையில், “தனிப்பட்ட மற்றும் கால நிர்ணயமற்ற பிரத்தியேகமான பயணங்களுக்கான எங்களின் விருப்ப சின்னமாக புதிய எஸ்-கிளாஸ் கேப்ரியோலேட் அமைகிறது. இதை எங்களின் வாடியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறோம். 44 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு திறந்த வகையை சேர்ந்த எஸ்-கிளாஸ் வாகனத்தை எங்கள் நிறுவனத்தின் நண்பர்களுக்கு மீண்டும் அளிக்க போகிறோம்” என்றார்.
இந்த காரில் வழக்கமான எஸ்-கிளாஸ் கவுப் கொண்டுள்ள மோட்டாரான 4.7-லிட்டர் V8 பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்ச ஆற்றலாக 453 bhp மற்றும் 700Nm என்ற அதிகளவிலான முடுக்குவிசையும் பெற முடியும். இதற்கு ட்வின் டர்போக்கள் உதவும்.
இந்த கார் IAA ஃபிராங்பேர்ட் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பல வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் பெரும்பாலும் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் இந்தியன் ஆட்டோ எஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful