ரூ.1.32 கோடி விலையில் இந்தியாவில் Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
modified on ஜனவரி 08, 2024 06:12 pm by ansh for மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்
- 202 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய GLS -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இது GLS 450 மற்றும் GLS 450d என இரண்டு டிரிம்களில் கிடைக்கும்.
-
இதன் விலை ரூ.1.32 கோடி முதல் ரூ.1.37 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கின்றது.
-
புதிய கிரில், புதிய வடிவிலான பம்பர் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்
-
கேபின் ஓரளவுக்கு ஒரே மாதிரியாக உள்ளது, ஆனால் அது இப்போது புதிய டிரிம்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களை பெறுகிறது.
-
9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இரண்டையும் பெறுகிறது.
Mercedes-Benz GLS ஃபேஸ்லிஃப்ட் கடந்த ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்ட பின்னர் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் சொகுசு எஸ்யூவி மெர்சிடிஸ்-பென்ஸ் அதன் வெளிப்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள், கேபினில் சிறிய அப்டேட்கள், டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே GLS எஸ்யூவி -யின் விலையில் தொடங்கி அதன் அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.
விலை
எக்ஸ்-ஷோரூம் விலை |
|
GLS 450 |
ரூ.1.32 கோடி |
GLS 450d |
ரூ.1.37 கோடி |
மெர்சிடிஸ்-பென்ஸ் சில காலத்திற்கு முன்பு GLS 450 வேரியன்ட் எஸ்யூவி -யை விற்பனையில் இருந்து நிறுத்தியது, ஆனால் அது இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. நிறுத்தப்பட்ட பதிப்போடு ஒப்பிடும்போது, 2024 GLS விலை ரூ.4 லட்சம் அதிகம்.
வடிவமைப்பு
இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், GLS ஆனது இப்போது சற்று கூடுதலான மேக்கோ வடிவமைப்பை கொண்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்த காரில் முன்பக்க கிரில்லை மாற்றியமைத்துள்ளது. அது இப்போது 4 செங்குத்தான வடிவமுடைய ஸ்லேட்டுகளுடன் வருகிறது. மேலும் முன்பக்க பம்பர் - புதிய வடிவிலான ஏர் டேம்களையும் கொண்டுள்ளது.. இந்த அப்டேட்கள் இப்போது முன்பை விட கூடுதலான சாலை தோற்றத்தை கொடுக்கின்றன.
மேலும் படிக்க: Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
அலாய் வீல்கள் அப்டேட் செய்யப்பட்டு, பின்புறத்தில், GLS இப்போது புதிய வடிவிலான பம்பர் மற்றும் சற்று மாற்றியமைக்கப்பட்ட LED டெயில் லைட்களை கொண்டுள்ளது.
உட்புறம்
கேபினின் வடிவமைப்பு மாறாமல் உள்ளது மற்றும் டாஷ்போர்டு தளவமைப்பு நிறுத்தப்படவுள்ள GLS காரை போலவே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. டேஷ்போர்டு மற்றும் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய டிரிம்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி கலர் ஆப்ஷன்களை சேர்த்துள்ளது, மேலும் ஆஃப்-ரோடு மோடில் இப்போது புதிய கிராபிக்ஸ், லேட்டரல் இன்கிளைனேஷன், காம்பஸ் மற்றும் ஸ்டீயரிங் ஆங்கிள் ரீட்அவுட்ஸ் ஆகியவை உள்ளன.
புதிய அம்சங்கள்
2024 GLS டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேவை பெறுகிறது (MBUX இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே). கூடுதலாக, இது 5-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 13-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், பவர்டு டெயில்கேட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, சொகுசு எஸ்யூவி ஆனது 9 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமரா, 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் போன்ற ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
வேரியன்ட் |
GLS 450 |
GLS 450d |
இன்ஜின் |
3-லிட்டர் 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் |
3 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் |
டிரான்ஸ்மிஷன் |
9-ஸ்பீடு AT |
9-ஸ்பீடு AT |
பவர் |
381 PS |
367 பிஎஸ் |
டார்க் |
500 Nm |
750 Nm |
டிரைவ்டிரெய்ன் |
AWD |
AWD |
அப்டேட் செய்யப்பட்ட GLS ஆனது 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. இந்த இன்ஜின்கள் மைல்டு-ஹைபிரிட் உதவியுடன் வருகின்றன மற்றும் ஆல்-வீல்-டிரைவ் அமைப்பில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் 20 PS மற்றும் 200 Nm வரை இன்ஜின் அவுட்புட்டை கொடுக்கின்றது..
போட்டியாளர்கள்
இந்த காரின் விலை ரூ.1.32 கோடி முதல் ரூ.1.37 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். BMW X7 மற்றும் ஆடி Q8 ஆகிய கார்களுடன் 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLS போட்டியிடும்.
மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் GLS டீசல்