ஜெனீவா ஆட்டோ ஷோவில் வெளிவரும் C-கிளாஸ் கேப்ரியோலே காரின் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது
published on பிப்ரவரி 16, 2016 03:04 pm by nabeel for மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் 1997-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
மெர்சிடிஸ் பென்ஸ், அடுத்து வெளிவரவுள்ள C-கிளாஸ் கேப்ரியோலே காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு, வாகன துறையின் அடுத்த மாபெரும் நிகழ்ச்சியான ஜெனீவா மோட்டார் கண்காட்சி, 2016 மார்ச் -1 ஆம் தேதியில் ஆரம்பமாகிறது. ஏராளமான கார் தயாரிப்பாளர்கள் தங்களது புதிய மாடல்களை ஜெனீவா ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளனர், அவற்றில் இந்த ஜெர்மானிய வாகன தயாரிப்பாளரும் விதி விலக்கல்ல. பிரிமியம் செடான் வகையைச் சார்ந்த கார்களில், ரூஃப் இல்லாமல் அறிமுகமாகும் முதல் கார் என்ற பெருமையை மெர்சிடிஸின் C கிளாஸ் கேப்ரியோலே தட்டிச் செல்கிறது.
C – கிளாஸ் கூபே மாடலின் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார், கம்பீரம், அளவு மற்றும் தோற்றத்திலும் எந்த வித மாற்றமும் இன்றி வருகிறது. C – கிளாஸ் கேப்ரியோலே மாடலின் எடையை குறைப்பதற்காக, இதன் விதானம் துணியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், துணியினால் ஆன இந்த ரூஃப் பகுதியை அழகாக மடித்து பூட் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். எனவே, காரின் உள்ளே இட வசதிக்கும் குறைவிருக்காது. அது மட்டுமல்ல, இந்த கூபே கார், மெர்சிடிஸ் பென்ஸின் AIRSCARF நெக் – லெவல் ஹீட்டிங் மற்றும் AIRCAP ஏர் – டெப்லெக்ஸன் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் வருகிறது. கேப்ரியோலே மாடலின் உட்புறத்தில், 3 – டோர் C – கிளாஸ் மாடலில் இருப்பது போலவே அலங்கரிக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிக்கு, எலக்ட்ரோ – நுமாட்டிக் என்ற இடுப்புக்கு இதம் தரும் வசதி மற்றும் இருக்கைகளில் உள்ள குஷனின் டெப்தை 6 செ.மீ அளவு வரை மேனுவலாக மாற்றக்கூடிய வசதி ஆகிவை அடங்கிய சொகுசான சீட் பேக்கேஜ்; கியர்ஷிஃப்ட் பேடிலுடன் (ஆட்டோ ட்ரான்ஸ்மிஷனில் மட்டும்) இணைந்த கருப்பு நிற 3 – ஸ்போக் மல்டி – ஃபங்சன் ஸ்டியரிங் வீல்; வெதுவெதுப்பான முன்புற இருக்கைகள்; மற்றும் மல்டி – டச் கண்ட்ரோலுடன் கூடிய டச்பேடு ஆகியவை, இந்த காரின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாகும்.
மெர்சிடிஸ் பென்ஸின் C கிளாஸ் கேப்ரியோலே காரில் பொருத்தப்பட்டுள்ள இஞ்ஜின்கள் கூட கூபே மாடலில் உள்ள 160/200 bhp என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்யும் 2143 cc 4 – சிலிண்டர் டீசல் இஞ்ஜின்; மற்றும் 180 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்யும் 1991 cc 4 – சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஆகியவை பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை, 6 – ஸ்பீட் மேனுவல் அமைப்பு அனைத்து மாடல்களிலும் வரும். எனினும், 9G – TRONIC PLUS 9 ஸ்பீட் ஆட்டோமாட்டிக் ட்ரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷனில் வரலாம் என்று தெரிகிறது. மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் பென்ஸின் அரங்கத்தில் இந்த கார் பிரதானமாகக் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், இது ஆடியின் A4 மாடல் காருக்கு போட்டியாக வாகன சந்தையில் வலம் வரும் என்று தெரிகிறது.
இதையும் படிக்கவும் : போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்
0 out of 0 found this helpful