இந்தியாவில் அறிமுகமானது Maserati Grecale லக்ஸரி எஸ்யூவி, விலை ரூ.1.31 கோடியாக நிர்ணயம்
published on ஜூலை 30, 2024 06:55 pm by dipan for மாசிராட்டி grecale
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் எதிர்காலத்தில் ஆல்-எலக்ட்ரிக் கிரேகேல் ஃபோல்கோர் கார் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் மஸராட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
-
மஸராட்டி கிரேகேல் இந்தியாவில் GT, மோடெனா மற்றும் டிரோஃபியோ டிரிம்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.31 கோடியில் இருந்து ரூ.2.05 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
இது கம்பீரமான தோற்றத்துடன் ஸ்டிரைக்கிங் கிரில், LED ஹெட்லைட்ஸ், பூமராங்-வடிவ LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது.
-
உட்புறத்தில் மல்டிபிள் டிஸ்பிளேஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.
-
பாதுகாப்புக்காக மல்டிபிள் ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
: 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (330 PS அவுட்புட் வரை இரண்டு ட்யூன்களில்) மற்றும் 3-லிட்டர் V6 (530 PS) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
மஸராட்டி கிரேகேல் SUV பிராண்டின் என்ட்ரி லெவல் எஸ்யூவி -யாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது இந்தியாவில் லெவண்டே காருக்கு கீழே விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது மூன்று வித்தியாசமான டிரிம்களில் வழங்கப்படுகிறது: GT, மோடெனா மற்றும் ஹை பெர்ஃபாமன்ஸ் கொண்ட கொண்ட டிரோஃபியோ. கூடுதலாக எதிர்காலத்தில் இந்திய சந்தையில் ஆல் எலக்ட்ரிக் பதிப்பான கிரேகேல் ஃபோல்கோரும் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மஸராட்டி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிரேகேல் காரின் விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
விலை |
கிரேகேல் GT |
ரூ.1.31 கோடி |
கிரேகேல் மோடெனா |
ரூ.1.53 கோடி |
கிரேகேல் டிராபி |
ரூ.2.05 கோடி |
விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா
மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி -யில் என்ன கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்:
வெளிப்புறம்
மஸராட்டி கிரேகேல் பெரிய லெவண்டேவை எதிரொலிக்கும் வடிவமைப்புடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறது. இது வெர்டிகல் ஸ்லேட்டுகளுடன் கூடிய ஸ்ட்ரைக்கிங் செய்யும் முன் கிரில் மற்றும் மையத்தில் ட்ரைடென்ட் லோகோவை கொண்டுள்ளது. ஹெட்லைட்கள் நேர்த்தியானவை, நேர்த்தியான L- வடிவ LED DRLகளும் உள்ளன.
பக்கவாட்டில் டிரிம்-குறிப்பிட்ட பேட்ஜ்களுடன் கூடிய மூன்று ஏர் வென்ட்கள் முன் கால் பேனலில் உள்ளன. அதே சமயம் பின்புற கால் பேனல் ட்ரைடென்ட் லோகோவை பெருமையுடன் காட்டுகிறது. GT மாடலில் 19-இன்ச் சக்கரங்களும், மோடெனா 20-இன்ச் சக்கரங்களையும், டிரோஃபியோ 21-இன்ச் அலாய்களையும் கொண்டுள்ளது.
பின்புறத்தில், கிரேகேல் ஆனது பூமராங் வடிவ LED டெயில்லைட்களை கொண்டுள்ளது. இது எஸ்யூவிக்கு க்கு கர்வியான தோற்றத்தைத் தருகிறது. ட்வின்-டிப் எக்ஸாஸ்ட் ஸ்போர்ட்டி ஆடம்பர தோற்றத்தை கொடுக்கிறது.
இந்த எஸ்யூவியின் அளவுகள் :
அளவுகள் |
GT |
மோடெனா |
டிரோஃபியோ |
நீளம் |
4,846 மி.மீ |
4,847 மி.மீ |
4,859 மி.மீ |
அகலம் (ORVM -கள் உட்பட) |
2,163 மி.மீ |
2,163 மி.மீ |
2,163 மி.மீ |
உயரம் |
1,670 மி.மீ |
1,667 மி.மீ |
1,659 மி.மீ |
வீல்பேஸ் |
2,901 மி.மீ |
2,901 மி.மீ |
2,901 மி.மீ |
மேலும் பார்க்க: பார்க்க: டாடா கர்வ்வ், ஐடியாவிலிருந்து தயாரிப்பு வரை - எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே பார்க்கலாம்.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மஸராட்டி கிரேகேல் ஒரு ஆடம்பரமான உட்புறத்தை கொண்டுள்ளது. இதில் ஆல் லெதர் அப்ஹோல்ஸ்டெரி அதிநவீன தோற்றத்தை காருக்கு கொடுக்கிறது. கேபின் ஓல்டு ஸ்கூல் நேர்த்தியுடன் அலுமினிய ஆக்ஸென்ட்கள், வுடன் டெக்ஸ்டர்டு விவரங்கள் மற்றும் ஏசி வென்ட்களுக்கு மேலே ஒரு அனலாக் கடிகாரம் ஆகியவற்றை ஒன்றாக கொடுக்கிறது. டிஜிட்டல் ஸ்கிரீன்கள் இன்ட்டீரியருக்கு நுட்பமான மற்றும் நவீன தோற்றத்தை சேர்க்கின்றன.
உள்ளே நீங்கள் மூன்று ஸ்கிரீன்களை பார்க்க முடியும்: 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் HVAC கன்ட்ரோல்களுக்கான் 8.8-இன்ச் ஸ்கிரீன். கூடுதல் வசதிகளில் கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), மெமரி ஃபங்ஷனுடன் பவர்டு சீட்கள், 21-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்ட்ம, ஒரு பனோரமிக் சன்ரூஃப், 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பின்புற பயணிகளுக்கான 6.5-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்காக கிரேகேல் காரில் பல ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்
பவர்டிரெய்ன்
மஸராட்டி கிரேகேல் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. கிரேகேல் மோடெனா ஆனது GT இன் அதே இன்ஜினைக் கொண்டுள்ளது. ஆனால் மேம்பட்ட செயல்திறனுக்காக ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
கிரேகேல் GT |
கிரேகேல் மோடெனா |
கிரேகேல் டிராபி |
இன்ஜின் |
2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
3 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
300 PS |
330 PS |
530 PS |
டார்க் |
450 Nm |
450 Nm |
620 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு ஏடி |
8-ஸ்பீடு ஏடி |
8-ஸ்பீடு ஏடி |
டிரைவ்டிரெய்ன் |
AWD |
AWD |
AWD |
மணிக்கு 0-100 கி.மீ |
5.6 வினாடிகள் |
5.3 வினாடிகள் |
3.8 வினாடிகள் |
உச்ச ஸ்பீடும் |
மணிக்கு 240 கி.மீ |
மணிக்கு 240 கி.மீ |
மணிக்கு 285 கி.மீ |
AWD = ஆல்-வீல் டிரைவ்
போட்டியாளர்கள்
மஸராட்டி கிரேகேல் ஆனது போர்ஷே மேகன் மற்றும் BMW X4 கார்களுடன் போட்டியிடும், மேலும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLE மற்றும் ஆடி Q5 ஆகிய ஆடம்பர எஸ்யூவி -களுக்கு ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக பிரீமியம் கொண்ட மாற்றாகவும் இருக்கும்.
மேலும் கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: கிரேகேல் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful