லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
published on ச ெப் 22, 2015 08:00 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பை தொடங்கப் போவதாக மெசராடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் அதன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய ஜீப் தொழில் நுட்பத்தை (ப்லேட்பார்ம்) கைவிட்டு க்யூபாங் கான்செப்ட் அடிப்படையில் இந்த SUV தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய வாகனம் முற்றிலும் மெசராடி நிறுவனதின் சொந்த தயாரிப்பாக இருக்கும் என்று அறியப்படுகிறது.
மசராட்டி நிறுவனத்தின் CEO ,திரு, ஹரோல்ட் வெஸ்டர் கூறுகையில் " 100 சதவிகிதம் குவாட்ரோபோர்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது மட்டுமின்றி இந்த புதிய வாகனத்தை முக்கிய தலைமை வாகனமாக கொண்டு தொடர்ச்சியாக பல வாகனங்களை வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் , “ கன்செப்டில் இருந்து அனைத்து விதத்திலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைப் பெற்று சிறப்பாக இந்த கார் வெளிவரும் ".
கடந்த இரண்டு வருடங்களில் மெசராட்டி நிறுவனம் தன்னுடைய விற்பனையை 600 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மசராட்டி நிறுவனத்தின் புதிய ஜீப்ளி மற்றும் குவாட்ரோபோர்ட் வாகனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லேவாண்டே கார்களை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் தன்னுடைய அல்பாய்ரி கான்செப்டை அடிப்படையாக கொண்டு மேலும் சில புதிய வாகனங்களை மசராட்டி நிறுவனம் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. அந்த வாகனங்கள் ஜாகுவார் F – டைப் வாகனங்களுடன் போட்டியிடும் என்றும் தெரிகிறது. 2017 ஆம் ஆண்டு அல்பாய்ரி கான்செப்டின் கேப்ரியோ வெர்ஷன் ஒன்றையும், 2018 ஆம் ஆண்டுக்ரான் டுரிஸ்மோ கார்களுக்கு சரியான மாற்று ஒன்றையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லேவாண்டே கார்களில் 350bhp மற்றும் 425bhp சக்தியை வெளியிடக்கூடிய டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது. மேலும் 560bhp சக்தியை வெளியிடக் கூடிய V8 என்ஜின் மற்றும் 250bhp முதல் 340bhp வரை சக்தியை வெளியிடக்கூடிய மூன்று டீசல் என்ஜின்கள் ஆகியவைகளும் பயன்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் பலமாக உள்ளன. அல்பாய்ரி கான்செப்ட் வாகனங்களைப் பொறுத்தவரை கூபே மற்றும் கேப்ரியோ கார்கள் V6 எஞ்சின்கள் மட்டுமே பொருத்தப்பட உள்ளது என்றாலும் அவைகள் 410bhp , 450bhp மற்றும் 520bhp என்று வெவ்வேறு அளவிலான சக்தியை வெளியிடக்கூடிய மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களில் வெளிவரும் என்று தெரிகிறது. இந்தியாவில் மசராட்டி நிறுவனத்தின் விதவிதமான அசத்தலான கார்களை பார்க்கும் போது இந்த செய்தி நமக்கு பெரிய ஆச்சரியத்தை தராது என்றே தோன்றுகிறது.
0 out of 0 found this helpful