டெல்லியில் ஒரு புதிய டீலர்ஷிப்பை பெற்று இந்தியாவிற்குள் மாசெராட்டி மீண்டும் நுழைகிறது
published on செப் 23, 2015 12:45 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
புது டெல்லியில் கிடைத்துள்ள ஒரு புதிய ஷோரூம் மூலம் இந்தியாவிற்குள் மாசெராட்டி மறுபிரவேசம் செய்துள்ளது. மதுரா ரோட்டில், நவீன தொழில்நுட்பமான 3S வசதி கொண்ட AMP சூப்பர்கார்ஸ் உடன் டீலர்ஷிப் வைத்து இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பாளரான இந்நிறுவனம், ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவுடன் (FCAI) இணைந்து செயலாற்றி, இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைய போவதாக, கடந்த ஆண்டே அறிவித்தது. இந்த பிராண்ட்டின் அடுத்த டீலர்ஷிப்கள், மும்மை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய பிராண்ட் ஷோரூமில் அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களான குவாட்ரோபோர்ட், கிப்லி, கிரான் டூரிஸ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்த 3S வசதி கொண்ட ஷோரூமில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகுள்ள சர்வீஸ் என்ற இரண்டு வசதிகளையும் கொண்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களின் எல்லாவிதமான கார் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். மேலும் இந்த ஷோரூமில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதியில், மாசெராட்டியின் வரலாறு குறித்த காட்சியகமும், வாடிக்கையாளருக்கு தனது காரை குறித்த எல்லா தகவல்களையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதியும் காணப்படுகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் பிரிவின் தலைவர் திரு.போஜன் ஜேன்கியூலவ்ஸ்கி கூறியதாவது, “எங்களின் முதல் டீலர்ஷிப்பை நாட்டின் தலைநகரில் அறிமுகம் செய்து, இந்தியாவில் எங்களின் வியாபார பயணம் ஆரம்பமாகி இருப்பதை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது. ஆடம்பர கார்களின் தொழில்துறையில் AMP சூப்பர்கார்ஸ், நிறுவப்பட்ட முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தற்போதைய சந்தையில் பிரத்யேகமான ஆடம்பர தயாரிப்புகளுக்கு மட்டும் அதிக வரவேற்பு கிடைப்பதில்லை. உலக தரம் வாய்ந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். AMP சூப்பர்கார்ஸின் தலைமையின் கீழான இந்த புதிய ஷோரூமின் மூலம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.
இந்த கூட்டணியை குறித்து கருத்து தெரிவித்த AMP சூப்பர்கார்ஸின் டீலர் முதல்வர் திரு.குர்மீட் ஆனந்த் கூறுகையில், “இந்தியாவின் முதல் மாசெராட்டி ஷோரூம், AMP சூப்பர்கார்ஸின் கீழ் அமைக்கப்பட்டிருப்பதை எண்ணி மிகவும் பெருமை அடைகிறோம். மாசெராட்டியின் மதிப்பு மிகுந்த ஆடம்பரம், சிறப்பம்சம் மற்றும் பிரத்யேக தன்மை ஆகியவற்றை எங்களின் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அளிக்க முடியும் என்று நம்புகிறோம். இந்த திரிசூல பிராண்ட் உடன் உறுதியான மற்றும் நீண்டகால உறவை எதிர்நோக்கி செயல்படுவோம்” என்றார்.
மாசெராட்டி நிறுவனம், தனது தயாரிப்பு வட்டத்திற்குள் பல புதிய தயாரிப்புகளை சேர்த்தும், புதிய சந்தைகளுக்குள் நுழைந்தும் கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆடம்பர காரான நிச்சி-யை சர்வதேச அளவில் 36,500 யூனிட்கள் விற்பனை செய்து, தனது ஷேர்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 out of 0 found this helpful