2015 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் மாருதி நிறுவனம் புதிய இக்னிஸை காட்சிப்படுத்தும்
published on அக்டோபர் 01, 2015 02:11 pm by அபிஜித்
- 21 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
கான்செப்ட் im -4 என்ற பெயரில் நன்கு பிரபலமான மாருதி சுசூக்கி இக்னிஸ் கார் வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த கார் கட்சிதமான க்ராஸ் ஓவர் பிரிவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாருதி நிறுவனத்தால் பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் அறிவிக்கப்பட்ட 15 கார்களில் ஒன்றான இந்த கார், இந்திய நாட்டிலும், உலகளவிலும் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது..
மாருதி சுசூக்கி இக்னிஸ் காரின் தயாரிப்பு தனிச்சிறப்புகளை பற்றி பேசும் போது, பெரும்பாலும் மாருதியின் im -4 என்ற கோட்பாட்டை ஒத்தே உள்ளது. வெளிவந்திருக்கும் குறிப்புகளை காணும்போது, பெரும்பான்மையான பகுதிகள் இந்த கருத்தை சார்ந்தே இருக்கிறது. கம்பீரமான உருவத்தைக் கொண்ட இந்த காரில், முன்புறத்தில் நன்கு பரந்து விரிந்த கிரில் வலையானது, DRL விளக்குகள் கொண்ட பிரதிப்பலிக்கும் முகப்பு விளக்குகளை சுற்றிலும், அதன் கீழ் புறமும் சூழ்ந்து நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் பொருத்தப்பட்டுள்ளது. சற்றே கீழ் புறத்தில் நம்பர் பிளேட் அமைந்துள்ளதால், குரோமிய அலங்காரத்துடன் கூடிய பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள முட்டுதாங்கியை, தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துக் காட்டுகிறது. இதன் பக்க தோற்றம், மாறுபட்ட வளைவுகளை கொண்ட அலாய் சக்கரங்களுடன் மிடுக்காக மிளிர்கிறது. இந்த காரின் A மற்றும் B பில்லர்கள் கருப்பு வண்ணத்தில், ஸ்விஃப்ட் மற்றும் பாலேனோ மாடல்களில் உள்ளது போலவே, அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்புறத்தில், இரட்டை வண்ண முகப்பு பெட்டி, அதனுடன் இணைந்த பெரிய தொடுதிரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பும் நேர்த்தியாக பொருத்தப்பட்டு, மாருதி நிறுவனத்தின் முற்போக்கான எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்துகின்றன. மேலும், பழமையான சலிப்பூட்டும் வடிவங்களான தற்போதைய மாருதி வரிசையில் உள்ள சியாஸ், ஸ்விஃப்ட் மற்றும் பல மாடல்களை போன்ற அமைப்பை போல அல்லாமல் வியத்தகு மாற்றத்துடன் இந்த காரை உருவாக்கும் நோக்கத்துடன், நவீன கட்டுப்பாடுகள் வரிசையில் குளிர் சாதனத்திற்கான பட்டன், மயக்கும் கலை அம்ஸத்துடன் கூடிய மைய கட்டுபாட்டு தொகுப்பு (சென்ட்ரல் கன்சோல்), மனதை கொள்ளை கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த ஓட்டுச்சக்கர (ஸ்டியரிங்) வடிவமைப்பு ஆகியன இந்த காரில் இணைக்கப் பட்டுள்ளன. தற்போது வெளியான இக்னிஸ் படங்களில், இதன் கணினிமய தொகுப்பின் படம் தெளிவாக இல்லை என்றாலும், வெளிவந்த சிறு துணுக்குகள் இந்த அமைப்பு அருமையாக இருக்கும் என்ற எண்ணத்தை தருகின்றன.
மாருதி சுசூக்கி இக்னிஸ் காரின் இஞ்ஜின் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை என்றாலும், அது 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தியே சர்வதேச அளவிலும் மற்றும் அது போலவே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று நாம் கருதுகிறோம். மேலும், ஸ்விஃப்ட் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் சியாஸ் மாடலின் 1.3 லிட்டர் SHVS மிதமான கலப்பின டீசல் இஞ்ஜின் போன்ற நல்ல தெரிவுகளும் இந்தியர்களுக்கு உள்ளன. இதன் அறிமுகம், நிறுவனத்தின் உற்பத்தி வேகத்தைப் பொருத்து, அடுத்த ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.