ஸ்விஃப்ட்டின் வரம்பிற்குட்பட்ட பதிப்பான ஸ்விஃப்ட் SP–யை அறிமுகப்படுத்துகிறது மாருதி
published on செப் 01, 2015 12:08 pm by konark
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் ஃபோர்டு நிறுவனம் புதிய ஃபிகோ ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தி, ஹேட்ச்பேக் பிரிவில் தொடர்ந்து நல்ல இடத்தை தக்கவைத்து கொள்ள முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மாருதி சுசுகியும் சிறப்பாக விற்பனையாகி வரும் ஸ்விஃப்ட் காரின் சிறப்பு பதிப்பான ஸ்விஃப்ட் SP-யை அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட பதிப்பான இது, LDi/LXi வகைகளை அடிப்படையாக கொண்டது. இதில் 4-ஸ்பீக்கர்களை ஒருங்கே பெற்ற ஆடியோ சிஸ்டம் உடன் ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள், சென்ட்ரல் லாக்கிங் உடன் கூடிய கீலஸ் என்ட்ரி, நான்கு பவர் விண்டோக்கள், 60:40 ரேர் சீட் ஸ்பிளிட், சீட் மற்றும் ஸ்டீயரிங் கவர்கள், ஃபேக் லெம்ப்கள், வீல் கவர்கள், பிளாக்டு அவுட் பில்லர்கள், பாடி கலர்டு ORVM-கள் மற்றும் பாடி சைடு மோல்டிங் ஆகிய கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்விஃப்ட் SP-யில் கூடுதல் அம்சங்கள் காணப்படுவதால், தற்போதைய மாடலை விட சற்று விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், இன்று வரை 2 மில்லியன் யூனிட்களுக்கு மேலாக இந்த காரை விற்பனை செய்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார், கடந்த 2011 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு புதுமையை அளிக்கும் வகையில் மாற்றம் கண்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மாற்றத்தை பெற்றது.
இயந்திரவியலை பொறுத்த வரை, காரில் எந்த மாற்றமும் இல்லை. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, VVT உடன் கூடிய 1197cc K-சீரிஸ் பெட்ரோல் யூனிட் அளிக்கும் 83 bhp ஆற்றல் மற்றும் மிகவும் பிரபலமான 1248 cc DDiS மல்டிஜெட் என்ஜின் அளிக்கும் 74 bhp ஆற்றல் ஆகியவற்றை கொண்டுள்ளதை அறியலாம்.